India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய டைட்டானிக் மற்றும் அவதார் படங்கள் உலகம் முழுவதும் பெரும் வசூலை வாரிக்குவித்தன. கேமரூனின் பிரம்மாண்ட கற்பனைகளுக்கு உயிர் கொடுத்த இப்படங்களின் தயாரிப்பாளர் ஜான் லாண்டா (63) காலமானதாக, அவரது மகன் ஜேமி லாண்டா தெரிவித்துள்ளார். அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கும் பணியில் இருந்த லாண்டா, உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரவில்லை.
டி20 உலகக்கோப்பையை 17 வருடங்களுக்கு பின் கைப்பற்றி, கடந்த 4ஆம் தேதி தாயகம் திரும்பிய இந்திய அணியினருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது சொந்த ஊரான ஹைதராபாத் சென்றார். வீட்டிற்கு சென்றதும், தனக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை தனது தாயாருக்கு அணிவித்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ஆம்ஸ்ட்ராங்கை அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் வேண்டுமே? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடினால் என்ன செய்வது என்றும், ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்களா? எனவும் எழுப்பியுள்ள நீதிமன்றம், போதுமான இடம் இல்லாமல் அனுமதி வழங்க தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தற்போது அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு வேறு இடத்தில் மணி மண்டபம் கட்டிக்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆம்ஸ்ட்ராங் தரப்பு இதனை ஏற்க மறுத்ததால், வேறு பெரிய சாலை, விசாலமான இடம் இருந்தால் கூறும்படியும், அதன்பிறகு உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை 10.30 வரை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் செல்வராகவன், தனுஷை தான் செதுக்கவில்லை என்றும், ஒரு கல்லை மட்டுமே வைத்து விட்டு சென்றதாகவும், அவரே தன்னைத்தானே செதுக்கி கொண்டதாகவும் கூறினார். மேலும், அவர் இன்னும் நிறைய படங்களை இயக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ‘ராயன்’ திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாக உள்ளது.
ரேஷனில் கடந்த 3 மாதமாக பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு அந்தப் பொருள்களை சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் பங்கு கேட்டு முக்கிய புள்ளி ஒருவர் தொந்தரவு அளிப்பதாகவும், இதனால் டெண்டரில் பங்கேற்கவே அந்நிறுவனங்கள் தயங்குவதே பொருள் தட்டுப்பாடுக்கு காரணமென்றும் கூறப்படுகிறது. மாநில அரசும் இதுதொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தியா பயன்படுத்தும் நாணயத்தின் (கரன்சி) பெயர் ரூபாய் என்று அழைக்கப்படுகிறது. இதேபோல் மேலும் சில நாடுகளும் தங்களது நாணயத்தை ரூபாய் என்ற பெயரில் பயன்படுத்துகின்றன. அந்த நாடுகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம். 1) பாகிஸ்தான் – பாகிஸ்தான் ரூபி 2) இந்தோனேசியா – ரூபியா 3) மொரிசீயஸ் – மொரிசியன் ரூப் 4) நேபாளம் – நேபாள ரூபி 5) செசல்ஸ் – செசல்ஸ் ரூபி 6) இலங்கை – ஸ்ரீலங்கன் ரூபி ஆகும்.
பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இபிஎஸ் சார்பில் ஜெயக்குமார் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், அதிமுக காலத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டதாகவும், ஆனால் தற்போது அதன் கைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார். உள்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், அரசியல் கொலைகளை தடுக்க தவறிவிட்டதாகவும், திமுக அரசு தூங்கி கொண்டிருப்பதாகவும் அவர் சாடினார்.
டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்களை மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவை என்னென்ன? * டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் மாரடைப்பு அபாயத்தையும், இதய நோயையும் குறைக்கிறது * டார்க் சாக்லேட்டில் உள்ள பிளாவனோயிட்ஸ் ரத்த அணுக்களை அமைதிப்படுத்தி, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது *கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பொழுதுபோக்கு மல்யுத்த போட்டிகளில் (WWE) கடந்த 2002ல் அறிமுகமானவர் ஜான் சீனா (47). தி ராக், டிரிபிள் எச், ரேன்டி ஆர்டன் உள்ளிட்ட வீரர்களுடன் சண்டையிட்டு பிரபலமானவர். இது தவிர ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், WWE-லிருந்து அவர் ஓய்வை அறிவித்துள்ளார். 2025ல் நடக்க உள்ள Royal Rumble, Elimination மற்றும் Wrestlemania 41 ஆகியவையே தனது கடைசி போட்டிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.