India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜூன் மாதத்தில் இந்தியாவில் மின்சார வாகன விற்பனை 36% உயர்ந்து, அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. 79,530 இருசக்கர வாகனங்கள், 52,304 மூன்று சக்கர வாகனங்கள், 6,894 பயணியர் கார்கள், 512 வர்த்தக வாகனங்கள் என மொத்தம் 1,39,240 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் பருவமழை & அரசின் கொள்கைகள் மின்சார வாகனங்கள் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் சிறந்த அமைப்புகளில் ஒன்றாக ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள வசதிகள், சாதனங்கள், உட்கட்டமைப்புகள், நவீன உபகரணங்கள் & பிற பொருட்கள் உலக தரத்திலானவை எனக் கூறிய அவர், இனி ஜம்மு & காஷ்மீர் மக்கள் சிகிச்சைக்காக சண்டிகாருக்கோ அல்லது டெல்லிக்கோ செல்ல வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூலை 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
*விக்கிரவாண்டியில் பாமகவை வெல்ல வைக்க வேண்டியது மக்களின் கடமை – சரத்குமார்
*ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – தமிழிசை
*ஜூன் மாதத்தில் இந்தியாவில் மின்சார வாகன விற்பனை 36% உயர்ந்துள்ளது.
*லெபனானில் இருந்து ஹிஜ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் தொடுத்தனர்.
*ZW அணிக்கு எதிரான 2ஆவது T20 போட்டியில், IND அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
POST OFFICE பெயரில் வரும் மோசடி செய்திகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், “உங்களுடைய பேக்கேஜ் வேர்ஹவுஸில் இருக்கிறது. நாங்கள் இரு முறை முயற்சித்தும் முகவரி தகவல் கிடைக்காததால் டெலிவரி செய்ய முடியவில்லை. உங்கள் முகவரியை 48 மணி நேரத்தில் அப்டேட் செய்யவும்” என்ற தகவலுடன் SMS வந்தால் அதனை உடனடியாக டெலிட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சத்துமாவுக் கஞ்சி போன்ற உணவுகள் உடல் நலனுக்கு உகந்தவை அல்ல என்று ஹெல்த் டயட்டீஷியன்ஸ் கூறுகின்றனர். சத்துமாவுக் கஞ்சியில் மிக விரைவாக செரிமானமாகக்கூடிய
கார்போஹைட்ரேட்ஸ் அதிகம். நீரிழிவாளர்களைப் பொறுத்தவரை கஞ்சியாகக் குடிக்காமல், நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை வைத்து சப்பாத்தியாகவோ, இட்லியாகவோ செய்து சாப்பிடுவதுதான் சிறந்தது.
தமிழ்நாட்டில் இரவு ஒரு மணி வரை 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில மணி நேரமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மேஷம் – பெருமையான நாளாக இருக்கும், *ரிஷபம் – கடினமாக உழைக்க வேண்டும் *மிதுனம் – மேன்மை உண்டாகும், *கடகம் – சாதனை படைக்கும் நாளாக அமையும் *சிம்மம் – நட்பு உருவாகும், *கன்னி – சாதகமான நாளாக அமையும், *துலாம் – நேர்மையுடன் செயல்படுங்கள், *விருச்சிகம் – தெளிவாக இருக்கவும் *தனுசு – பாராட்டு கிடைக்கும், *மகரம் – புகழ் வெளிச்சம் கிடைக்கும், *கும்பம் – வெற்றி உண்டாகும், *மீனம் – அமைதியாக இருங்கள்
டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை அணி 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய கோவை அணி, 20 ஓவரில் 160/7 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷாருக்கான் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய திருப்பூர் அணி, 159/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியின் துஷார் ரஹேஜா 81 ரன்கள் எடுத்தார். கோவை அணியின் ஷாருக்கான், முகமது தலா 2 விக்கெட் எடுத்தனர்.
மூளையைத் தின்னும் அமீபா வைரஸ் காரணமாக கேரளாவில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள், குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். இந்நோய் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என சுகாதாரதுறை அனைத்து மாவட்டங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.