India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவபெருமானை ராகு தவமிருந்து வணங்கி வரம் பெற்ற திருத்தலம் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் கோயிலாகும். நாகதோஷம் உள்ளவர்கள் விரதமிருந்து இக்கோயிலுக்கு வந்து, பராசர தீர்த்தத்தில் குளித்து, ராகு காலத்தில் ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து, வில்வ இலை சாற்றி, ‘நாகேச்சர நண்ணுவார்’ என்ற திருஞானசம்பந்தரின் பதிகப் பாடலை பாடி வணங்கினால் கிரக தோஷம் நீங்குவதோடு வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.
*சாமியார்களின் தவறான வழிகாட்டுதலில் தலித் மக்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் – மாயாவதி
*PM கிசான் திட்டத்தில் தமிழக விவசாயிகளை இணைப்பதில் அரசு அலட்சியம் – அண்ணாமலை
*முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
*உக்ரைனுக்கு உதவி செய்வதில் NATO நாடுகள் தங்கள் எல்லையை மீற வேண்டாம் – புதின்
*ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை ஜூன் மாதத்தில் 5% சரிவைக் கண்டுள்ளது.
✍மிகுந்த அன்புடன் செய்யப்படும் சிறிய விடயங்கள் இந்த உலகை மாற்றும். ✍அமைதி ஒரு புன்னகையில் தொடங்குகிறது. ✍சாதாரண விஷயங்களை அசாதாரணமான அன்புடன் செய்யுங்கள்.✍ பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட, உதவி செய்யும் கைகள் சிறந்தவை. ✍மகிழ்ச்சி எனும் வீட்டைத் திறக்க சாவி எதுவும் இல்லை; அதன் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளது. ✍மனிதர்களை மதிப்பிட்டுக் கொண்டே இருந்தால், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமிருக்காது.
தமிழ்நாட்டில் அதிமுக அழிந்து வருவதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு நலனுக்கு அதிமுக என்ற அரசியல் கட்சியின் தேவை மிக அவசியம் எனக் கூறிய அவர், ஜனநாயக மாண்புகளை சிதைக்கும் மதவாத, சாதியவாத சக்திகள் தமிழகத்தில் தலையெடுக்க திராவிட கட்சிகள் ஒருபோதும் இடமளித்துவிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
வைரல் இன்பெக்ஷன் வந்தால், ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலந்து நெபுலைஸ் செய்யலாம் என நடிகை சமந்தா கூறியிருந்தார். சமந்தாவின் இந்த பேச்சுக்கு நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியும், பேட்மிண்டன் வீராங்கனையுமான ஜூவாலா கட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது X பதிவில், “உங்கள் பரிந்துரை உதவாமல், உயிரிழப்பை ஏற்படுத்தினால் நீங்கள் அதற்கு பொறுப்பேற்பீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
IND – SA பெண்கள் அணிகள் இடையிலான டி20 தொடரின் 2ஆவது போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெறவுள்ளது. முதலாவது போட்டியில் வென்ற SA அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த உத்வேகத்தோடு தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேநேரத்தில் இந்த ஆட்டம் IND அணிக்கு வாழ்வா-சாவா போராட்டமாகும். இதில் தோற்றால் தொடரை இழக்க வேண்டி வரும் என்பதால் IND அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
▶ஜூலை – 23 | ஆனி – 23
▶கிழமை: ஞாயிறு | ▶திதி: துவிதியை
▶நல்ல நேரம்: காலை 07:45 – 08:45 வரை, மாலை 01:45 – 02:45
▶கெளரி நேரம்: காலை 10:45 – 11:45 வரை, மாலை 01:30 – 02:30 வரை
▶ராகு காலம்: மாலை 04:30 – 06:00 வரை
▶எமகண்டம்: நண்பகல் 12:00 – 01:30 வரை
▶குளிகை: மாலை 03:00 – 04:30 வரை
▶சூலம்: மேற்கு | ▶பரிகாரம்: வெல்லம்
▶சந்திராஷ்டமம்: அனுஷம்
மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் அரங்கநாயகத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை ஆராய்ந்த நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் இருந்து அரங்கநாயகத்தின் மனைவி கலைச்செல்வி & 3 மகன்கள் விடுதலை செய்யப்பட்டதை உறுதி செய்ததோடு, 1991 – 1996 பதவிக்காலத்தில் அவர் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அவரது நண்பர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் தற்போது இணைத்துள்ளார். கதைப்படி, சுருதி ரஜினியின் மகளாக நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் தொடர்பான காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் குல்கந்து முக்கியமான மருந்தாகவே பரிந்துரைக்கப்படுகிறது. உடல் சூட்டைத் தணிக்கக்கூடிய தன்மை கொண்ட அதனால் ஏற்படும் அஜீரணம், அரிப்பு, கொப்புளம் உள்ளிட்ட சருமப் பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த நிவாரணத்தைக் கொடுக்கும். ரத்தத்தைச் சுத்திகரித்து, அனீமியாவை போக்கும் ஆற்றல் கொண்ட குல்கந்தை சிறு குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை டேபிள்ஸ்பூன் அளவு தினமும் இருவேளைகூட எடுத்துக்கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.