India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேகப்பந்து வீச்சாளர் ஷமியால் தினமும் மட்டன் சாப்பிடாமல் இருக்க முடியாது என அவரது நண்பர் உமேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஒரு நாள் மட்டன் சாப்பிடவில்லை என்றால், அடுத்தடுத்த நாள்களில் தன் கட்டுப்பாட்டை இழப்பார் எனவும், தினமும் 1 கிலோ சாப்பிடாவிட்டால், அவரது பந்து வீச்சின் வேகம் 15 kmph ஆக குறைந்துவிடும் என்றும் உமேஷ் கூறியுள்ளார். காயம் காரணமாக ஷமி கடந்த 8 மாதங்களாக இந்திய அணிக்காக விளையாடவில்லை.
அரசு கல்வி நிறுவனங்களில் பழங்குடியினர் பள்ளி, கல்லூரி என்ற வார்த்தைகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. 21ஆம் நூற்றாண்டிலும் அரசு பழங்குடியினர் நலப் பள்ளிகள் என்று அழைக்கப்படுவது வேதனை அளிப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், சமூகநீதி பற்றி பேசிவரும் சூழலில், அரசுப் பள்ளி என்று மட்டும் ஏன் அழைக்கக் கூடாது என யோசனை கூறியுள்ளனர்.
ATM கார்டு பயனாளர்களுக்கு சில வங்கிகள் ₹1 கோடி வரை இலவச ஆயுள் காப்பீடு வழங்குவது உங்களுக்கு தெரியுமா? ஆமாம், HDFC, ICICI, SBI உள்ளிட்ட முன்னணி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ₹50,000 முதல் ₹1 கோடி வரை இலவச காப்பீடு வழங்குகின்றன. வாடிக்கையாளர் விபத்து உள்ளிட்ட எதிர்பாராத காரணங்களால் உயிரிழக்கும் போது, காப்பீடு தொகையை அவரது குடும்பத்தினர் பெற முடியும். கூடுதல் விவரங்களுக்கு உங்கள் வங்கியை அணுகவும்.
விவசாயிகளிடம் அனைத்து துவரம் பருப்பு, உளுந்து மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்யும் என, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், இ சம்ரிதி தளத்தில், விவசாயிகள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார். மேலும், காங்., ஆட்சியுடன் ஒப்பிடும்போது, விவசாயிகளிடம் தாங்கள் அதிக பொருட்களை கொள்முதல் செய்வதாகக் கூறினார்.
நீட் விலக்கு குறித்து தமிழகம் நிறைவேற்றிய தீர்மானம் அரசின் கவனத்திற்கு வந்ததா என மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதற்கு, அதற்கான பரிசீலனை அரசு மட்டத்தில் இல்லை என இணை அமைச்சர் பதிலளித்ததாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் குரல் இன்று பல மாநிலங்களில் ஒலிப்பதாகவும், மக்களின் கருத்து வலுவடையும் போது அரசு பணிய வேண்டி இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
திமுக அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மணல் குவாரியில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக அவர் மீது ED வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணிக்கு சொந்தமான ₹14.21 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
KGF இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் வதந்தி என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். இருவரும் நேரில் சந்தித்தது உண்மை என்றும், ஆனால், படத்தில் நடிப்பது குறித்து எதுவும் ஆலோசிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ‘KGF 3’ படத்தில் யஷ் உடன் இணைந்து அஜித்குமார் நடிக்க உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஆடி வெள்ளியில் விரதம் இருப்பது சுபப் பலன்களை அள்ளி வழங்கும். காலை முதல் விரதம் இருந்துவிட்டு மாலையில் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டில் உள்ள மகாலட்சுமி அல்லது அம்பிகையின் படத்திற்கு முன்பு நெய் விளக்கேற்றி, பூஜைக்கு தேவையான படையல் பொருள்களை வைத்து வழிபடலாம். இவ்வாறு செய்வதால் கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என ஆன்மிக பெரியோர்கள் கூறுகின்றனர்.
எதிரிகளின் பெயர்களை டாட்டூ போட்டுக் கொண்ட நபர் கொல்லப்பட்ட விவகாரத்தில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரு வக்மேர் (48) கடந்த 24ஆம் தேதி மும்பையில் உள்ள ஸ்பாவில் வைத்து கொல்லப்பட்டார். RTI ஆர்வலர் என தன்னைக் கூறிக்கொண்டு, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஸ்பா உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கொலையை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தங்கலான் படத்தின் ஒரு காட்சிக்காக எருமை மாட்டில் சவாரி செய்ததாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். இயக்குநர் காமெடியாக சொன்னதாக முதலில் நினைத்ததாகவும், அப்போது தான் அதற்கு தயாராகவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தனக்கு மேக்கப் போடுவதற்கு மட்டும் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். படத்தில் பழங்குடியினத்தவரின் கடவுளாக மாளவிகா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.