India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் உயிரிழந்ததால், அந்தத் தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி நிலவும் சூழலில், நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை சர்க்கரை உடலுக்கு தீங்கு என்று கூறப்படும் நிலையில், அதற்கு மாற்றாக பனங்கற்கண்டு சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. இதில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது, இது எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு உதவுகிறது. மேலும், நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானத்தை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. அதிகப்படியான பனங்கற்கண்டு சாப்பிடுவது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், துரை தயாநிதி ஆரோக்கியமாக இருக்கிறார். அவரின் உடல்நிலை குறித்து வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை. இதுபோன்ற தகவலை யாரும் பரப்ப வேண்டாம், நம்பவும் வேண்டாம் என்று சி.எம்.சி நிர்வாகம் சற்றுமுன் விளக்கமளித்துள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4ஆவது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார். முதல் இரண்டு செட்டை அல்காரஸ் கைப்பற்றினார். சுதாரித்து ஆடிய ஹம்பர்ட் 3வது செட்டை கைப்பற்றினார். 4வது செட்டை அல்காரஸ் வென்றார். இறுதியில் அல்காரஸ் 6-3, 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பலருக்கு கத்தரிக்காய் விருப்பமான காயாக இருந்தாலும், குறிப்பிட்ட சில பிரச்னை இருப்பவர்களுக்கு இது எதிர்வினை பாதிப்புகளை தரக்கூடும். சரும அலர்ஜி இருப்பவர்கள் இதை சாப்பிடக் கூடாது. பார்வையில் குறைபாடு, வீக்கம் போன்ற பிரச்னை இருப்பின் கத்தரிக்காய் சாப்பிட கூடாது. மூலநோய் இருப்பவர்களுக்கு அந்த பிரச்னையை இன்னும் தீவிரமாக்கும். எனவே இந்த பாதிப்பு உடையவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு அறுவை சிகிச்சை நடந்தது தொடர்பான புகைப்படம், சில நாள்களுக்கு முன் வெளியானது. ஆனால், எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், எதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார் போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில், மனைவியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதால், அஜித் மீண்டும் விடாமுயற்சி சூட்டிங்கிற்காக அஜர்பைஜான் புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் தமிழக பொறுப்பாளராக கோபிநாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்க, ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழக BSPக்கு தற்போது மாநிலத் தலைவர் இல்லாத சூழலில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது, புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி., மாநிலம் ஹாத்ராஸில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 120க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சென்றதை விமர்சித்த புகாரில், மஹுவா மீது டெல்லி போலீசார் FIR பதிவு செய்துள்ளனர்.
2008 – 2019 வரை டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் காற்று மாசு காரணமாக ஏற்படும் மரணங்கள் 7% அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 28,67 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், PM-2.5 காற்று மாசு 48 மணி நேர சுழற்சியில் 10 மைக்ரோகிராம் அதிகரிக்கும் போது அது பெங்களூரில் உயிரிழப்பை 3% வரை அதிகரிக்கிறது. டெல்லியை விடப் பெங்களூரில் ஆபத்து 10 மடங்கு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து உள்ளதாக பாஜகவை சேர்ந்த சரத்குமார் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழகத்தில் எப்படிப்பட்ட ஆட்சி நடைபெறுகிறது என்பது சாட்சியாக இருப்பதாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் விக்கிரவாண்டியில் எந்த வளர்ச்சியும் இல்லை எனவும், இந்த தொகுதியில் பாமகவை வெற்றிபெற வைக்க வேண்டியது மக்களின் கடமை என்றும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.