India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் ஸ்மிருதி மந்தனா (27), தன்னை குறித்து கிசுகிசுக்கப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் பலாஷ் முச்சால் (29) என்பவரை காதலித்து வந்த நிலையில், 5 ஆண்டுகள் கழிந்ததை இருவரும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை அவரது காதலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதற்கு 3 இதய இமோஜிக்களை வெளியிட்டு மந்தனா ரியாக்ட் செய்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மாலை 5.30 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், தென்காசி, திருவள்ளூர் மற்றும் வேலூரில் மிதமான மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனம் மாறாமல் இருக்க வோடாபோன் ஐடியா (Vi) ஏற்கெனவே பல சலுகை வழங்கி வருகிறது. இந்நிலையில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதால், அந்த சலுகையை தானியங்கி குரல் மூலம் நினைவுபடுத்தி வருகிறது. ₹239- ₹3,199 வரையிலான திட்டங்களை ரீசார்ஜ் செய்திருந்தால், 130 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு மாத கடைசியிலும் தலா 10 ஜிபி டேட்டா வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
“G” என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால், சில தனிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கக்கூடும் என நியூமராலஜியில் கூறப்பட்டுள்ளது. அவை என்னென்ன? *எல்லா விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்வார்கள் *எதிலும் திருப்தி அடைய மாட்டார்கள் *ஆர்வமுள்ள விஷயங்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள விரும்புவர் *ஒருவித நிச்சயதன்மை அற்றவராக இருப்பார்கள் *கவனமாகத் தேர்ந்தெடுத்து, அதை சரியானதாக மாற்ற முயல்வார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட 3 நாள்களில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இக்கொலையை தடுக்க தவறியதால் இடமாறுதலா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், சென்னையில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறியதாகக் கூறி, முன்பே பணியிட மாறுதலுக்குள்ளாக வேண்டியிருந்ததாகவும், ஆனால் துணை ஆணையர் அரவிந்த் பணியிடம் மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜூலை 13இல் அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வாழை இழையில் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக உடல்நல ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். * வாழை இலையில் உள்ள குளோரோபிஃல் அல்சரை தடுக்கும் * ரத்தத்தை சுத்திகரிக்கும் * சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும் *பசியை நன்குத் தூண்டும் *வாழை இலையில் தொடர்ந்து உணவருந்தி வந்தால் தோல் பளபளப்பாகும் *உடல் நலம் பெறும் *மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் முற்றிலும் நீங்கும்.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியானது. சிறுமி பாலியல் வன்கொடுமையை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான காட்சியமைப்புகளுடன் படமாக்கப்பட்டதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் ₹100 கோடியை இத்திரைப்படம் வசூலித்தது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 12ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 12 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 22 பேர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். கடந்த 10 நாள்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானோர் குடும்பத்திற்கு தலா ₹4 லட்சம் வழங்க அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மின்னல் அடிக்கும் போது பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலம், கடல் பகுதிகள் தனித்தனி அளவுகோலில் அளவிடப்படுகின்றன. நிலப்பகுதி மைல் என்ற கணக்கிலும், கடல் பகுதி கடல் மைல் என்ற கணக்கிலும் கணக்கிடப்படுகின்றன. மைல் என்பது கிலோ மீட்டர் கணக்கில் 1,609 மீட்டர் ஆகும். கடல் மைல் எனில் கிலோ மீட்டர் கணக்கில் 1,852 மீட்டர் ஆகும். மைல் என்பது அடிக்கணக்கில் 5,280 அடியாகும். கடல் மைல் என்பது அடிக்கணக்கில் 6,076 அடியாகும்.
Sorry, no posts matched your criteria.