India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சென்ட்டுக்கு மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் விஐபிக்கள் பலர் வருவார்கள் என்பதால் ஜூலை 12 – 15 அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இந்த திருமணத்தை பொது நிகழ்ச்சி என மும்பை போக்குவரத்து துறை குறிப்பிட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பதிவாளர் & பங்கு பரிமாற்ற முகவரை மாற்றியுள்ளதாக SBI கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், பதிவாளர் & பங்கு பரிமாற்ற முகவராக இதுவரை செயல்பட்டு வந்த அலங்கிட் அசைன்மெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பதிலாக, KFin டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஜூலை 5 முதல் அமலுக்கு வந்துள்ளதாக வாடிக்கையாளர்கள், பங்குதாரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்கள் யார் என்பது செல்வப்பெருந்தகைக்கு தெரியும் என அண்ணாமலை கூறியுள்ளார். இந்த வழக்கில் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என அவர் குற்றஞ்சாட்டியதற்கு பதிலளித்த அண்ணாமலை, அவரே ஒரு முன்னாள் ரவுடி என்பதால் இந்த கொலையை யார் செய்திருப்பார்கள் என செல்வப்பெருந்தகைக்கு தெரியும் என்றார். மேலும், கொலையாளிகள் குறித்த தகவலை அவரிடம் போலீசார் கேட்டுப் பெறலாம் எனவும் யோசனை கூறினார்.
பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை இணைக்கும் பணியில் சசிகலா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், முதற்கட்டமாக தென்காசி மாவட்டத்தில் ஜூலை 16 – 21ஆம் தேதி வரை (6 நாள்கள்) சட்டமன்றத் தொகுதி வாரியாக அதிமுக தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக அவரது தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்த அறிக்கையில் “அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பதில்லை என்று சீமான் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், 60 ஆண்டுகால குப்பையை, 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம் என திராவிட கட்சிகளை சீண்டிய அவர், திமுகவை அகற்றாமல் இந்தி மண்ணில் நல்ல அரசியல் இருக்காது. தமிழன் என்பது தான் எனது அடையாளம். நான் போதிக்கும் போது உங்களுக்கு புரியாது, பாதிக்கும் போது உங்களுக்கு புரியும் எனக் கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் பூபால நடேசன் இயக்கத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் “கான்ஸ்டபிள் நந்தன்” படம் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. டைட்டிலில் இடம்பெற்றுள்ள ‘நந்தன்’ என்ற பெயரில் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. இதனால், இப்படம் அடித்தட்டு மக்களின் கதையாக இருக்கும் என்றும், அதுபோன்ற கதாபாத்திரங்களில் யோகி சிறப்பாக நடிப்பார் எனவும் நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ( இரவு 10 மணி வரை) 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரியில் இடி, மின்னலுடன் கனமழையும், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர், வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். எனவே, இரவில் சாலையில் செல்வோர் கவனமாக செல்லவும்.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் e-KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சரிபார்ப்பை முடிக்காதவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பயனாளிகள் அருகில் உள்ள பொது விநியோக முறை விற்பனையாளர்களிடம் சென்று e-KYC அப்டேட் செய்து கொள்ளலாம்.
நாட்டில் 2.50 கோடி பேர் ரேஷன் பொருள்கள் பெற தகுதி இல்லாதவர்கள் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு நடத்திய கணக்கெடுப்பின்படி, வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்ட பலரும் ரேஷன் பொருள்களை பெறுவதாகவும், அவர்களுக்கு வழங்கப்படும் பொருள்கள் விரைவில் நிறுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் சுமார் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகிறது.
மும்பையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியே வரவேண்டாம் என அம்மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டே கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கடற்கரை அருகில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.