news

News April 27, 2025

ஆசை வார்த்தை கூறி வீழ்த்த முடியாது.. திருமா உறுதி

image

பாஜக, பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என்ற ஆசை வார்த்தை கூறி தன்னை வீழ்த்த முடியாது என்றும், அதிமுகவைத் தொடர்ந்து, விஜய் கட்சி திறந்து வைத்த கதவையும் தாம் மூடி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணியிலுள்ள விசிக, தேர்தலுக்கு முன் அணி மாறும் என கூறப்பட்ட நிலையில் திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார்.

News April 27, 2025

J&K : தீவிரவாதிகளால் ஒருவர் சுட்டுக்கொலை

image

J&K-ன் குப்வாரா மாவட்டத்தின் கண்டி காஷ் பகுதியில், தனது வீட்டில் இருந்த சமூக செயற்பாட்டாளர் குலாம் ரசூல் மாக்ராய் (45) தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும், இதற்கான காரணம், என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் இல்லை. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

News April 27, 2025

பஹல்காம் தாக்குதல் விசாரணை: என்ஐஏவிடம் ஒப்படைப்பு

image

26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதல் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. தாக்குதல் நடந்த பகுதியில் 60 தீவிரவாதிகள் வரை இருப்பதாகவும், அவர்களில் 14 தீவிரவாதிகளின் அடையாளங்கள் முகவரிகளுடன் கிடைத்துள்ளதாகவும் புலனாய்வு அமைப்பின் அறிக்கை கூறுகிறது. மேலும், 3 பேர் அடங்கிய என்ஐஏ குழு, புலனாய்வு அமைப்பின் தகவல்களை எடுத்துக் கொண்டது.

News April 27, 2025

கிட்டத்தட்ட வெளியேறிய நடப்பு சாம்பியன் KKR!

image

நேற்றைய PBKS vs KKR மேட்ச் மழையால் கைவிடப்பட்டதால், KKR-ன் பிளே – ஆப் கனவு கிட்டத்தட்ட கலைந்து விட்டது. ஆம், 9 மேட்சில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள KKR, 7 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இனி வரும் அனைத்து மேட்சையும் வென்றால், KKR 17 புள்ளிகளை பெறும். ஆனால், அப்போதும் மற்ற சில அணிகளின் தோல்வியை வைத்துதான் பிளே – ஆப் வாய்ப்பு KKR-க்கு கிட்டும். எந்த 4 அணிகள் பிளே- ஆப்பிற்கு முன்னேறும்?

News April 27, 2025

சோஷியல் மீடியா பெண் பிரபலம் காலமானார்

image

சோஷியல் மீடியா பெண் பிரபலம் மிஷா அகர்வால் திடீரென உயிரிழந்தது, அவரது பாலோயர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் சில தினங்களில் 25ஆவது பிறந்தநாளை அவர் கொண்டாட இருந்தார். அவரது இறப்பிற்கான காரணங்கள் தெரியவில்லை . மேலும் அவர் தனது துடிப்பான பதிவுகளால் 3 .5 லட்சம் பாலோயர்களை இன்ஸ்டாவில் பெற்றிருந்தார். அவரது மறைவு குறித்து கேள்விப்பட்டு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 27, 2025

ஆலப்புழா ஜிம்கானா இயக்குநர் கஞ்சா வழக்கில் கைது!

image

சமீபத்தில் ஹிட்டான ‘ஆலப்புழா ஜிம்கானா’, ‘தள்ளுமாலா’ படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளனர். கொச்சியில் நடைபெற்ற சோதனையில், 1.6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூவரும் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர். இது, மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே, நடிகர் ஷைன் டாமும் போதைபொருள் வழக்கில் சிக்கி இருக்கிறார்.

News April 27, 2025

பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இன்று வரை கெடு

image

பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை இன்றைக்குள் வெளியேற்ற அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது. இதனை அனைத்து மாநில முதல்வர்களிடமும் உள்துறை அமைச்சர் அமித்ஷா போனில் வலியுறுத்தியுள்ளார்.

News April 27, 2025

வங்கதேச இடைக்கால அரசைக் கவிழ்க்க திட்டம்?

image

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்தி கைது செய்ய வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் 5 மூத்த தலைவர்கள், வங்கதேச சட்டம் ஒழுங்கு நிலையை வைத்து, யூனுஸின் இடைக்கால அரசைக் கவிழ்க்க லண்டனில் வைத்து திட்டம் தீட்டியுள்ளனர். இருப்பினும், மாணவர்கள் மத்தியில் ஹசீனாவுக்கு எதிர்ப்பே அதிகம் உள்ளது.

News April 27, 2025

1 சவரன் தங்கம் ரூ.72,040ஆக விற்பனை

image

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை மாற்றப்படவில்லை. 3ஆவதாக நாளாக அதே விலையிலேயே இன்றும் விற்கப்படுகிறது. அதன்படி, 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,823ஆகவும், 1 சவரன் ரூ.78,584ஆகவும் விற்கப்படுகிறது. அதேபோல், 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,005ஆகவும், 1 சவரன் ரூ.72,040ஆகவும் விற்கப்படுகிறது. அட்சய திரிதியை நெருங்குவதால் விலை அதிகரிக்காது என்றே கூறப்படுகிறது. SHARE IT.

News April 27, 2025

IPL: இன்று டபுள் டமாக்கா..

image

IPL-ல் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3.30-க்கு தொடங்கும் முதல் போட்டியில் MI vs LSG மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் 9 போட்டிகளில் தலா 5 வெற்றிகளுடன் LSG 6-வது இடத்திலும், MI 5-வது இடத்திலும் உள்ளது. இரவு 7 மணிக்கு தொடங்கும் 2-வது போட்டியில் RCB vs DC அணிகள் மோத உள்ளன. 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் DC 2-ம் இடத்திலும், 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் RCB 3-ம் இடத்திலும் உள்ளது.

error: Content is protected !!