India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் அஜித்தை போல் நடிகை மஞ்சு வாரியரும் பைக் டிராவல்கள் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளார். இதற்காகவே விலை உயர்ந்த BMW பைக் ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார். தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது, தனது நண்பர்களுடன் இணைந்து தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்படியான ஒரு பைக் பயணத்தின்போது, எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
பயணியரின் லக்கேஜ்களை அதிக எண்ணிக்கையில் தவறவிடுவதில், Air India நிறுவனம் உலகளவில் முதலிடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. லக்கேஜ் லாசர்ஸ்.காம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூனில் 50,001 லக்கேஜ்களை Air India தவறவிட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு 36 லக்கேஜ்களில், ஒரு லக்கேஜை Air India தவறவிட்டுள்ளது. வெஸ்ட் ஜெட் ஏர்லைன்ஸ், ஏர் லிங்க்ஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஹிந்து மதத்தை ராகுல் காந்தி அவமதிக்கவில்லை என உத்தரகண்ட் ஜோதிர்மட சங்கராச்சார்யா அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய ராகுல்காந்தி ஆற்றிய உரையை முழுமையாகக் கேட்டதாகக் கூறிய அவர், அந்த உரையை சிலர் வேண்டுமென்றே திரித்து பொதுவெளியில் பரப்புகின்றனர் என்றார். ஹிந்து மதத்தில் வன்முறை, வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என ராகுல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து
▶ குறள் எண்: 1
▶குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
▶பொருள்: தொல்தமிழ் எழுத்துக்கள் எல்லாம் ‘அ’ எனும் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல ஆதியில் பகுக்க முடியாத வானத்தை (பகவன்) உலகில் உள்ள உயிர்கள் அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், வழக்கில் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால் வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டு, ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
கல்கி 2898 AD திரைப்படத்தில், ‘கைரா’ கதாபாத்திரத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகை அன்னா பென் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவர் தனது இன்ஸ்டா பதிவில், இந்திய சினிமாவின் பெரும் நட்சத்திரங்களுடன் நடிக்க வாய்ப்பளித்த நாக் அஸ்வினுக்கு நன்றி. ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இப்படம் என் திரைவாழ்வில் மைல்கல். ‘கைரா’ எனக்களித்த இடத்தைத் தக்க வைக்க தொடர்ந்து கடினமாக உழைப்பேன் எனக் கூறியுள்ளார்.
அறுவடைக் காலத்தில் ஏற்பட்ட வெப்பம் அலை, மழை வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள், 20 பூச்சிக்கொல்லிகளை தடை செய்த அரசின் முடிவு உற்பத்தியை பாதித்துள்ளதாக மூத்த தேயிலை தோட்டக்காரர் பிரபாத் பெஸ்போருவா கூறியுள்ளார். இதன் காரணமாக தேயிலை உற்பத்தி, 90.92 மில்லியன் கிலோவாக (30%) சரிந்துள்ளது. எதிர்வரும் காலத்தில் தேயிலை விலை கடந்த ஆண்டை விட 20% வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உழைக்கும் இந்திய மக்களின் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக தேநீர் கருதப்படுகிறது. இந்நிலையில், அதன் மூலப் பொருளான தேயிலை விலை (கிலோ ₹217) தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால், அதன் விளைவாக தேநீர் விலையும் உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக தேயிலை உற்பத்தி பாதிப்பு கூறப்படுகிறது. அஸ்ஸாம் போன்ற இடங்களில் தேயிலை உற்பத்தி குறைந்ததாலும், அதன் தேவை அதிகரித்ததாலும் விலை உயர்ந்துள்ளது.
இன்று (ஜூலை 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
மத்திய, மாநில அரசு விளையாட்டுகளில் பாரபட்சம் காட்டுகிறது என்று இந்திய பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் நட்சத்திரங்களை கௌரவிக்கும் மத்திய, மாநில அரசுகள், 2022இல் தாமஸ் டிராபியை வென்ற தனது முயற்சியை கண்டுகொள்ளவில்லை என வருத்தப்பட்ட அவர், தாமஸ் டிராபி என்பது உலகக் கோப்பையை வெல்வதற்கு சமமானது எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.