India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய கிரிக்கெட் அணியின் தாதா என்று அறியப்படும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று தனது 52ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். துவண்டு கிடந்த இந்திய அணியை மீண்டும் கட்டமைத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் கங்குலி. துவக்க வீரராக சச்சினுடன் சேர்ந்து பல போட்டிகளை கங்குலி வென்று கொடுத்திருக்கிறார். இவரது தலைமையிலான இந்திய அணி, 2003 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியது.
1956 இந்து தத்தெடுப்பு- பராமரிப்பு சட்ட 11ஆவது பிரிவின் 3ஆவது உட்பிரிவில் தத்தெடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. ஆண் துணையில்லாத பெண் எனில் எந்த குழந்தையை வேண்டுமானாலும் தத்தெடுக்கலாம். ஆனால், பெண் துணையில்லாத ஆண் எனில் ஆண் குழந்தையை மட்டுமே நிபந்தனையின்றி தத்தெடுக்கலாம், பெண் குழந்தையை தத்தெடுக்க, அக்குழந்தையை விட அவருக்கு 21 வயது அதிகமாக இருக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் காந்தி இன்று சந்திக்க உள்ளார். இந்நிலையில், அண்டை மாநிலமான அசாமில் வெள்ளம், நிலச்சரிவால் 22.70 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்காரணமாக, மணிப்பூர் செல்லும் வழியில் அசாம் சென்று, அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் சந்திக்க உள்ளார்.
இந்தியாவில் நிலப்பரப்பு அளவில் மிகச்சிறிய மாநிலம் கோவா ஆகும். அதன் நிலப்பரப்பு 3,702 சதுர கி.மீ. ஆகும். அதை விட புதுச்சேரி மிகவும் சிறிய பகுதி. அதன் நிலப்பரப்பு 479 சதுர கி.மீ. ஆகும். ஆனால் அது யூனியன் பிரதேசம் என்பதால், மாநிலங்கள் வரிசையில் வராது. அதேபோல், இந்தியாவிலேயே மிகச்சிறிய மாவட்டமாக புதுச்சேரியில் உள்ள மாஹே கூறப்படுகிறது. அதன் மொத்த நிலப்பரப்பு அளவு 3.36 சதுர கி.மீ. ஆகும்.
இந்தியா-ரஷ்யா 22வது வருடாந்தர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் பல முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். இந்நிலையில், இந்த இரு தலைவர்களின் சந்திப்பை பார்த்து மேற்கத்திய நாடுகள் பொறாமைப்படுவதாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இதனால்தான் இரு தலைவர்களின் சந்திப்பை அந்நாடுகள் தீவிரமாக கண்காணித்து வருதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 6 செ.மீ, சோழிங்கநல்லூர் மற்றும் வால்பாறையில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பெய்திருக்கிறது.
எந்தக் காலத்திலும் இபிஎஸ்-யிடம் யாசகம் கேட்கமாட்டேன் என ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறினார். கட்சியில் சேர்க்குமாறு தான் கோரிக்கை வைக்காத நிலையில், தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என இபிஎஸ் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளதாக சாடினார். தொடர் தோல்வியை சந்தித்து வரும் அவரை தொண்டர்கள் நிராகரித்துவிட்டதாகவும், 2026இல் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமானால் தலைமை மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகும் என்ற கோயபல்ஸ் வேலையை இபிஎஸ் செய்வதாக ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தன்னை விசுவாசமற்றவன் என பேட்டியளித்தது முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது போல் உள்ளதாக விமர்சித்த அவர், துரோகம், பொய்மை, வன்முறையின் மொத்த உருவம்தான் இபிஎஸ் என்றும் சாடினார். அவர் பதவியில் இருந்து விலகினால் நல்லது என தொண்டர்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
ATM அட்டையை பயன்படுத்தாமலேயே இயந்திரத்தில் பணமெடுக்கும் வசதி உள்ளது. அதை தெரிந்து கொள்வோம். ATM மையம் சென்று இயந்திரத்தில், யுபிஐ பணம் எடுக்கும் முறையை தேர்வு செய்ய வேண்டும். அப்போது வரும் QR code-ஐ உங்களது போனில் உள்ள BHIM, Paytm, G Pay, PhonePe போன்ற ஏதேனும் யுபிஐ செயலிக்குள் உள்நுழைந்து ஸ்கேன் செய்து, தேவைப்படும் பணம், கடவுச்சொல்லை பதிவிட்டு ஓகே கொடுத்தால் பணம் எடுக்கலாம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து, ₹54,400க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,820க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று ₹20 குறைந்து, ₹6,800க்கு விற்கப்படுகிறது. நேற்று ₹99.30க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 20 காசுகள் உயர்ந்து ₹99.50க்கு விற்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.