news

News July 7, 2024

டி20: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

image

இந்தியா-தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதும் 2ஆவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

News July 7, 2024

10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (10 மணி வரை) 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவு 10 மணி வரை செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, வேலூர், ராணிப்பேட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

News July 7, 2024

மாணவரை கண்டித்ததால் ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்

image

அஸ்ஸாமில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு மாணவர் தனது ஆசிரியரை கத்தியால் குத்திக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியின் வேதியியல் ஆசிரியர் பெஜவாடா, குறைந்த மதிப்பெண் பெற்ற தனது மாணவரை கண்டித்துள்ளார். அத்துடன் நாளை பெற்றோரை அழைத்து வருமாறும் கூறியுள்ளார். மறுநாள் பள்ளிக்கு வந்த மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியரை குத்தி கொலை செய்துள்ளார்.

News July 7, 2024

ஜிம்பாப்வே அணி திணறல்

image

2ஆவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறி வருகின்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 234 ரன்கள் எடுத்தது. அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி சதமடித்தார். பின்னர் ஆடத்துவங்கிய ஜிம்பாப்வே அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருகிறார்கள். அந்த அணி 10 ஓவரில் 72/5 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியின் முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட் எடுத்துள்ளனர்.

News July 7, 2024

டிஎன்பிஎல்: நெல்லை அணி வெற்றி

image

டிஎன்பிஎல் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய சேப்பாக் அணி, 20 ஓவரில் 166/6 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜெகதீசன் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய நெல்லை அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் ராஜகோபால் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதையை நோக்கி அழைத்து சென்றார்.

News July 7, 2024

ரன் குவிப்பில் வரலாறு படைத்த இந்திய அணி

image

டி20 போட்டிகளில் கடைசி 10 ஓவரில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், இந்திய அணி கடைசி 10 ஓவரில் 160 ரன்களை குவித்தது, இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இலங்கை 159, ஆஃப்கான் 156, நியூசிலாந்து 154 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இந்திய அணி முதல் 10 ஓவரில் 74 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

News July 7, 2024

காதலர்களிடையே ஏற்பட்ட மோதலால் வெடிகுண்டு மிரட்டல்

image

விமான நிலையத்தில் காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக காதலன் பேக்கில் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பிய பெண் கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இந்திரா என்பவர் தனது காதலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் கோபமடைந்த காதலன் மும்பை செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு கிளம்பினார். அவரை தடுத்து நிறுத்த அப்பெண், வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளார்

News July 7, 2024

சேற்றில் சிக்கி யானை மரணம்

image

நீலகிரி மாவட்டம் தேன்வயல் அருகே விவசாய நில சேற்றில் சிக்கி 20 வயது ஆண் யானை உயிரிழந்தது. மூங்கில்காடு என்னும் காப்பு காடு பகுதியில் சிலர் விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது. அந்த வழியாக வந்த யானையின் முன்னங்கால்கள் சேற்றில் சிக்கியதால் பாரம் தாங்காமல் யானை உயிரிழந்ததாகத் தெரிகிறது. பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News July 7, 2024

சிபிசிஐடி விசாரணைக்கு தமிழிசை எதிர்ப்பு

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய அவர், தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக விமர்சித்துள்ளார். சிபிசிஐடி போலீசார் விசாரித்தால் இந்த வழக்கின் உண்மை குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.

News July 7, 2024

235 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

image

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதல் 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்து திணறிய இந்தியா, அடுத்த 10 ஓவரில் 160 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியாவின் ஸ்கோர் 20 ஓவரில் (14 சிக்ஸ், 20 பவுண்டரிகளுடன்) 234/2 ஆக உயர்ந்தது. அபிசேக் சர்மா 100, ருதுராஜ் கெய்க்வாட்77, ரிங்கு சிங் 48 ரன்கள் குவித்தனர்.

error: Content is protected !!