news

News July 7, 2024

பாமக பிரமுகரை வெட்டிய 5 பேர் கைது

image

கடலூரில் பாமக பிரமுகர் சங்கர் வெட்டப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2021ஆம் ஆண்டு சங்கரின் தம்பி பிரபு அதே பகுதியை சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கின் முக்கிய சாட்சியாக சங்கர் இருப்பதால் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட மறுநாளே இச்சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News July 7, 2024

பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்த நாடுகளுக்கு செல்லலாம்

image

வெளிநாடு பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட், விசா அவசியம் தேவை. இல்லையேல், அந்நாடுகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், இந்தியர்கள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்த 2 நாடுகளுக்கு மட்டும் எப்போது வேண்டுமானாலும் சென்று திரும்ப முடியும். அண்டை நாடான நேபாளம் செல்ல பாஸ்போர்ட், விசா தேவையில்லை. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் போதும். பூடானுக்கு செல்லவும் பாஸ்போர்ட், விசா தேவையில்லை.

News July 7, 2024

CLAT 2025 தேர்வு தேதி அறிவிப்பு

image

தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான, CLAT 2025 நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு வருகிற 15ஆம் தேதி தொடங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் ₹4000 (SC/ST -₹3500) விண்ணப்ப கட்டணமாக செலுத்தி, consortiumofnlus.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இளநிலை படிப்பிற்கு 45%, முதுகலை படிப்பிற்கு 50% மதிப்பெண்கள் பிளஸ்2-வில் எடுத்திருக்க வேண்டும். வரும் டிசம்பர் 1ஆம் தேதி தேர்வு நடைபெறும்.

News July 7, 2024

ரஹ்மான் இல்லாததற்கு என்ன காரணம்?

image

28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மெகா ஹிட் அடித்த இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்நிலையில், இந்தியன்-2வில் அவர் இசையமைக்காததற்கான காரணம் குறித்து இயக்குநர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார். இந்த படம் இயக்க முடிவான போது, ஏ.ஆர்.ரஹ்மான் ரஜினி நடித்த ‘2.0’ படத்தில் பிஸியாக இருந்ததாகவும், மேலதிக பணிச்சுமையை தர வேண்டாம் என கருதியே அனிருத்தை நாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News July 7, 2024

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

News July 7, 2024

உ.பி முதல்வருக்கு ராகுல் காந்தி கடிதம்

image

உ.பி-யில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடு பணம் போதாது என்றும், அதை உயர்த்த வேண்டும் எனவும் ராகுல் காந்தி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, மாவட்ட நிர்வாகத்தின் குறைபாடுகளை அடையாளம் காண நடுநிலையான விசாரணை தேவை என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News July 7, 2024

நடிகை ரஜிஷா விஜயனுக்கு விரைவில் திருமணம்

image

‘கர்ணன்’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் தடம் பதித்தவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். ஒளிப்பதிவாளர் டோபின் தாமஸ் என்பவரை இவர் காதலித்து வருவதாக செய்திகள் பரவின. அதனை உறுதிப்படுத்தும் வகையில், ஜோடியாக எடுத்த புகைப்படங்களை இருவருமே சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதன்மூலம் விரைவில் இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News July 7, 2024

இந்தி திணிப்பு: மதுரை எம்பி கண்டனம்

image

சிபிஎஸ்இ பிரிவு ஏ,பி,சி பணியிடங்கள் 118-க்கான நியமன தேர்வுகள் நடைபெற உள்ளன. அதில் இந்தி மொழி திணிக்கப்பட்டுள்ளதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரிவு ஏ-யில் 30 மதிப்பெண்களும், பிரிவு பி-யில் 15 மதிப்பெண்களும் இந்தி மொழி தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது மற்ற மொழி தேர்வர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News July 7, 2024

ரோஹித் மீண்டும் உலகக் கோப்பையை வெல்வார்: ஜெய் ஷா

image

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் உலகக் கோப்பை தொடரை வெல்லும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவிக்கும் விதமாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்திய அணி மேலும் டெஸ்ட் உலகக் கோப்பை & சாம்பியன்ஸ் டிராஃபி ஆகியவற்றை ரோஹித் தலைமையில் வெல்லும் என்று பேசியிருக்கிறார்.

News July 7, 2024

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதன் நன்மைகள்

image

கர்ப்பிணி பெண்களின் இரத்த ஓட்டம் அதிகரிக்க பீட்ரூட் ஜூஸையே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பீட்ரூட் சாரில் இருக்கும் நைட்ரேட்டுகள், ரத்த நாளங்களை விரிவடைய செய்து இதய நோய்க்கு மருந்தாவது மட்டுமில்லாமல், ரத்தத்தில் ஆக்ஸிஜன் கலக்க உதவுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. இதிலுள்ள புரதச்சத்து செல்களின் வளர்ச்சிக்கும், வைட்டமின் சி, தோல் மற்றும் முடி இழப்பு பிரச்னைகளுக்கும் தீர்வாகின்றன.

error: Content is protected !!