news

News April 17, 2025

அட்சய திருதியில் ஏன் தங்கம் வாங்க வேண்டும்?

image

சித்திரை மாத அமாவாசைக்கு அடுத்த வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் இந்த நாளில், தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு. இந்த நாளில் செய்யப்படும் புதிய தொடக்கங்கள், முதலீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும் என்பது நம்பிக்கை. வரும் ஏப்ரல் 30-ம் தேதி இந்த திருதியை வருகிறது.

News April 17, 2025

சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் – வலுக்கும் கண்டனம்

image

நாங்குநேரியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சாதிய தாக்குதலுக்குள்ளான மாணவர் சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இன்ஸ்டா மூலம் பழகிய நபர்கள், சின்னத்துரையை தனியாக அழைத்து தாக்கியதாகவும் முந்தைய தாக்குதலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சின்னத்துரையை தாக்கியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என கண்டன குரல்கள் வலுத்துள்ளன.

News April 17, 2025

பிரபல நடிகை நோரா அவுனர் காலமானார்!

image

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னணி நடிகையும், பாடகருமான நோரா அவுனர்(71) காலமானார். ‘சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, இவரின் ‘Flowers of the City Jail’, Andrea, ‘What is It Like to be a Mother?’ போன்ற படங்கள் உலகளவில் பெரிய ஹிட்டடித்தவை. இவரின் கலைப்பணிக்காக, பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான National Artist for Film and Broadcast Arts விருது, 2022-ல் இவருக்கு வழங்கப்பட்டது. #RIP.

News April 17, 2025

EPF பணத்தை எடுப்பது எப்படி?

image

ஆன்லைன்: EPFO வலைதளத்திற்குள் [www.epfindia.gov.in](https://www.epfindia.gov.in) செல்லவும். UAN மெனுவில் “Claim” → “Request for Advance” க்குச் செல்லவும். காரணத்தைத் தேர்ந்தெடுத்து, விண்ணப்பிக்கவும். நீங்கள், வங்கிக் கணக்கிற்கான Cheque Leaf-ஐ அப்லோட் செய்ய வேண்டியிருக்கலாம். ஆஃப்லைன்: உங்களுக்கு அருகிலுள்ள EPFO அலுவலகத்திற்குச் சென்று, படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும். 20 நாட்கள் வரை ஆகலாம்.

News April 17, 2025

ஜுனியர் என்டிஆருக்கு என்னாச்சு? ரசிகர்கள் ஷாக்!

image

RRR படத்தில் கட்டுமஸ்தான உடலமைப்புடன் கலக்கிய ஜுனியர் என்டிஆரின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களுடன் எடுத்த புகைப்படத்தில் அவர் ஒல்லியான தோற்றத்துடன் காணப்படுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் படத்திற்காக அவர் டயட் இருப்பதே புதிய மாற்றத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடலமைப்பை ஜுனியர் என்டிஆர் மாற்றி வருகிறாராம்.

News April 17, 2025

காலையில் 30 நிமிடங்களுக்கு இப்படி செய்தால் ..!

image

வாக்கிங் 10,000 ஸ்டெப்ஸ்தான் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 30 நிமிடங்களுக்கு நடைபயிற்சி செய்யுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இது உடல் பருமன், வகை 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றின் அபாயத்தை குறைக்கும் எனவும் கூறுகின்றனர். ஆனால், நடக்கும்போது, கொஞ்சம் சீரான வேகத்தோடு நடக்க வேண்டும். இது உடலின் சுவாசம் மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. SHARE IT.

News April 17, 2025

அட்சய திருதியை: தங்கம் வாங்க புதிய விதிகள் அறிமுகம்

image

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதால், <<16124391>>அட்சய திருதியை<<>>க்கு தங்கம் வாங்க, நகைக்கடைகள் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளன. அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க வரும் போது, முன்பதிவு செய்திருந்த தினத்திலிருந்து அட்சய திருதியை வரை, எந்த நாளில் விலை குறைவாக உள்ளதோ, அந்த விலைக்கு நகை வாங்கிக் கொள்ளலாம் என நகைக் கடைகள் அறிவித்துள்ளன. அதன்படி, பலரும் ஆர்வத்துடன் முன்பணம் செலுத்தி வருகின்றனர்.

News April 17, 2025

3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

image

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(MET) கணித்துள்ளது. சென்னை, விருதுநகர், மதுரை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவில் பரவலாக மழை பெய்துள்ளது. அதேநேரம் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும் என்பதால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்.

News April 17, 2025

மாநில சுயாட்சி இதற்குத்தான் தேவை: CM ஸ்டாலின்

image

மாநில சுயாட்சி ஏன் அவசியம் என CM ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே திமுகவின் அடிப்படை கொள்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய பாஜக அரசு மாநில அரசுகளை முடக்கப் பார்க்கிறது எனவும், மாநிலங்களின் மொழி, கலாசாரங்களை அழிக்கப் பார்ப்பதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநில சுயாட்சி உரிமைகளை பாதுகாக்க அண்மையில் அவர் குழு அமைத்திருந்தார்.

News April 17, 2025

துப்பாக்கிச் சுடுதல்: பதக்க வேட்டையில் இந்தியா..!

image

பெருவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளினர். மகளிருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் சுருச்சி சிங் 243.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அதே பிரிவில், 242.3 புள்ளிகள் உடன் மனு பாக்கர் வெள்ளி வென்றார். ஆடவருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி வெண்கலப் பதக்கம் வென்றார்.

error: Content is protected !!