news

News January 13, 2026

ஜன.20-ல் திமுக மா.செ., கூட்டம்

image

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், ஜன.20-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொ.செ., துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில், தேர்தல் களம் எப்படி உள்ளது, பூத் வாரியான கருத்தரங்கங்கள் குறித்த நிலவரம், தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News January 13, 2026

பாஜக தேசிய தலைவராகும் நிதின் நபின்

image

BJP-ன் அடுத்த தேசிய தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜன.19-ல் அவர் மனு தாக்கல் செய்வார் என்றும், போட்டியில்லாத நிலையில் ஜன.20-ல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் நடக்கும் இந்நிகழ்விற்கு பாஜக CM-கள், மாநில தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நபின் தற்போது BJP-ன் தேசிய செயல்தலைவராக உள்ளார்.

News January 13, 2026

‘நான் சாகப் போறேன்.. என் சாவுக்கு காரணம் இதுதான்’

image

பாகுபாடு ஒழிப்பை கற்றுத்தர வேண்டிய கல்லூரியிலேயே, நிறவெறி சர்ச்சையால் மாணவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பல் மருத்துவம் பயின்று வந்த யஷஸ்வினியிடம், கருப்பாக உள்ள ஒருவர் எப்படி டாக்டராக முடியும் என ஆசிரியர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த அவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கல்லூரி முதல்வர் உள்பட 5 பேர் மீது FIR பதிந்து போலீஸ் விசாரிக்கிறது.

News January 13, 2026

தித்திப்பான சர்க்கரை பொங்கல் ருசிக்க.. இதோ டிப்ஸ்

image

தமிழர் திருநாளான பொங்கல் அன்று எல்லோர் வீட்டிலும் சர்க்கரை பொங்கல் செய்வது வழக்கம். இதில் ருசியை அதிகரிப்பதற்கு சில டிப்ஸ் *தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட்டால் வற்றுவதற்கு கொஞ்சமாக ரவை சேர்க்கலாம் *தண்ணீர் அளவை குறைத்து பால் ஊற்றுங்கள் *அரிசி, பருப்பை வறுத்து பயன்படுத்தினால் பொங்கலின் வாசனை மணக்கும் *வெல்லம் சேர்க்கும் போது அத்துடன் கரும்பு சாறு ஊற்றி கிளறினால் பொங்கல் சூப்பராக இருக்கும்

News January 13, 2026

ரேஷன் கார்டு தொலைந்தாலும் பொங்கல் பரிசு

image

ரேஷன் கார்டு தொலைந்து போனவர்களும், புதிய ரேஷன் கார்டு நகலுக்கு விண்ணப்பித்துள்ளவர்களும் பொங்கல் பரிசை பெறலாம் என உணவு வழங்கல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்படி, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் (அ) கார்டு எண் இருந்தால் போதும். பாயிண்ட் ஆஃப் சேல் கருவியில் கார்டு ஸ்கேனிங்கிற்கு பதிலாக, கார்டு எண்ணை பதிவு செய்து, கை ரேகை வாயிலாக ஆதார் சரிபார்க்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும்.

News January 13, 2026

யாருக்கெல்லாம் தமிழக அரசின் விருது?

image

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் சமூக நீதிக்காகப் பாடுபட்ட சிறந்த ஆளுமைகளுக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ம் ஆண்டுக்கான பல்வேறு தலைவர்களின் பெயரிலான விருதுகளை பெறுவோரின் பட்டியலை அறிய, மேலே போட்டோக்களை ஸ்வைப் பண்ணுங்க.

News January 13, 2026

பள்ளிகளுக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை.. அரசு அறிவித்தது

image

புதுச்சேரியில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு ஜன.15 – 18 வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், போகிப் பண்டிகையை கொண்டாட ஏதுவாக நாளையும் (ஜன.14) விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் & அரசு அலுவலகங்களுக்கு 5 நாள்கள் பொங்கல் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்யும் விதமாக ஜன.31-ல் அரசு அலுவலகங்கள் செயல்படும்.

News January 13, 2026

கவலை வேண்டாம்: ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச சேவை

image

EPFO ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம். இந்த சான்றிதழை சமர்ப்பித்தால்தான் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும். இதுவரை சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்றால் 033-22029000 என்ற எண்ணுக்கு கால் செய்தால் போதும், அருகிலுள்ள தபால் நிலையத்தில் இருந்து நேரடியாக வீட்டிற்கு வந்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, சான்றிதழை சமர்ப்பித்துவிடுவார்கள்.

News January 13, 2026

சற்றுமுன்: இரவில் விஜய்க்கு அதிர்ச்சி

image

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக நேற்று (ஜன.12) டெல்லி CBI அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அப்போதும் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் CBI அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஜன.19-ல் மீண்டும் ஆஜராக விஜய்க்கு CBI சம்மன் அனுப்பியுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு பிறகு விஜய் ஆஜராகவுள்ளதால். அதற்கு முன்பு தனது தரப்பு வழக்கறிஞர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளாராம்.

News January 13, 2026

நடப்பு ஐபிஎல் சாம்பியனுக்கு வந்த சோதனை

image

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் IPL போட்டிகள் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு RCB அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அதன்பிறகு பாதுகாப்பு காரணங்களால் சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடக்கவில்லை. இந்நிலையில் RCB அணியின் Home Game-கள் நவிமும்பை (5 போட்டி), ராய்ப்பூருக்கு ( 2 போட்டி) மாற்றப்படவுள்ளன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

error: Content is protected !!