India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இடுப்பின் சுற்றளவை நோய் அபாயத்தின் குறிகாட்டியாக கருதலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியத்தை அளவிட, உடலின் மொத்த எடையை கணக்கிடுவதை விட, இடுப்பில் படிந்துள்ள கொழுப்பை அளவிடுவதன் மூலம் எளிதில் உணர முடியும் என்கிறார்கள். ஆண்களின் இடுப்பளவு 37 இன்ச்-க்கு மேல் இருந்தாலும், பெண்களின் இடுப்பளவு 31.5 இன்ச்-க்கு மேல் இருந்தாலும் நோய் அபாயத்திற்கான காரணி அதிகரிப்பதாக தெரிவிக்கின்றனர்.
வயநாடு நிலச்சரிவு குறித்து விசாரிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. நிலச்சரிவு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து, விரைவில் பட்டியலிட பதிவாளருக்கு, பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களை கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. நிலச்சரிவு பகுதிகளில் உள்ள சுரங்கம், சாலைகள், குவாரிகள் குறித்த விவரங்களைத் தயாரிக்க கேரள அரசுக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
பைஜூஸ் நிறுவனத்திடமிருந்து ₹158 கோடியை வசூலிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. விளம்பரங்களுக்காக 2019ஆம் ஆண்டு பைஜூஸ் பிசிசிஐயுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. சமீபத்தில் நிதி நெருக்கடியில் சிக்கிய பைஜூஸ், ₹158 கோடியை செலுத்தத் தவறியதாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், பிசிசிஐ முறையிட்டது. இன்றைய விசாரணையின்போது பைஜூஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாக பிசிசிஐ தெரிவித்தது.
ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை எத்தனை முறை மாற்றம் செய்யலாம் என்ற விவரம்.
*பெயர் – அதிகபட்சம் 2 முறை மாற்றலாம்.
*பாலினம் மற்றும் பிறந்த தேதி – வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்.
*முகவரி – எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
*முகவரி மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள் – பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற 8 ஆவணங்கள்.
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். உள்ளூர் மக்கள் சுங்கச்சாவடியில் ஆதாரை காண்பித்து கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற அரசின் வாய்மொழி உத்தரவை ஏற்க மறுத்த அவர்கள், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்ய முயன்றபோது, பலரது சட்டை கிழிந்தது.
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், பாரிஸ் நகருக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக்ஸ் 2024 ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான வீரர்களும், லட்சக்கணக்கான பார்வையாளர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் புயல் மற்றும் கனமழை காரணமாக, விளையாட்டுப்போட்டிகள் பாதிக்கப்படும் என தெரிகிறது.
மும்பையில் தனியார் மருத்துவமனையில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை திருப்திகரமாக இல்லாததால், அவர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, மே 21ஆம் தேதி ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மறுநாள் குணமாகி வீடு திரும்பினார். தற்போது கண் பிரச்னையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய மகளிர் அணி தங்களுடைய மூன்றாம் வரிசை பேட்டரை விரைவில் கண்டறிவது அவசியம் என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். ஷஃபாலியும், ஸ்மிருதி மந்தனாவும் சிறப்பான தொடக்கத்தை வழங்குவதாகத் தெரிவித்த அவர், 3ஆவது இடத்தில் சிறப்பாக விளையாடக்கூடிய வீராங்கனையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், எதிர்வரும் டி20 உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என்றார்.
1900ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஆங்கிலோ இந்தியரான நார்மன் பிரிட்சார்ட் 2 வெள்ளிப்பதக்கங்களை வென்றார். அதன்பிறகு, கடந்த 124 ஆண்டுகளில் இந்தியா சார்பில் வேறு யாரும் ஒரே ஒலிம்பிக்ஸில் 2 பதக்கங்களை வென்றதில்லை. இந்நிலையில், 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸில் மனு பார்க்கர், தனிநபர், கலப்பு இரட்டை பிரிவு துப்பாக்கிச்சுடுதலில் 2 வெண்கலம் வென்று புது வரலாறு படைத்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய இப்புராஹிம், கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இப்புராஹிம் ₹70 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நேற்று சிக்கினார். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியினர் கையில் எடுத்து விமர்சித்த நிலையில், அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருடன் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் தலைமை உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.