news

News July 7, 2024

இந்திய மகளிர் அணி அறிவிப்பு

image

9ஆவது மகளிர் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கையில் வருகிற 19ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளனர். தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஆடி வரும் 17 வீராங்கனைகளில், 15 பேர் ஆசிய கோப்பைக்கு தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

News July 7, 2024

சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: மாயாவதி

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பிஎஸ்பி தேசியத் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவர், மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக கூறினார். புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் மிகவும் அர்பணிப்புடன் பயணித்தவர் என்று புகழ்ந்து கூறிய மாயாவதி, உண்மை குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

News July 7, 2024

சொகுசு காரை விட அதிக விலைக்கு விற்கப்படும் வண்டு

image

சொகுசு காரானது ₹50 லட்சம் வரை விற்கப்படுகிறது. இந்த விலையை காட்டிலும் வண்டு ஒன்று அதிக விலைக்கு விற்பனையாகிறது. “ஸ்டாக் வண்டு” எனப்படும் இந்த வகை வண்டு, 6 கிராம் எடையும் 7 ஆண்டு வரை உயிர்வாழும் தன்மை கொண்டது. இந்த வண்டு ₹75 லட்சத்துக்கும் மேல் விற்கப்படுகிறது. அதற்கு, அது அதிர்ஷ்டத்தை தரும், அதை வைத்திருந்தால் கோடீஸ்வரராகி விட முடியும் என சிலர் நம்புவதுமே காரணமாக சொல்லப்படுகிறது.

News July 7, 2024

இந்திய அணிக்கு பரிசு: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

image

இந்திய அணிக்கு ₹11 கோடி பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். அதற்கு, எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார், இந்திய அணியின் வெற்றிக்கு பெருமை கொள்வதாகவும், ஆனால், அரசு கருவூலத்தில் இருந்து ஏன் பரிசு வழங்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சட்டமேல் சபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே, முதல்வரின் சொந்த பணத்தில் இருந்து வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

News July 7, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: ஆருத்ரா மோசடிக்கு தொடர்பு? (1/3)

image

ரவுடி ஆற்காடு சுரேஷ் 2023 ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்க ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதான ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு கூறியுள்ளார். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு முன்பு ஆருத்ரா நிதிநிறுவன மோசடி குறித்து கட்டப்பஞ்சாயத்து நடந்ததாகவும், அதில் பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர் ஜெயபாலும், ஆருத்ரா தரப்பில் சுரேஷும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

News July 7, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: ஆருத்ரா மோசடிக்கு தொடர்பு? (3/3)

image

சுரேஷ் கொலை பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் இருப்பதாக பொன்னை பாலு நம்பிய நிலையில், அண்மையில் அவரையும் கொல்ல முயற்சி நடந்ததாகவும், இதனால், தனக்கு ஆம்ஸ்ட்ராங் குறிவைத்திருப்பதால் இனி அவரை விட்டு வைக்கக் கூடாதென கூறி, அவரை கொலை செய்து விட்டதாக பொன்னை பாலு வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விசாரணைக்கு பிறகே முழு விவரமும் உறுதியாக தெரிய வரும்.

News July 7, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: ஆருத்ரா மோசடிக்கு தொடர்பு? (2/3)

image

பேச்சுவார்த்தையில் பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டுமென ஜெயபால் வலியுறுத்தியதாகவும், இதைக்கேட்ட ஆற்காடு சுரேஷ் அவரையும், ஆம்ஸ்ட்ராங்கையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 2015இல் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர் தென்னரசை கொலை செய்த வழக்கில் ஆற்காடு சுரேஷ் பெயரும் அடிபட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டார்.

News July 7, 2024

வரி செலுத்துவோருக்கு சலுகை கிடைக்குமா?

image

மத்திய பட்ஜெட்டினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யவிருக்கிறார். இதில், வருமான வரி செலுத்துவோருக்கு சில சலுகைகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, Standard Deduction உயர்த்தப்பட வேண்டும், பழைய முறையில் வரி செலுத்துவோருக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும், 80C உச்சவரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

News July 7, 2024

விசாரணைக்கு ஆஜராகாத ராகுல்

image

2018ல் அமித் ஷாவை குறிவைத்து, ஒரு கொலையாளிதான் பாஜகவில் தலைவராக முடியும் என ராகுல் காந்தி பேசியதற்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல், கடந்த 2019ல் மோடி என்ற பெயரைக் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதற்கும் வழக்கு தொடரப்பட்டது. இந்த இரு வழக்குகளின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், ராகுல் நேரில் ஆஜராகவில்லை. எனவே அவர் மீது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

News July 7, 2024

ஆம்ஸ்ட்ராங் தரப்பு கோரிக்கையை ஏற்ற ஐகோர்ட்

image

நேற்றைய தினம் ஆம்ஸ்ட்ராங் அடக்கம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க அனுமதியளித்த ஐகோர்ட், நீதிபதி அனிதா சுமந்த் விசாரிப்பார் என்றும் தெரிவித்திருந்தது. எனினும், இவ்வழக்கை அவர் விசாரிக்க கூடாது, மாநகராட்சி வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி பவானி சுப்பராயன், விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற நீதிமன்றம் பவானியே இவ்வழக்கை விசாரிப்பார் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!