news

News March 30, 2025

நண்பன் மனைவியிடம் பழக்கம்.. RCB ரசிகர் கொலை

image

சென்னையில், CSK தோல்வியை கிண்டல் செய்த RCB ரசிகர் ஜீவரத்தினத்தை, சக நண்பர்களே அடித்துக் கொன்றதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில், பெண் விவகாரத்தில் நடந்த கொலை என தெரியவந்துள்ளது. நண்பன் அப்புவின் மனைவியிடம் ஜீவரத்தினம் பழகி வந்திருக்கிறார். இதை அறிந்த அப்பு, ஜீவரத்தினத்தை RCB வெற்றியை கொண்டாடுவதுபோல் வரவழைத்து நண்பர்கள் உதவியுடன் கொலை செய்துள்ளார்.

News March 30, 2025

ஏடிஎம் கட்டண உயர்வால் ஏழைகளுக்கு நெருக்கடி: CM

image

ATM பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏடிஎம் மையங்களில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை ₹23ஆக உயர்த்துவது மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார். மேலும், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட ஏழைகள்தான் இதில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News March 30, 2025

இந்த ட்ரெண்டிங் Ghibli ஸ்டைல் இமேஜ் பெறுவது எப்படி?

image

நெட்டிசன்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ள Ghiblify ஸ்டைலில் போட்டோவைப் பெற: முதலில் ChatGPTயை Open செய்யவும் *அதில், ‘+’ என்ற பட்டனை அழுத்தி, நீங்கள் விரும்பும் போட்டோவை அப்லோட் செய்யவும். அதற்கு கீழ், ‘Ghiblify this’ என்ற கமெண்டை பதிவிடவும். அவ்வளவு தான். AI அதன் வேலையை செவ்வனே செய்து, உங்களுக்கு அழகிய Ghiblify ஸ்டைல் போட்டோவைக் கொடுக்கும். சும்மா படிக்காம நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

News March 30, 2025

7 புதிய நகராட்சிகளுக்கான அரசாணை வெளியீடு

image

தமிழகத்தில் புதிதாக 7 நகராட்சிகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை மற்றும் சங்ககிரி நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் புதிதாக 7 நகராட்சிகளை உருவாக்கியதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 30, 2025

ஒற்றுமையின் உணர்வை தூண்டட்டும்: CM வாழ்த்து

image

உகாதி திருநாளை கொண்டாடும் தெலுங்கு, கன்னட பேசும் திராவிட சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மொழி மற்றும் எல்லை நிர்ணயம் போன்ற பிரச்னையை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதே நமது பலம் எனவும் X பதிவில் அவர் கூறியுள்ளார். உகாதி பண்டிகை நமக்குள் ஒற்றுமையின் உணர்வைத் தூண்டட்டும் எனவும் முதல்வர் பதிவிட்டுள்ளார்.

News March 30, 2025

கே.ஏ.செங்கோட்டையனுக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு?

image

கே.ஏ.செங்கோட்டையனுக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக் காலமாக இபிஎஸ் இடமிருந்து விலகி இருக்கும் அவர், ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க முயல்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லி சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேசிய அவருக்குப் பாதுகாப்பு அதிகரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News March 30, 2025

ஒரே மாதத்தில் ₹3,360 உயர்ந்த தங்கம்

image

சென்னையில் தங்கம் விலை இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹3,360 உயர்ந்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி 22 கேரட் ஒரு கிராம் ₹7,940க்கும், சவரன் ₹63,520க்கும் விற்பனையானது. பின்னர், கிடுகிடுவென அதிகரித்து 30 நாள்களில் ஒரு கிராமுக்கு ₹420 உயர்ந்துள்ளது. இதனால், 8 கிராம் அடங்கிய ஒரு சவரன் இன்று ₹66,880க்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் ஒரு சவரன் ₹50,200க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

News March 30, 2025

அன்பு, அமைதி நிலைக்கட்டும்: விஜய் உகாதி வாழ்த்து

image

தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகள் அனைவரும் தனது மனமார்ந்த உகாதி வாழ்த்துகள் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். X தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில் இந்த புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்க வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News March 30, 2025

₹500 கோடிக்கு Income Tax மோசடி

image

தமிழகத்தில் மிகப்பெரிய வருமான வரி மோசடி நடந்துள்ளதாக IT-யின் புலனாய்வு பிரிவு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. பொது & தனியார் நிறுவன ஊழியர்கள் போலி ஆவணங்கள் மூலம் ₹500 கோடிக்கு வருமான வரி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. குறிப்பாக, 22,500 பேர் போலி ஆவணங்கள் மூலம் ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

News March 30, 2025

இன்று முதல் இந்த ராசிக்கு ராஜயோகம்

image

தனுசு ராசிக்கு சனி பகவான் நான்காம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். இதனால், இன்றைய நாளில் இருந்தே தனுசு ராசிக்கார்களுக்கு ராஜயோகம் அடிக்கப்போகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். நீண்ட காலமாக சொந்த வீடு கனவில் இருப்பவர்கள், இந்த காலத்தில் சொந்த வீடு கட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. பண வரவு திருப்தியாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சேமிப்பு பல மடங்கு உயரும்.

error: Content is protected !!