news

News July 7, 2024

பட்டா மாறுதலுக்கு லஞ்சமா? இதில் புகார் செய்யலாம்

image

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெறுவதை தடுக்கவே, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமலானது. எனினும், சில நேரம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. இதுகுறித்து தமிழக அரசின் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு, 044-22321090, 044- 22321085, 044-22310989, 044-22342142 எண்களைத் தொடர்பு கொண்டோ, 044-22321005க்கு பேக்ஸ் அனுப்பியோ, dvac@nic.inக்கு மெயில் அனுப்பியும் புகார் செய்யலாம்.

News July 7, 2024

இவை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா?: ராமதாஸ் கண்டனம்

image

சென்னை தொடங்கி நெல்லை வரை நடைபெறும் அரசியல் கொலைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். கடலூரில் நேற்று பாமக நிர்வாகி ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதனை குறிப்பிட்டுள்ள ராமதாஸ், இதுபோன்ற கொடூர நிகழ்வுகள் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்திருப்பதை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

News July 7, 2024

தலைவனுக்கான இலக்கணம் தோனி: BCCI

image

தோனி இன்று தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், சிறப்பு போஸ்டரை வெளியிட்டு BCCI பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும், தலைவன் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் தோனி எனவும், இந்திய முன்னாள் கேப்டனும், தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனவும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

News July 7, 2024

நீதிமன்றம் அதிகார எல்லையை தாண்ட முடியாது

image

விஜயகாந்துக்கு அவரது நிலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது போல, தங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் மனைவி தரப்பு வாதிட்டது. அதற்கு நீதிமன்றம், மனுதாரர் தெரிவிக்கும் புதிய இடமும் குடியிருப்பு பகுதி என்றும், அங்கு எப்படி அனுமதி வழங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியது. ஒதுக்குப்புறமான விசாலமான இடத்தை தேர்ந்தெடுக்க கூறி, வழக்கை பிற்பகல் 2.30க்கு ஒத்திவைத்தது.

News July 7, 2024

அசைவ உணவு பிரியரா நீங்கள்?

image

அசைவ உணவை அதிகம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் கெடக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அசைவ உணவை வரைமுறை இல்லாமல் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு கூடும். இதனால் உடல்பருமன், இதய நோய், ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, செரிமான பிரச்னை ஏற்படக்கூடும் என அவர்கள் கூறுகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஆதலால், எதிலும் அளவோடு இருப்பது நல்லது என அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News July 7, 2024

₹199க்கு 30 நாள்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் BSNL

image

தனியார் மொபைல் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்திய நிலையில், பொதுத்துறை நிறுவனமான BSNL பல மலிவு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. ₹199 திட்டத்துக்கு 30 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்பு, தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். ₹153க்கு, 26 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்பு, 26 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்ஸும், ₹118க்கு 20 நாளுக்கு வரம்பற்ற அழைப்பு, 10 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்ஸும் கிடைக்கும்.

News July 7, 2024

துண்டுப் பிரசுரம் வழங்கி இபிஎஸ் விழிப்புணர்வு

image

அதிமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக ராமநாதபுரம் செல்லும் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். அவருக்கு அங்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, பொதுமக்களுக்கு போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். அதில், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய நபர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தன.

News July 7, 2024

பட்டா மாறுதலுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? (2/2)

image

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கையில் குடியிருப்பு சான்றுக்கு ஆவணம் தேவைப்படும். அந்த ஆவணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆதார், தொலைபேசி ரசீது, மின்கட்டண அட்டை, சமையல் எரிவாயு ரசீது, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றின் நகல் தேவைப்படும். இந்த சான்றுகளின் நகலுடன் நேரடியாகவோ, ஆன்லைனிலேயோ பட்டா மாறுதல் கோரி உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

News July 7, 2024

பட்டா மாறுதலுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? (1/2)

image

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்களை அரசு பட்டியலிட்டுள்ளது. அவற்றை தெரிந்து கொள்வோம். கிரையப்பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம், பாகப் பிரிவினை பத்திரம், தானப் பத்திரம், பரிவர்தனை பத்திரம், விடுதலைப்பத்திரம் ஆகியவை கண்டிப்பாக தேவை. அடையாள சான்றுக்கு, ஆதார், பான், டிரைவிங் லைசென்ஸ், ரேசன் அட்டை, பாஸ்போர்டு, வாக்காளர் அட்டையில் ஏதேனும் ஒன்று தேவை.

News July 7, 2024

‘வேட்டையன்’ டப்பிங் பணிகள் தொடக்கம்

image

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் சூடுபிடித்துள்ளன. அந்த வகையில், படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஃபகத் ஃபாசில் டப்பிங் செய்யும் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. இப்படத்தில், இஸ்லாமிய காவல் அதிகாரியாக ரஜினி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!