India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருகிறார்கள். முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி, 115 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் விக்கெட்டுக்கள் மலமலவென சரிந்து வருகிறது. 10 ஓவரில் இந்தியா 43/5 ரன்கள் எடுத்துள்ளது. அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ரன் எடுக்காமலும், கெய்க்வாட், ஜூரல், ரியான் பராக் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளில் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மே.வங்கம், தமிழ்நாடு, இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் இதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, மே.வங்கத்தில் 4 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 3 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து திரிணாமூல் காங்கிரஸுக்கு அணி மாறியதால் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
12 ஆண்டுகளுக்கு பிறகு குரு பகவானுடன், செவ்வாய் பகவான் சேர உள்ளார். இந்த குரு மங்கள யோகத்தால் வருகிற 12ஆம் தேதி முதல் ஆக.26ஆம் தேதி வரை மேஷ ராசியினருக்கு சுப பலன்களும், கன்னி ராசிக்கு வருமான உயர்வும், விருச்சிக ராசிக்கு பொருளாதார முன்னேற்றங்களும் ஏற்படும் யோகம் உள்ளது. தனுசு ராசியினருக்கு வீட்டில் சுபநிகழ்வுகளும், மீன ராசிக்கு திட்டமிட்ட பணிகள் நிறைவேறவும் வாய்ப்புள்ளது.
சென்னையில் கடந்த ஓராண்டில் மட்டும் 1,192 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல் ஆணையர் சந்தீப் தெரிவித்துள்ளார். BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணம் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் சரணடையவில்லை, கைது செய்யப்பட்டனர் என்றார். மேலும், இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுவதாகவும் கூறினார்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குருநானக் புகைப்படத்தை காண்பித்து கருத்து தெரிவித்ததற்கு, சீக்கிய மத அமைப்பான சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குருநானக்கின் படம் அபய முத்திரையை காட்டுகிறது என ராகுல் கூறியது முற்றிலும் தவறு என்றும், தெளிவில்லாமல் அரசியல் விவாதங்களில் தங்கள் கடவுளை பயன்படுத்தக் கூடாது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியிலிருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற விமானத்தில், 56 வயதான பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது, விமானத்தில் இருந்த மருத்துவர் குருட்டுகுளம், தனது ஸ்மார்ட்வாட்ச் மூலம் அந்த பெண்ணின் இதயத்துடிப்பு, ஆக்ஸிஜன் செறிவு ஆகியவற்றை கணக்கிட்டுள்ளார். ஆக்ஸிஜன் செறிவு குறைவாக இருப்பதை அறிந்த பின், விமானத்தின் மருத்துவப் பெட்டியில் இருந்த ஊசிகளை செலுத்தி அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.
வெகுமக்களை அணிதிரட்டி, நாட்டின் பிரச்னைகளைக் கண்டறிந்து, அவற்றை எதிர்கொள்ளவே அரசியல் கட்சி தேவைப்படுவதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்குப் பரிசு வழங்குவது அரசியல் கட்சியின் பெரும் செயல்பாடு கிடையாது எனக் கூறிய அவர், ஜாமென்ட்ரி பாக்ஸ் கொடுப்பதற்கு கட்சி அடையாளம் தேவையில்லை என்றும், தவெக தலைவர் விஜய்யை நேரடியாக விமர்சித்துள்ளார்.
BSP மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை, பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வெட்டிக்கொல்லப்பட்ட அவரது உடல், தற்போது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்ளது. இந்நிலையில், கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்ய, மாநகராட்சியிடம் மனு அளித்தும் அனுமதி கிடைக்காததால், ஐகோர்ட்டை நாடியுள்ளதாக BSP வழக்கறிஞர்கள் கூறியுள்ளனா்.
தமிழகம் சட்டம் ஒழுங்கு பிரச்னை இன்றி, அமைதி பூங்காவாக திகழ்ந்து வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்பு, திமுகவை தவிர வேறு எந்த டீமும் இருக்காது என்ற அவர், 2026 தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் இருப்பவர்கள் திமுகவில் இணைந்து விடும் அளவிற்கு சிறப்பான ஆட்சி நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கொலைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.