India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அணிக்கு 116 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே அணி. ZIMக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள IND அணி, 5 T20 போட்டிகளில் விளையாடுகிறது. ஹராரேவில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற IND, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ZIM வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக கிளைவ் 29 ரன்கள் எடுத்தார். IND அணி தரப்பில் ரவி பிஸ்னோய் 4, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
2024 MT1 என பெயரிடப்பட்ட விண்கல், மணிக்கு 65,215 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா எச்சரித்துள்ளது . தோராயமாக 260 அடி விட்டம் கொண்ட விண்கல், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட பெரியது. இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீ தொலைவில் ஜூலை 8ஆம் தேதி கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதன் பாதை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $1.71 பில்லியன் சரிந்து, $652 பில்லியனாக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தங்கத்தின் கையிருப்பை பொறுத்தமட்டில், $427 மில்லியன் குறைந்து, $56.53 பில்லியனாக சரிந்துள்ளது. சிறப்பு வரைதல் உரிமைகள் (SDR) $35 மில்லியன் சரிந்து, $18.01 பில்லியன் டாலராக உள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 7ஆம் தேதி வரலாற்று உச்சமாக $655.82 பில்லியன் இருந்தது.
பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் பாரம்பரிய தற்காப்பு கலைகளை சேர்க்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பரிந்துரைத்துள்ளார். ‘எண்ணி துணிக’ என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆசான்களை பாராட்டுவதாகத் தெரிவித்தார். மேலும், நாட்டின் பாரம்பரியக் கலைகளை உலகெங்கிலும் கொண்டு செல்லவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக, திமுக அரசு மீது நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ‘Resign_Stalin’ என்ற ஹேஷ்டேக்கும் X பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து படுகொலைகள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய சங்கீத விழா மும்பையில் நடைபெற்றது. இதில், டி20 உலகக்கோப்பையின் வெற்றி நாயகர்களான ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களை கவுரவிக்கும் விதமாக மூவரையும் மேடைக்கு அழைத்த அம்பானி குடும்பத்தினர் இந்திய அணியினரின் சாதனைகளை புகழ்ந்து பாராட்டினர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் ரயில்வே அமைச்சரான அவர், தனது வீட்டின் குளியலறையில் விழுந்து சுயநினைவை இழந்ததால், சில நாள்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 2017இல் பாஜகவில் சேர்ந்த முகுல் ராய், 2021இல் எம்எல்ஏ ஆனார். தேர்தலுக்கு பிறகு மீண்டும் அவர் TMCக்கு திரும்பினார்.
கையால் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உணவைத் தொட்டவுடன் அது சூடாக இருக்கிறதா? குளிர்ச்சியாக இருக்கிறதா? என்ற தகவலை மூளை உடனடியாக உணர்ந்து கொள்ளும். சாப்பிடப் போகிறோம் என்பதை உணர்ந்து, மூளை வயிற்றுக்கு தகவலை அனுப்பி செரிமானத்துக்கான வேலைகளை தூண்டி விடுகிறது. அதுமட்டுமல்லாமல், கையில் உள்ள சில நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு உதவுவதாக தெரிவிக்கின்றனர்.
ITR பிரிவு 80சி கீழ் அளிக்கப்படும் விலக்கு ₹1.5 லட்சம் என்ற வரம்பு பல ஆண்டுகளாக மாறாமல் உள்ளது. இதை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஈக்விட்டியில் நீண்ட கால முதலீட்டுக்கான வரியில் மாற்றம் வரலாம். சம்பளதாரர்களுக்கான வரி விலக்கு மதிப்பாய்வு செய்யப்படலாம். வீட்டுக் கடன் வட்டிக்கான வருமான கழிப்பு வரம்பு ₹2 லட்சத்தில் இருந்து உயர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்ட BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் உடலுக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இயக்குநர் மாரி செல்வராஜ் அஞ்சலி செலுத்தினர். நேற்று இரவு மர்மநபர்களால் கொல்லப்பட்ட அவரது உடல், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்று இருவரும் அஞ்சலி செலுத்தியதுடன், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
Sorry, no posts matched your criteria.