India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குறைந்த வயதில் டி20 போட்டியில் சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் அபிஷேக் ஷர்மா இணைந்துள்ளார். இன்று நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அவர் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் குறைந்த வயதில் (23 ஆண்டுகள், 307 நாள்கள்) சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த பட்டியிலில் ஜெய்ஸ்வால் (21ஆண்டுகள், 279 நாள்கள்) முதலிடத்தில் உள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் திணறிய இந்தியா, தற்போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது, டியான் மியர்ஸ் வீசிய 11ஆவது Wd2, 2, 4, 6, 4, 6, 4, 13ஆவது ஓவரில் 6 , 4 ,1 4, 1,0 மற்றும் 14ஆவது ஓவரில் 2 1 6 6 6 W ரன்களை அபிஷேக் மற்றும் கெய்க்வாட் விளாசினர். இதனால் 14 ஓவரில் 148/2 ரன்களை இந்தியா குவித்தது. அபிஷேக் 47 பந்தில் (7 FOUR, 8 SIX) உடன் சதம் விளாசி, அவுட் ஆனார்.
சென்னை போயஸ்கார்டனில் வீடு கட்ட வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் போயஸ்கார்டனில் அவரது வீட்டை பார்க்க 16 வயதில் சென்றதாகவும், அங்கே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை பார்த்து பிரமிப்படைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அப்போதுதான் அங்கு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பொது இடத்தில் சில தம்பதியினரும், காதல் ஜோடிகளும் காதலை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் முத்தமிடுவது போன்ற அத்துமீறலில் ஈடுபடுவதுண்டு. இது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து யாரேனும் புகார் அளித்தால், இருவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குத் தொடுத்து 3 மாதம் வரை சிறை தண்டனை பெற்றுத்தர IPC சட்ட 294வது பிரிவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
டிஎன்பிஎல் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற 167 ரன்களை இலக்காக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயித்துள்ளது. முதலில் ஆடிய சேப்பாக் அணி, 20 ஓவரில் 166/6 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜெகதீசன் அதிகபட்சமாக 63, சந்தோஷ் குமார் 41 ரன்கள் எடுத்தனர். நெல்லை தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 167 ரன்கள் இலக்கை நோக்கி நெல்லை அணி விளையாடி வருகிறது.
சென்னை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, தரமணி, பல்லாவரம், திருவல்லிக்கேணி, அடையாறு, போரூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதேபோல, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஒரு மணி நேரமாக மழை பெய்து வருகிறது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிக விக்கெட்டை பறிகொடுக்கவில்லை என்றாலும், எதிரணி வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அதிகளவில் ரன்களை குவிக்க முடியவில்லை. தற்போதுவரை இந்தியா 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. குறிப்பாக பவர் ப்ளேவில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பச்சோந்தி போல பாஜக தலைவர் அண்ணாமலை அடிக்கடி நிறம் மாறுவார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். அவரை போல் தான் நியமிக்கப்பட்ட தலைவர் அல்ல என்று கூறிய அவர், தான் யார் என்பதை அண்ணாமலை கண்ணாடியை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என விமர்சித்துள்ளார். கட்சி தலைவர் பதவிக்கு சிறிதும் தகுதியில்லாதவர் என்பதை பலமுறை அண்ணாமலை தொடர்ந்து நிரூபித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக தொண்டர்கள் புறக்கணிப்பார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஆளும் திமுக அரசு தேர்தல் முறைகேடுகளில் வெளிப்படையாக ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
மும்பையின் கோலிவாடா பகுதியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற காவேரி நாக்வா என்பவர் மீது அதிவேகத்தில் வந்த சொகுசு கார் மோதியது. காவேரியின் கணவர் படுகாயமடைந்த நிலையில், காவேரி காரின் முன்பக்கத்தில் சிக்கிக் கொண்டு 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய மிஹிர், பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா பிரமுகர் ராஜேஷ் ஷாவின் மகன் என்பது தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.