news

News July 7, 2024

சூர்யகுமாரின் சாதனையை சமன் செய்த சிக்கந்தர் ராசா

image

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் டி20 வடிவத்தில் போட்டியில் அதிகமுறை POTM (15) பெற்ற 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்று, சூர்யகுமார் யாதவின் சாதனையை சமன் செய்துள்ளார். முதலிடத்தில் விராட் கோலி (16) உள்ளார்.

News July 7, 2024

சீனா +1 என்றால் என்ன? (1/2)

image

‘சீனா +1 அல்லது சீனா பிளஸ் ஒன்’ என்பது உலகளாவிய வணிக உத்தியை குறிக்கும் சொல். 2013இல் அமெரிக்காவும் ஜப்பான் போன்ற அதன் நட்பு நாடுகளும் சீனாவின் உற்பத்தி & சேவையை நம்பியிருக்க கூடாது என்ற நிலைப்பாட்டிற்கு வந்தன. அத்துடன், சீனாவில் மொத்த முதலீடுகளைக் குவிப்பதைத் தவிர்க்க தங்கள் வணிகத்தை பிற நாடுகளிலும் மேற்கொள்ள தொடங்கின. கடந்த 10 ஆண்டுகளில் இந்த உக்தி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

News July 7, 2024

சீனா +1 என்றால் என்ன? (2/2)

image

சீன அரசின் ஜீரோ-கோவிட் கொள்கை, தகவல் பாதுகாப்பு சட்டம் போன்ற கடும் விதிகளால் பாதிக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் அந்நாட்டுக்கு மாற்றாக இந்தியாவை நோக்கி படையெடுக்க தொடங்கின. இதுவே வாகனம் & மின்சார உபகரண உற்பத்தி நிறுவனங்களின் மையமாக இந்தியா மாற வழிவகுத்தது. உற்பத்தி துறை சார்ந்த மதிப்புச் சங்கிலியில் இந்தியாவின் வேகமாக வளர்ச்சிக்கு மேற்குலகம் உருவாக்கிய ‘சீனா +1’ முக்கிய காரணமாக உள்ளது.

News July 7, 2024

போலே பாபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாயாவதி

image

போலே பாபா போன்ற மற்ற பாபாக்கள் & சாமியார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். அவர் தனது X பதிவில், நாட்டில் உள்ள ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் அறியாமையை சாமியார்கள் பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். 121 பேர் உயிரிழந்த ஹத்ராஸ் சம்பவத்தில், முக்கிய குற்றவாளியான போலே பாபா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News July 7, 2024

ஜூலை 7 வரலாற்றில் இன்று!

image

*1124 – சிலுவைப் போர் வீரர்களிடம் டைர் நகரம் வீழ்ந்தது. *1543 – பிரெஞ்சுப் படையினர் லக்சம்பர்க்கை ஊடுருவினர். *1758 – திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் மறைந்த நாள். *1859 – இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள். *1980 – ஈரானில் இசுலாமியச்சட்ட முறைமை நடைமுறைக்கு வந்தது. *2003 – நாசாவின் ஆப்பர்சூனிட்டி தளவுளவி விண்ணுக்கு ஏவப்பட்டது. *2007 – உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ் மகால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

News July 7, 2024

சர்ச்சைக்குரிய அகதிகள் சட்டம் ரத்து: கெய்ர் ஸ்டார்மர்

image

பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ரத்து செய்துள்ளார். ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டம் முடிந்துபோன ஒன்று எனக் கூறிய அவர், போர் & பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து அடைக்கலம் தேடி வரும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை லண்டன் வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

News July 7, 2024

ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர் ஜெஸ்வின் தகுதி!

image

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தகுதி பெற்றுள்ளார். இந்திய ஒலிம்பிக் தடகள அணியில் இடம்பிடித்த ராஜேஷ், சந்தோஷ், சுபா, பிரவீன் சித்திரவேல், வித்யா ராம்ராஜ், ஜெஸ்வின் ஆகிய 6 வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் தமிழ்நாட்டில் இருந்து அதிக தடகள வீரர்கள் தேர்வாகி இருப்பது இதுவே முதல்முறையாகும்.

News July 7, 2024

ரஹ்மானின் வித்தியாசமான பழக்கம்

image

ஏ.ஆர்.ரஹ்மான் மெழுவர்த்தி வெளிச்சத்தில் பாடல் கம்போஸ் செய்யும் வித்தியாசமான பழக்கம் கொண்டவர் என்று பாலிவுட் பாடலாசிரியர் ஜாவத் அக்தர் கூறியுள்ளார். இது குறித்து ரஹ்மானிடம் விளக்கம் கேட்டதாகக் கூறிய அவர், இசைக்கருவிகள் & இயந்திரங்களால் நிரம்பிய ஸ்டூடியோவில் செயற்கைத் தன்மை அதிகம் இருப்பதாகவும், இயற்கையான ஒளியை உணரத்தான் இப்படி செய்வதாகவும் ரஹ்மான் விளக்கமளித்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

News July 7, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல் ▶ குறள் எண்: 31
▶குறள்:
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
▶பொருள்:
அறம் சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும். ஆகையால் இத்தகைய அறத்தை விட மனிதருக்கு மேன்மையும் நன்மையும் அளிக்கக் கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

News July 7, 2024

சட்டமன்றத்தில் செங்கோல் வைக்கப்படும்: எல்.முருகன்

image

2026ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சட்டமன்றத்திலும் செங்கோல் வைக்கப்படும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருவேற்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “திமுக அரசு மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்திருக்கிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருப்பதற்கு பல உதாரணங்களை பார்க்கிறோம். 2026இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட கடுமையாக உழைப்போம்” எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!