India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
✍அரசியலில் பொறிகளை அடையாளம் காண நரியாகவும், ஓநாய்களை விரட்ட சிங்கமாகவும் இருக்க வேண்டும். ✍அரசியலுக்கும் நல்லொழுக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ✍அடிமையாக இருக்க விரும்பும் மக்களுக்கு சுதந்திரம் கொடுக்க முயற்சிப்பதும் ஆபத்தானது. ✍போரில் பெறும் வெற்றி, ஒருவன் செய்த எல்லாத் தவறுகளையும் சரி செய்துவிடுகிறது. ✍ஆயுதம் ஏந்தாத அரசு நிலையான சுதந்திரத்தை நீண்ட நாள்கள் தக்க வைக்க முடியாது.
மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் டெல்லி சென்று முறையிடுவோம் என்று புதக தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். பிபிடிசி நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் 2028இல் முடிவடைந்த உடன் அந்த தேயிலை தோட்டங்கள் நேரடியாக தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் எனக் கூறிய அவர், அவற்றை அழிக்காமல் கையகப்படுத்தி, தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மகதீரா, பாகுபலி, RRR போன்ற பிரம்மாண்ட படைப்புகளை இந்திய திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குநர் ராஜமெளலி. அவரைப் பற்றிய பயோபிக் ஆவண வடிவில் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ‘மார்டன் மாஸ்டர்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் அவர் இயக்கிய படங்களில் நடித்த நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் அவரைப் பற்றி பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.
▶ஜூலை – 18 | ஆனி – 24
▶கிழமை: திங்கள் | ▶திதி: திரிதியை
▶நல்ல நேரம்: காலை 06:15 – 07:15 வரை, மாலை 04:45 – 05:45 வரை
▶கெளரி நேரம்: காலை 09:15 – 10:15 வரை, மாலை 07:30 – 08:30 வரை
▶ராகு காலம்: காலை 07:30 – 09:00 வரை
▶எமகண்டம்: காலை 10:30 – 12:00 வரை
▶குளிகை: நண்பகல் 01:30 – 03:00 வரை
▶சந்திராஷ்டமம்: கேட்டை
▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
திமுகவை மட்டுமல்ல பாஜகவை பார்த்தும் அதிமுக பயந்து நடுங்குகிறது என அமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், “பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தோல்வி பயத்தில், தேர்தலில் இருந்து விலகியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் பாமகவுக்கு பதிலாக தமிழக மக்களுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவுக்கு வாக்களியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUTE-UG) குறைபாடுகள் இருந்ததாக தேர்வர்கள் அளித்த புகார் உறுதிசெய்யப்பட்டால், மறுதேர்வு நடத்த தயார் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், “தேர்வின் குறைபாடுகளை வல்லுநா் குழு மூலம் ஆய்வு செய்யப்படும். உறுதியானால் ஜூலை 15-19 வரையிலான ஏதேனும் ஒரு நாளில் மறுதேர்வு நடத்தப்படும். அதன்பிறகு தோ்வு முடிவுகள் வெளியிடப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
அதிமுகவை கபளீகரம் செய்ய முயற்சிக்கும் நபர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதவி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தின் முதல்வராக இபிஎஸ் செய்த ஆயிரக்கணக்கான சாதனைகளை பட்டியலிட்டு சொல்ல முடியும் எனக் கூறிய அவர், இபிஎஸ்-ஐ பற்றி அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக தொடர்ந்து பேசினால், அதிமுகவினர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என எச்சரித்துள்ளார்.
நான் ஈ, புலி ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கிச்சா சுதீப் (54). தற்போது அவர் இயக்குநர் அனுப் பண்டாரி இயக்கத்தில், ‘பில்லா ரங்கா பாஷா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாபாத்திரத்திற்காக இடைவிடாமல், உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஜிம்மில் எடுத்த கட்டுமஸ்தான உடலமைப்புடன் கூடிய புகைப்படங்களை சுதீப் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மழைக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் சளி, இருமலுக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இதில் இருந்து தப்பிக்க திப்பிலி டீ பருகலாம்.
திப்பிலி, சித்திரத்தை, மிளகு, சுக்கு, அதிமதுரம் ஆகியவற்றை இடித்து, நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அதனை வடிகட்டி, தேன் கலந்தால் தேநீர் தயார். இதனை காலை, மாலை என இருவேளை குடித்தால் சளி இயற்கையில் நீங்குமென மருத்துவர்கள் கூறுகின்றன.
IND – SA பெண்கள் அணிகள் இடையேயான 2ஆவது டி20 போட்டியில், மழையால் பாதியில் ரத்தானது. முதலில் களமிறங்கிய SA அணி 20 ஓவரில் 177 ரன் எடுத்தது. இதையடுத்து, IND அணி விளையாட முனைந்தபோது, பின் மழையால் போட்டியை பாதியில் ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். SA அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. 3ஆவது போட்டி ஜூலை 9இல் சென்னையில் நடக்கிறது. இதில், வென்றால் மட்டுமே IND அணி தொடரை சமன் செய்ய முடியும்.
Sorry, no posts matched your criteria.