India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இவிஎம் வாக்குகளையும், விவிபாட் ஒப்புகை சீட்டையும் 100 சதவீதம் சரிபார்க்க முடியாது என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வு, ஏற்கெனவே தாங்கள் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கான எந்த காரணம் இல்லை என்ற கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸில் 2ஆவது பதக்கத்தை இந்தியா வென்றுள்ளதற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், மனு பார்க்கர், சரப்ஜோத் சிங்கிற்கு வாழ்த்துகள். 2 பேரும் சிறந்த திறனை வெளிப்படுத்தியுள்ளனர். குழுவாக இணைந்து சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்று பாராட்டியுள்ளார். இந்த வெற்றியை கண்டு, இந்தியாவே மகிழ்ச்சியில் உள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் <
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்ததாக, நடிகர் விஜய் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
பாரீஸ் 2024 ஒலிம்பிக்ஸில் கலப்பு இரட்டையருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பார்க்கர், சரப்ஜோத் சிங் இணை 16-10 என்ற கணக்கில் வென்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. ஏற்கெனவே மகளிர் தனிநபர் பிரிவில் மனு பார்க்கர் வெண்கலம் வென்றிருந்தார். ஆதலால் இது அவரின் 2ஆவது பதக்கம். இதன்மூலம் ஒரு ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற சாதனையை பார்க்கர் படைத்தார்.
மலை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி, வயநாடு நிலச்சரிவின் மூலம் அனைவரும் பாடம் கற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவித்த அவர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரயில்வேயில் 7,951 இளநிலை பொறியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. இதில் 7,934 இடங்கள் இளநிலை பொறியாளர்களுக்கானது. எஞ்சிய பணியிடங்கள், டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர், கெமிக்கல் மேற்பார்வையாளர் உள்ளிட்டவற்றுக்கானது. <
பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா 2வது பதக்கம் வென்றது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 2024 ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. இன்று கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியா, தென் கொரியா மோதின. இதில் இந்தியாவின் மனு பார்க்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. 10 மீ. மகளிர் ஒற்றையர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை மனுபார்க்கர் அண்மையில் வெண்கலம் வென்றிருந்தார்.
10ஆம் வகுப்பு படித்தோர் மற்றும் அதற்கும் குறைவாகப் படித்தோருக்கு மலேசியாவில் கட்டுமானப் பணியாளர், ஹெல்பர், வெல்டர் வேலைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வயது வரம்பு 22 – 50 வரை ஆகும். மாத ஊதியம் ₹27,746 – ₹49,547 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 1ம் தேதிக்குள் <
நாடாளுமன்றத்தில் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து, மீட்புப் பணிகளுக்கு உடனே ₹5,000 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கீடு செய்ய, கேரள எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நட்டா, நிலச்சரிவு விவகாரத்தில் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தற்போது அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்டு தேவையான சிகிச்சை அளிப்பதே முக்கியம் எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.