news

News July 8, 2024

யார் இந்த அருண் ஐபிஎஸ்?

image

சென்னை புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் அஸ்தம்பட்டியை அடுத்த சின்ன திருப்பதியை சேர்ந்த இவர், 1998ல் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வு பெற்றார். கரூர், குமரி, திருப்பூர் மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றிய அவர், சென்னை துணை காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். காவல் பணியின் பெரும்பான்மை காலத்தை சட்டம் ஒழுங்கு பிரிவிலேயே பணியாற்றிய இவர், 2022இல் ஏடிஜிபி.யாக பதவி உயர்வு பெற்றார்.

News July 8, 2024

சிம்பு படத்தில் இருந்து விலகிய தயாரிப்பு நிறுவனம்

image

நடிகர் சிம்புவின் 48ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகவும், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பதாகவும் சுமார் ஓராண்டுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் அதிகமானதால், தயாரிப்பு நிறுவனம் படத்தில் இருந்து விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு படத்தை கைமாற்றும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

News July 8, 2024

கலந்தாய்வில் 3,000 ஆசிரியர்கள் இடமாற்றம்

image

ஜூலை 1ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் என ஒன்றியம், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டத்திற்குள்ளான பணியிட மாறுதல் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து, இன்று முதல் பள்ளிக்கல்வித்துறையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

News July 8, 2024

பேருந்து விபத்தில் 40 மாணவர்கள் காயம்

image

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில், இன்று காலை பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பேருந்தை அதி வேகமாக ஓட்டியது, அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது, சாலையின் மோசமான நிலை ஆகியவையே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News July 8, 2024

ஆதார் அட்டை தொலைந்து விட்டதா? (1/3)

image

ஆதார் கார்டை தொலைத்து விட்டு, அதை திரும்ப பெறுவது குறித்து தெரியாமல் சிலர் இருப்பர். அவர்களுக்கான ஆலோசனையே இது. ஆதார் எண், ஆதாருக்கு கொடுக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவை இருந்தால், நாமே இதற்கு தீர்வு காணலாம். <>https://uidai.gov.in/en/<<>> இணையதளம் சென்று, இடதுபுறம் மேலே உள்ள MY Aadhaar பகுதியை அழுத்த வேண்டும். பிறகு, புதிதாக திறக்கும் பக்கத்தில் Retrieve EID / Aadhaar number என்பதை அழுத்த வேண்டும்.

News July 8, 2024

ஆதார் அட்டை தொலைந்து விட்டதா? (3/3)

image

தொலைந்த ஆதாருக்கு பதில், புதிய அட்டைக்கு அருகிலுள்ள ஆதார் சேவை மையம், இ-சேவை மையம் சென்று விண்ணப்பிக்கலாம். ஆதார் எண், மொபைல் எண்ணுடன் சென்று, விண்ணப்பம் பூர்த்தி செய்து, பயோமெட்ரிக்ஸை பதிவிட்டு கட்டணம் செலுத்த வேண்டும். இது முடிந்ததும், உங்கள் வீட்டுக்கு தபாலில் ஆதார் அனுப்பப்படும். அதேபோல், அந்த மையத்தில் பிளாஸ்டிக் ஆதாருக்கு விண்ணப்பித்து அதனைப் பெற்றும் பயன்படுத்தலாம்.

News July 8, 2024

ஆதார் அட்டை தொலைந்து விட்டதா? (2/3)

image

பின்னர் திறக்கும் பக்கத்தில் பெயர், மொபைல் எண், கேப்ட்சாவை உள்ளிட்டதும் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை பதிவிட்டதும் மொபைல் எண்ணுக்கு ஆதார் எண், என்ரோல் எண் வரும். இதை குறித்து கொண்டு, பிறகு Download Aadhaar பகுதிக்கு வர வேண்டும். அங்கு ஆதார் எண், கேப்ட்சாவை பதிவிட வேண்டும். அப்படி பதிவிட்டதும் மொபைல் எண்ணுக்கு மீண்டும் ஓடிபி வரும். அதை உள்ளிட்டதும் ஆதார் பதிவிறக்கமாகும்.

News July 8, 2024

ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடுப்பது எப்படி?

image

விவசாயம், மட்பாண்டம் செய்வதற்கு ஏரி, குளங்களில் இலவசமாக வண்டல், களிமண் எடுக்க அனுமதித்து முதல்வர் ஸ்டாலின் ஆணை வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று முதல் <>tnesevai.tn.gov.in <<>> என்ற இணையதளத்தில் இலவச மண் எடுக்க அனுமதிகோரி விண்ணப்பிக்கலாம். அதை மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக தாசில்தார்கள் சரிபார்த்து மண் எடுக்க அனுமதியளிப்பர். அதன்பிறகு ஏரி, குளங்களில் மண் எடுக்கலாம்.

News July 8, 2024

T20WC பரிசு: ₹125 கோடியில் யார் யாருக்கு எவ்வளவு?

image

இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதற்காக BCCI ₹125 கோடி பரிசுத்தொகை வழங்கியது. இதில் தலைமை பயிற்சியாளர் உள்பட 15 வீரர்களுக்கு தலா ₹5 கோடி வழங்கப்பட உள்ளது. பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் பயிற்சியாளர்களுக்கு தலா ₹2.5 கோடி, தேர்வு குழு உறுப்பினர்களுக்கு தலா ₹1 கோடி, உதவி பணியாளர்களுக்கு தலா ₹2 கோடி, 4 ரிசர்வ் வீரர்களுக்கு தலா ₹1 கோடியும் வழங்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

News July 8, 2024

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்

image

தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, 10ஆம் தேதி முதல் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் மாலை (அ) இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

error: Content is protected !!