India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆடி வெள்ளியில் விரதம் இருப்பது சுபப் பலன்களை அள்ளி வழங்கும். காலை முதல் விரதம் இருந்துவிட்டு மாலையில் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டில் உள்ள மகாலட்சுமி அல்லது அம்பிகையின் படத்திற்கு முன்பு நெய் விளக்கேற்றி, பூஜைக்கு தேவையான படையல் பொருள்களை வைத்து வழிபடலாம். இவ்வாறு செய்வதால் கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என ஆன்மிக பெரியோர்கள் கூறுகின்றனர்.
எதிரிகளின் பெயர்களை டாட்டூ போட்டுக் கொண்ட நபர் கொல்லப்பட்ட விவகாரத்தில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரு வக்மேர் (48) கடந்த 24ஆம் தேதி மும்பையில் உள்ள ஸ்பாவில் வைத்து கொல்லப்பட்டார். RTI ஆர்வலர் என தன்னைக் கூறிக்கொண்டு, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஸ்பா உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கொலையை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தங்கலான் படத்தின் ஒரு காட்சிக்காக எருமை மாட்டில் சவாரி செய்ததாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். இயக்குநர் காமெடியாக சொன்னதாக முதலில் நினைத்ததாகவும், அப்போது தான் அதற்கு தயாராகவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தனக்கு மேக்கப் போடுவதற்கு மட்டும் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். படத்தில் பழங்குடியினத்தவரின் கடவுளாக மாளவிகா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
*<
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, தஞ்சை உள்பட 9 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது, விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
‘ராயன்’ படத்தில் வரும் ராயபுரம் பகுதியை அப்படியே செட் அமைக்க ₹30 கோடி செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, சமீபத்திய பேட்டி ஒன்றில் இத்தகவலை பகிர்ந்துள்ளார். படத்தின் கலை இயக்குநர் ஜாக்கி, வட சென்னை பகுதியை தத்ரூபமாக கொண்டு வர மிகவும் மெனக்கெட்டதாகவும் அவர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள அத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சில வங்கிகள் வைப்புத்தொகைக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. அதன்படி, HDFC வங்கி 4 ஆண்டுகள் 7 மாதங்கள் – 55 மாதங்களுக்கு 7.40%, ICICI வங்கி 15 மாதங்கள் – 18 மாதங்களுக்கு 7.20%, SBI வங்கி 444 நாள்களுக்கு 7.25%, PNB வங்கி 400 நாள்களுக்கு 7.25%, Axis வங்கி 17-18 மாதங்களுக்கு 7.20% வட்டி வழங்குகின்றன. இந்த திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு 0.50% கூடுதல் வட்டி கிடைக்கும்.
நாட்டில் ஒவ்வொரு வருடமும் 15.5 லட்சம் பேர் கேன்சரால் பாதிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜெபி நட்டா தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் 2.5% என்ற அளவில் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், ஆண்கள் வாய், நுரையீரல் புற்றுநோயாலும், பெண்கள் மார்பக புற்றுநோயாலும் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கேன்சர் மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கும்படி விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கேலோ இந்தியா திட்டத்தில் நிதி ஒதுக்குவதில் கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசு ஓரவஞ்சனையாக செயல்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பாஜக ஆளும் உ.பி., குஜராத்துக்கு தலா ₹400 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தமிழகத்திற்கு வெறும் ₹20 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இது தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் கண்டித்துள்ளார்.
ஒடிஷாவில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் புவனேஸ்வர் மார்க்கத்தில், ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே, சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லாத நிலையில், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 முறை சரக்கு ரயிலும், ஒரு முறை பயணிகள் ரயிலும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.