India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே மாதத்தில் மக்கள் வெள்ளம் அதிகம் படையெடுத்ததால் ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறையை அறிமுகம் செய்தது நீதிமன்றம். ஆனால், இந்தப் பிரச்னை நமக்கு மட்டுமானது அல்ல. உலகின் முக்கிய சுற்றுலா தலங்களான பாரீஸ், எவரெஸ்ட் ஆகியவை கூட மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றன. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, நாகப்பட்டினம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லவும்.
ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பரப்புரை நிறைவு பெறுகிறது. மாலை 6 மணிக்கு மேல் கட்சியினர், வேட்பாளர்கள் என யாரும் எந்த ஒரு ஊடகத்தின் மூலமாகவும் பரப்புரை செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தொகுதியை சாராதவர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்து, இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு அவர் அதிக நாள்கள் தங்க திட்டமிட்டுள்ளதால், முதல்வர் பணிகளை கவனிக்கும் விதமாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே அவருக்கு பதவி வழங்க திட்டமிடப்பட்டது, மூத்த தலைவர்களின் அறிவுறுத்தலால் அம்முமுடிவு நிறுத்திவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ரஷ்யாவுக்கு 2 நாள் அரசுமுறை பயணமாக மோடி இன்று செல்கிறார். பிரதமராக 3ஆவது முறையாக பதவியேற்றபிறகு, அவர் மேற்கொள்ளும் முதல் ரஷ்ய பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது புதினை சந்தித்து பேசவுள்ளார். இந்தியா-ரஷ்யா 22ஆவது மாநாட்டிலும் கலந்து கொள்ள உள்ளார். பின்னர் ஆஸ்திரியாவுக்கு அவர் செல்லவுள்ளார். இதன்மூலம் 41 ஆண்டுகளில் ஆஸ்திரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் எனும் பெருமையை பெறுகிறார்.
கிராண்ட் ப்ரீ மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஸ்பெயினில் நடந்த மகளிருக்கான 50 KG எடைப் பிரிவின் இறுதிச்சுற்றில், அவர் ரஷ்யாவைச் சேர்ந்த மரியா டியுமெரிகோவாவுடன் மோதினார். அபாரமாக விளையாடிய அவர், 10-5 என்ற கணக்கில் மரியாவை வீழ்த்தியுள்ளார். அடுத்ததாக, அவர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டி தயார் நிலைக்காக பிரான்ஸ் செல்லவிருக்கிறார்.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிடவில்லை என்று பெட்ரோலியம் & இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். பிபிசிஎல் நிறுவனம் கடந்த ஓராண்டில் ஈட்டிய லாபத்திற்கு நிகராக, அதன் விற்பனை விலை இருந்தது எனக் கூறிய அவர், அரசு இந்நிறுவனத்தை தன்வசமிருந்து கைவிடும் பட்சத்தில், பெரிய பிரச்னை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக நேற்று முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் திருச்சி சென்றார். அவரை அழைத்துச் செல்ல வந்த அமைச்சர் கே.என்.நேருவின் கார், தலைமை தபால் நிலையம் அருகே விபத்தில் சிக்கியது. ஓட்டுநர் சீனிவாசனுக்கு சிறிதளவு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து துர்கா ஸ்டாலின் வேறு கார் மூலம் ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நாடாளுமன்ற விவாதம் தெருச்சண்டை போல் இருக்கக்கூடாது என்று சபாநாயகர் ஓம்பிர்லா கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலத்துடன் இருப்பது, மக்களில் குரலை பிரதிபலிக்க கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு எனக் கூறிய அவர், நாட்டை வழிநடத்தி செல்ல ஒவ்வொரு உறுப்பினரின் கருத்துக்களையும் தெரிவிக்க கூட்டத்தொடரில் நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
கரிகால் சோழனால் கிபி 2ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட முதல் சைவத்தலம் கோவை பேரூர் பட்டீசுவரர் திருக்கோயிலாகும். ‘பட்டி’ என்ற காமதேனு பசு, மணலால் சுயம்பு லிங்கம் மீது பால் சொரிந்து வழிபட்டதால், இத்தலத்துக்கு ‘பட்டீச்சரம்’ என்று பெயர் வந்தது. இங்குள்ள தேனுபுரீஸ்வரருக்கு பால் அபிஷேகம், பட்டு வஸ்திரம் சாற்றி, நெய் தீபமேற்றி, தேவாரம் பாடி வணங்கினால், ராகு-கேது கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
Sorry, no posts matched your criteria.