news

News August 24, 2025

ராசி பலன்கள் (24.08.2025)

image

➤ மேஷம் – களிப்பு ➤ ரிஷபம் – ஆக்கம் ➤ மிதுனம் – கீர்த்தி ➤ கடகம் – சிரமம் ➤ சிம்மம் – அசதி ➤ கன்னி – பிரீதி ➤ துலாம் – முயற்சி ➤ விருச்சிகம் – ஓய்வு ➤ தனுசு – பிரயாணம் ➤ மகரம் – திறமை ➤ கும்பம் – நன்மை ➤ மீனம் – அனுகூலம்.

News August 23, 2025

தங்க வேட்டை நடத்திய இந்திய மாணவர்கள்

image

சர்வதேச வானியல்-வானியற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 2007-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் இப்போட்டியில் வானியல்- வானியற்பியல் துறையில் மாணவர்களின் திறன் சோதிக்கப்படும். 64 நாடுகளை சேர்ந்த உயர்கல்வி பயிலும் 300 மாணவர்கள் கலந்து கொண்ட ஒலிம்பியாடில் இந்திய மாணவர்கள் 4 தங்கம், ஒரு வெள்ளி வென்று அசத்தியுள்ளனர். நாட்டிற்கு பெருமை தேடி தந்த மாணவர்களை வாழ்த்தலாமே!

News August 23, 2025

82 ஆண்டுகள் கழித்து Library-க்கு வந்து சேர்ந்த புத்தகம்!

image

USA-ன் சான் ஆன்டோனியோ நூலகத்திலிருந்து 82 ஆண்டுகளுக்கு முன் எடுத்து செல்லப்பட்ட ‘Your Child, His Family and Friends’ புத்தகம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. PAAG என்பவரின் தந்தை, 11 வயதில் இந்த நூலை எடுத்துச்சென்றுள்ளார். தந்தை மறைவுக்கு பிறகு அவரது உடைமைகளில் இந்த புக் இருந்ததை பார்த்த அவர், இதனை நூலகத்தில் ஒப்படைத்துள்ளார். இதற்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் ₹78,802 ஆகியிருக்கும்.

News August 23, 2025

உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு இவ்வளவா..!

image

ADMK, BJP என மாறி மாறி திமுக மீதும் உதயநிதி மீதும் ஊழல் புகார்களை கூறி வருகின்றன. இந்நிலையில், உதயநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற பேச்சு எழுந்துள்ளது. 2021 தேர்தலில் ECI-ல் அவர் அளித்த <>பிரமாண பத்திரத்தில்<<>> ரேஞ்ச் ரோவர் கார், 1,600 கிராம் தங்கம், வங்கி இருப்பு என மொத்தம் ₹4.89 கோடியும், இன்சூரன்ஸ் பாலிசிகள், பாண்டுகள், பங்குகள் என மொத்தம் ₹21.13 கோடியும் சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

News August 23, 2025

தனிப்பெரும்பான்மை ஆட்சி.. அழுத்தி சொன்ன இபிஎஸ்

image

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஆட்சி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நெல்லை மாநாட்டில் நேற்று பேசிய அமித்ஷா, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே அமையும் என மீண்டும் திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில், திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட இபிஎஸ், அதற்கு மாறாக பேசியுள்ளார். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என ஆணித்தரமாக அவர் தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்குறீங்க?

News August 23, 2025

‘புலவர்’ அவதாரம் எடுத்த பாரதிராஜா

image

இயக்குநர் பாரதிராஜா நடிக்கும் புதிய படத்திற்கு ‘புலவர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரவி முருகையா இப்படத்தை இயக்குகிறார். ‘புலவர்’ படம் க்ரைம் கதைக்களத்தை மையமாக கொண்டது. ‘கடைசி விவசாயி’ படத்தை தயாரித்த சூப்பர் டாக்கீஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்துள்ளது. விரைவில் புலவரை திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம்.

News August 23, 2025

கடன் வாங்கி கல்யாணம் பண்ணாதீங்க பாஸ்!

image

4 ஆண்டுகள் கடுமையாக உழைத்து குடும்பக் கடனை அடைத்தார் சென்னையை சேர்ந்த இளைஞர். இனி ரிலாக்ஸ் ஆகலாம் என நினைத்தவருக்கு, காத்திருந்தது அதிர்ச்சி. ஆம், ஊரையே கூட்டி, அவருக்கு தடபுடலாக கல்யாணம் செய்தனர் பெற்றோர். அதற்கு ₹17 லட்சம் கடன் வாங்கினார்களாம். இப்போது அந்த கடனை அடைக்க ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் அவர், ‘கல்யாணம் பண்ண இப்படி பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க’ என அட்வைஸ் செய்துள்ளார். உங்க அனுபவம் எப்படி?

News August 23, 2025

TN விவசாயிகளுக்காக பேசிய கவர்னர் RN ரவி!

image

டெல்லியில், மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்த கவர்னர் RN ரவி, TN விவசாயிகள், கைவினை கலைஞர்களுக்காக கோரிக்கை விடுத்ததாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசு நடத்துவதாக திமுக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

News August 23, 2025

விஜய்யின் அடுத்த அதிரடி.. திமுக, அதிமுக கலக்கம்

image

அதிகமான தொண்டர்கள் கூடிய அரசியல் மாநாடு, <<17494428>>தவெகவின் மதுரை மாநாடுதான்<<>> என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தனது அடுத்த நகர்வுக்கு தயாராகி வருகிறார் விஜய். விக்கிரவாண்டி, மதுரையை தொடர்ந்து தவெகவின் அடுத்த மாநாடு கோவையில் நடைபெற உள்ளதாம். இது கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் அதிமுகவுக்கும், கொங்குவை கைப்பற்ற துடிக்கும் திமுகவுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

News August 23, 2025

Parenting: பிள்ளைக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாம போதா?

image

உங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகுதா? அப்போது, இந்த 6 பொருள்களை அவர்களின் உணவு பழக்க வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். மஞ்சள், சக்கரைவள்ளிக் கிழங்கு, வெள்ளைப்பூண்டு, ப்ரோக்கோலி, காளான், கீரை வகைகளை குழந்தையின் Diet-ல் சேர்த்தால் கட்டாயம் 1 மாதத்தில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். SHARE.

error: Content is protected !!