news

News July 6, 2024

ஆவிகளுக்கு நைட் ஷோ காட்டிய அறக்கட்டளை

image

தாய்லாந்தில் உள்ள சீன கல்லறையில் இறந்தவர்களை சாந்தப்படுத்தும் வகையில், சவாங் மெட்டா தம்மதாசன் என்ற அறக்கட்டளை திரைப்படம் திரையிட்டு காட்டியுள்ளது. ஜூன் 2 – ஜூலை 6 வரை கல்லறையில் தற்காலிக திரையரங்கு அமைத்து, காலி இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இங்கு ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ஆவிகளை அமைதிப்படுத்த, விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News July 6, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

* மேஷம் – பெருமை கிடைக்கும்
*ரிஷபம் – இன்பம் அதிகரிக்கும்
*மிதுனம் – உற்சாகம் மேலோங்கும்
*கடகம் – நலம் உண்டாகும்
*சிம்மம் – அமைதி தேவை
*கன்னி – புகழ் உண்டாகும்
*துலாம் – பாசம் கிடைக்கும்
*விருச்சிகம் – சுபமான நாள்
*தனுசு – போட்டியை தவிர்க்கவும்
*மகரம் – சாந்தம் தேவை *கும்பம் – சிக்கலான நாள் *மீனம் – அன்பானவர்கள் தேடி வருவார்கள்

News July 6, 2024

இந்திய அணி படைத்த மோசமான சாதனை

image

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய முதலாவது டி20 போட்டிகளில் இந்திய அணி தனது 5ஆவது குறைந்த பட்ச ரன்களை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே 115 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 102 ரன்களில் ஆட்டமிழந்தது. இதற்கு முன்னதாக, ஆஸிக்கு எதிராக 74, நியூசிக்கு எதிராக 79, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 92, இலங்கைக்கு எதிராக 101 ரன்களில் இந்திய அணி ஆட்டமிழந்துள்ளது.

News July 6, 2024

பிரபுதேவா பிணமாக நடிக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’

image

சக்தி சிதம்பரம் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘ஜாலியோ ஜிம்கானா’. மடோனா, யாஷிகா ஆனந்த், யோகி பாபு, கிங்ஸ்லி, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் பெரும் பகுதியில் பிரபுதேவா பிணமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபுதேவா எப்படி உயிரிழந்தார் என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

News July 6, 2024

சிலிண்டருக்கான e-KYCஐ முடித்திட அழைப்பு

image

கை விரல் ரேகை, e-KYCஐ சரிபார்க்க வருமாறு சிலிண்டர் ஏஜென்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. பயனாளர்களின் உண்மைத் தன்மையை அறிய e-KYCஐ புதுப்பிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து அந்தப் பணியை மேற்கொண்டு வரும் ஏஜென்சிகள், சிலிண்டர் விநியோக ரசீது வாயிலாக நினைவுபடுத்தி வருகின்றன. மேலும், பயனாளர்களின் விவரம் கிடைக்கும் வரை e-KYC Pending என ரசீதில் அச்சிடப்படும் என ஏஜென்சிகள் கூறியுள்ளன.

News July 6, 2024

நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்க எதிர்ப்பு

image

நீதிபதி அனிதா சுமந்த், ஆம்ஸ்ட்ராங் அடக்கம் தொடர்பான வழக்கை விசாரிக்க, அவரது தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை நாளை விசாரிக்கிறார். ஆனால், வழக்கை அவர் விசாரிக்க கூடாது எனவும், மாநகராட்சி வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி பவானி, இந்த வழக்கை விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News July 6, 2024

என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

image

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்தில் உள்ள மோதர்காம் கிராமத்தில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற அவர்கள், அந்தப் பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் 4 தீவிரவாதிகள் பலியாகினர். இதனிடையே, தீவிரவாதிகள் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீர மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

News July 6, 2024

தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்த ஜிம்பாப்வே

image

டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு ஜிம்பாப்வே அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்திய அணி (2023-24) ஆண்டுகளில் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வென்றிருந்த நிலையில், அந்த சாதனையை ஜிம்பாப்வே அணி தகர்த்துள்ளது. இந்திய அணிக்கு அடுத்ததாக, மலேசியா 13, பெர்முடா 13, ஆஃப்கானிஸ்தான் 12, ருமேனியா 12 ஆட்டங்களில் தொடந்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

News July 6, 2024

கல்லீரலில் கொழுப்பு படிவதை தடுப்பது எப்படி? 1/2

image

கல்லீரலின் மொத்த எடையில் 5 முதல் 10% மேல் படிந்தால், கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் அல்ட்ராசவுண்டு பரிசோதனை மூலம் தெரிய வரும். நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவு, மரபணு ஆகியவை கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்பட முக்கிய காரணிகளாகும். நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் இரண்டு பேருக்கு இந்த கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பு உள்ளது.

News July 6, 2024

கல்லீரலில் கொழுப்பு படிவதன் காரணம் என்ன? 2/2

image

அதிக சர்க்கரை உள்ள உணவுகள், குளிர்பானங்கள், சோடா, பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிகமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும். புகை மற்றும் மது பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். குறைந்த சர்க்கரை அளவு கொண்ட பழங்கள், காய்கறிகளை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.

error: Content is protected !!