India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை என சட்டம், ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகக் கூறிய அவர், சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும் என்றால் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அரசியல் கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் பதிலளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று எதன் அடிப்படையில் சொல்கிறார்கள்?. புள்ளி விவரங்கள்படி, பார்த்தால் குறைவான குற்றச்சம்பவங்களே நடந்திருக்கிறது. இருப்பினும், ரவுடியிசத்தை கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்” எனப் பதிலளித்துள்ளார்.
தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் & கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, தேங்காயை மதிப்பு கூட்டும் பொருள்களாக மாற்ற வேண்டும் எனக் கூறிய அவர், சிறு, குறு விவசாயிகள் அரசிடம் கடன் பெறாமல் வருமானத்தை சேமிக்கும் வகையில் உற்பத்தியை அதிகரித்து வருவாயை பெருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் மோகனும் அர்ஜுனும் நீண்ட கால நண்பர்கள் என்பது சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். எந்தப் பெரிய முடிவுகள் என்றாலும் ஒருவர் மற்றொருவருடன் ஆலோசிக்கும் அளவுக்கு நெருங்கிய நண்பர்களான இருவரும் இணைந்து நடிக்க முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக இருவரும் சேர்ந்து கதைக்கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் பலவீனங்கள் உள்ளிட்ட நோய்களைப் போக்கும் ஆற்றல் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் ஆகியவற்றுக்கு உள்ளதென சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மூன்றையும் சுத்தம் செய்து, வறுத்து தூளாக்கி கலந்து வைத்து, ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப் பின் சுடுநீரில் போட்டு குடிக்க வேண்டும். 45 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகள் மலம், சிறுநீர் வழியே வெளியேறிவிடும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் (81) களத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வருகிறார். நேரடி விவாதத்தில் திணறியது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜெர்ரி நட்லர், ஜோ மாரேல்லே உள்ளிட்ட 10 எம்.பி.,க்கள் அதிபர் போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டும் என்று அவருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் போன்ற பிளாட்டான பிட்ச்களில் மட்டுமே அடித்து நொறுக்குவார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜூனைத் கான் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில், பிளாட்டான பிட்ச் கிடைத்ததால் அபிஷேக் ஷர்மா & ருதுராஜ் கெய்க்வாட் நன்றாக பேட்டிங் செய்தார்கள். அவர்கள் புதிதாக ஒன்றும் சாதித்து விடவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
சரத்பவார் தலைமையிலான என்.சி.பி., சரத் சந்திர பவார் கட்சி தேர்தல் நன்கொடை வசூலித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மஹாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் செலவுகளுக்கு நிதித் திரட்ட அனுமதிக் கோரி சரத்பவார் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை பரிசீலித்த ஆணையம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
*1401 – தைமூர் ஜலாய்ரித் சுல்தானகத்தைத் தாக்கி பக்தாத்தை அழித்தார். *1755 – பிரிட்டன் படைகளை பென்சில்வேனியாவில் அமெரிக்கப் பழங்குடிப் படையினர் தோற்கடித்தனர். *1863 – ஆசியாவின் மிகப் பழமையான பங்குச் சந்தையான CSE உருவாக்கப்பட்டது. *1972 – சோவியத் யூனியன் நிலத்தடியில் அணு சோதனை நடத்தியது. *2006 – அக்னி III ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது. *2011 – தெற்கு சூடான் தனி நாடானது.
நடிகர் அஜித்தை போல் நடிகை மஞ்சு வாரியரும் பைக் டிராவல்கள் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளார். இதற்காகவே விலை உயர்ந்த BMW பைக் ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார். தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது, தனது நண்பர்களுடன் இணைந்து தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்படியான ஒரு பைக் பயணத்தின்போது, எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.