India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மேலும் மூவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் நேற்றிரவு அவர் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக, புளியந்தோப்பை சேர்ந்த விஜய், கோகுல், சக்தி ஆகியோர் தற்போது கைதாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஏற்கெனவே 8 பேர் கைதான நிலையில், ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலை பழிவாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎல் தொடரில் மதுரை அணி வெற்றி பெற 181 ரன்களை இலக்காக சேலம் அணி நிர்ணயித்துள்ளது. முதலில் ஆடிய சேலம், 20 ஓவரில் 180/7 ரன்கள் எடுத்தது. கவின் 70, விஷால் வைத்யா 56 ரன்கள் எடுத்தனர். மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.
சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று இரவு அவரை சுற்றிவளைத்த மர்ம நபர்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், இதுவரை 8 பேர் கைதாகியுள்ள நிலையில், அவர்களுக்கும் கொலைக்கு தொடர்பு கிடையாது என BSP நிர்வாகிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள அரசு மகளிர் ஐடிஐயில் நேரடி சேர்க்கை தொடங்கியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியடைந்தவர்கள், இடையில் நின்றவர்கள் ஜூலை 15க்குள் விண்ணப்பிக்கலாம். 1, 2 ஆண்டு பயிற்சி பெறுவோருக்கு விலையில்லா சைக்கிள், பாடப் புத்தகம், பஸ் பாஸ், மாதம் ₹750 உதவித் தொகை வழங்கப்படும். மேலும், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், கடந்த 3 மாதத்தில் 6 படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக விமர்சித்துள்ளார். கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் அலுவலகத்தில் அடக்கம் செய்ய அரசு அனுமதி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அணியை 13 ரன்களில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி புதிய வரலாறு படைத்துள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு மிகக் குறைந்த ரன்களை இலக்காக நிர்ணயித்து, அதனை வெற்றிகரமாக defent செய்த அணி என்ற பெருமையை ஜிம்பாப்வே அணி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக, நியூசி அணி 127, தென்னாப்பிரிக்கா 131 ரன்களை எடுத்து, இந்திய அணியை தோல்வி அடையை செய்துள்ளன.
தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில், அடுத்தடுத்து 5 அரசியல்வாதிகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப். மாதம் வண்டலூரைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன், மே மாதம் நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார், ஜான் பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜா கொல்லப்பட்டனர். இதேபோல 3 நாள்களுக்கு முன் சேலத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி சண்முகமும், நேற்று BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளனர்.
‘டீன்ஸ்’ படத்தில் பணியாற்றிய கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் சிவபிரசாத் மீது இயக்குநர் பார்த்திபன் பணமோசடி புகார் அளித்திருந்தார். இதற்கு பதிலடியாக, இப்படத்திற்கு தடை கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சிவபிரசாத் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பார்த்திபன் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, 5 T20 போட்டிகளில் விளையாடுகிறது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில், மோசமான தோல்வியை IND அணி பதிவு செய்துள்ளது. குறிப்பாக ருதுராஜ், ரிங்கு சிங், ஜூரல் உள்பட 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். கில் 31, வாஷிங்டன் சுந்தர் 27, ஆவேஷ் கான் 16 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்காக போராடினாலும், இறுதியில் IND அணிக்கு தோல்வியே மிஞ்ஞ்சியது.
சென்னையில் கொலை செய்யப்பட்ட BSP தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை, பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை, இன்றிரவே விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் சடலத்தை அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சியிடம் விண்ணப்பித்து முடிவு கிடைக்காததால் வழக்கு தொடரப்பட்டது.
Sorry, no posts matched your criteria.