news

News July 8, 2024

PMAY திட்டத்தில் யாருக்கெல்லாம் வீடு?

image

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில், சொந்த வீடு கட்ட ஆண்டுக்கு 6.50% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. வயது வந்த ஆண் உறுப்பினர் இல்லாத குடும்பம், நிலமற்ற குடும்பங்கள், சாதாரண வேலை செய்வோர், 25 வயதிற்கு மேற்பட்ட கல்வியறிவற்ற குடும்ப உறுப்பினர்களை கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ₹3-6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். pmaymis.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News July 8, 2024

விஷச்சாராய விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் வேலு என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் விஷச்சாராயம் குடித்ததில், 65க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த விவகாரத்தில் இதுவரை 10க்கும் அதிகமானோர் கைதான நிலையில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மெத்தனால் கலந்து சாராயம் விற்பனை செய்துவந்த வேலு தற்போது கைதாகியுள்ளார்.

News July 8, 2024

ரஜினியின் ‘கூலி’ கெட்டப் வைரல்

image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரஜினி தனது கேரவனுக்குள் சாமியாருடன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் இருக்கும் ரஜினியின் கெட்டப்பை, 1991ல் வெளிவந்த தர்மதுரை படத்துடன் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.

News July 8, 2024

மத்திய அரசு வேலை: 17,727 காலியிடங்கள்

image

மத்திய அரசுத்துறைகளில் 17,727 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு நிலை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் 18-30 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், ஜூலை 24ஆம் தேதிக்குள் <>https://ssc.gov.in/<<>> என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 8, 2024

அமைச்சராக பதவியேற்ற சம்பாய் சோரன்

image

சிறையில் இருந்த ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் 28ஆம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது. அவர் சிறையில் இருந்தபோது சம்பாய் சோரன் முதல்வராக இருந்தார். ஹேமந்த் ஜாமினில் வந்ததும், சம்பாய் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 4 ஆம் தேதி முதல்வராக ஹேமந்த் பதவியேற்றார். இந்நிலையில், சம்பாய் சோரன் உள்பட 11 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். அதில் 3 பேர் புதுமுகங்கள்.

News July 8, 2024

வீட்டு உபயோக சிலிண்டரில் QR கோடு

image

வீட்டு உபயோக சிலிண்டர்கள், கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க QR குறியீடு முறையை பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதனால், கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை கட்டுப்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்த அவர், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார். முன்னதாக, மானிய விலை சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 8, 2024

பொன்முடி வழக்கில் ஒருவர் பிறழ் சாட்சியம்

image

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியமாக மாறியுள்ளார். அரசு தரப்பு சாட்சிகளான 34 பேரில், 27 பேர் ஏற்கெனவே பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜரான முன்னாள் கிராம உதவியாளர் மணி, சம்பவத்தன்று அரசு அதிகாரிகளின் அறிவுரைப்படி சோதனைக்கு சென்றதாகவும், சோதனை முடிந்த பின்பு வற்புறுத்தலால் கோப்புகளில் கையெழுத்திட்டதாகவும் பிறழ் சாட்சியமளித்துள்ளார்.

News July 8, 2024

கோப்பை ரோஹித் ஷர்மாவுக்கானது: குல்தீப்

image

டி20 உலகக்கோப்பை இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு சொந்தமானது என சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். வெற்றிக்காக ரோஹித் திட்டமிட்ட விதம், பேட்டிங்கில் முன் நின்று அணியை வழிநடத்தியது ஆகியவற்றுக்காக கோப்பை அவருக்குத் தான் வழங்கப்பட வேண்டும் என குல்தீப் தெரிவித்துள்ளார். மேலும், போட்டியின் போது அவர் அணியினை அணுகிய விதம், கொடுத்த ஊக்கம் பற்றியும் யாதவ் பேசியுள்ளார்.

News July 8, 2024

மாலை 6 மணி முதல் தடை

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இந்நிலையில், வெளியூர் மக்கள் விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இன்று 6 மணி முதல் 10 ஆம் தேதி மாலை 6:30 மணி வரை தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

News July 8, 2024

குற்றவியல் சட்டங்களை ஆராய தமிழக அரசு குழு அமைப்பு

image

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆராய தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டங்களில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டுவந்து, சமீபத்தில் அமல்படுத்தியது. இதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலில், மாநில அளவில் மேற்கொள்ளவேண்டிய திருத்தம் குறித்து ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!