India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அசாமில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் முதல் அசாமில் கனமழை பெய்கிறது. இதனால் பிரம்மபுத்திரா, பராக் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மொத்தமுள்ள 35 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 3,533 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 24 லட்சம் பேர் கடுமையாக பாதித்துள்ளனர். காசிரங்கா பூங்காவில் 114 விலங்குகள் உயிரிழந்துள்ளன.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், ஓராண்டிற்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்கவும், வங்கி ஆவணங்களை தரக்கோரியும் அவர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
பாட்டிலில் அடைக்கப்பட்ட கேன் தண்ணீரைத் தொடர்ந்து அருந்தி வரும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்னை வரும் என பாலியல் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். கேன் நீர் கெடாமல் இருக்கவும், புழுக்கள் வராமல் தடுக்க சில பூச்சிக்கொல்லி மருந்து, பாஸ்பேட் போன்ற மினரல்களை சேர்க்கிறார்கள். இவை, குழந்தையின்மை, மலட்டுத்தன்மை போன்ற தீவிர பிரச்னைகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை சூப்பர்மேன் கதாபாத்திரம் போல தாம் கருதுவதாக இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியன் 2 குறித்து பேட்டியளித்த அவர், வயதை வைத்து ஒரு கதாபாத்திரத்தை கட்டுப்படுத்துவது தமக்கு பிடிக்காது என்றும், இந்தியன் தாத்தாவை வயதான கதாபாத்திரமாக தாம் பார்க்கவில்லை. அனைவரின் ஆள்மனதிலும் உள்ள ஊழலுக்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடே இந்தியன் தாத்தா என்றும் கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதன்பின் வெளியான கருத்துக் கணிப்புகள், அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளன. புதிய பாப்புலர் முன்னணி கூட்டணிக்கு 172 முதல் 215 எம்பிக்கள் சீட்டும் ஆளும் கட்சியான நடுநிலை கட்சிக்கு 150 முதல் 180 இடங்களும், வலதுசாரி தேசிய கூட்டணிக்கு 115 முதல் 155 இடங்கள் கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடரின்போது இந்திய வீரர் இஷான் கிஷன் உடல் நிலை சரியில்லை என்று கூறி நாடு திரும்பினார். அணியின் விளையாட இடம் கிடைக்காது என்று தெரிந்ததால், அவர் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின், அவர் பார்ட்டிகளில் பங்கேற்பதை பார்த்த பிசிசிஐ, அவர ரஞ்சி கோப்பை விளையாட சொன்னது. அதையும் பொருட்படுத்தாமல் கிஷன், ஐபிஎல் பயிற்சி ஆட்டங்களில் விளையாடச் சென்றார்.
பிசிசிஐ-இன் உத்தரவுகளை இஷான் கிஷன் மதிக்காததால்தான், அவரது ஆண்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்று தகவல் வெளியானது. இதுகுறித்து பேசியிருக்கும் இஷான் கிஷன், “எனக்கு நிஜமாகவே தென்னாப்பிரிக்காவில் ஒவ்வாமை ஏற்பட்டது. அது சரியாகாததால்தான் ரஞ்சி கோப்பையிலும் விளையாடவில்லை.” என்று கூறியுள்ளார். இருப்பினும், ஜிம்பாப்வே தொடரிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், ரத்தம் உறைவதைத் தவிர்க்கும் மாத்திரைகளை உட்கொள்வோருக்கு பல் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இப்பிரச்னையை வெதுவெதுப்பான உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளிப்பதாலும், சர்க்கரை மற்றும் பற்களில் ஒட்டும் தன்மையுடைய உணவுகளைக் குறைத்து, ‘வைட்டமின் கே, சி’ அதிகம் உள்ள கீரைகள், பழங்களை சாப்பிடுவதாலும் தவிர்க்கலாமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மக்களவைத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் திமுகவுக்கு ஓட்டு சதவீதம் குறைந்ததோ, அந்தந்த தொகுதிகளுக்கு பொறுப்பேற்ற அமைச்சர்களின் இலாகாக்களை பறிக்க திமுக தலைமை ஆலோசித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் சிலரிடம் இருந்து பொறுப்புகளை பறிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பின் அமைச்சர்கள் மாற்றம், இலாகா மாற்றம் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பஹிஸ்கரன் என்ற வெப் தொடரில் அஞ்சலி நடித்துள்ளார். இதில் விலைமாது கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இந்தத் தொடர் கிராமத்தில் நடக்கும் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட பின்னணியில் உருவாகியுள்ளது. இதை முகேஷ் பிராஜா இயக்கி உள்ளார். ஏற்கெனவே “கேங்க்ஸ் ஆப் கோதாவரி” என்ற படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்த அஞ்சலி நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.