news

News July 26, 2024

எருமையில் சவாரி செய்தேன்: மாளவிகா

image

தங்கலான் படத்தின் ஒரு காட்சிக்காக எருமை மாட்டில் சவாரி செய்ததாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். இயக்குநர் காமெடியாக சொன்னதாக முதலில் நினைத்ததாகவும், அப்போது தான் அதற்கு தயாராகவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தனக்கு மேக்கப் போடுவதற்கு மட்டும் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். படத்தில் பழங்குடியினத்தவரின் கடவுளாக மாளவிகா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 26, 2024

5 நிமிடத்தில் PAN கார்டு எடுக்கலாம்!

image

*<>ITR<<>> இணையதளத்தில் ‘Instant e-PAN’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். *அடுத்து ‘Get New e-PAN’ என்பதை கிளிக் செய்து, ஆதார் எண்ணை டைப் செய்து, ‘Continue’ கொடுக்கவும். *விதிகளை படித்த பிறகு, டிக் பாக்ஸை கிளிக் செய்து ‘Continue’ கொடுக்கவும். *ஆதார் உடன் பதியப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த OTP-யை பதிவிடவும். *விவரங்களை சரிபார்த்து ‘Continue’ கொடுங்கள். *தற்போது உங்களது e-PAN கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

News July 26, 2024

காவிரியில் வெள்ளம்: 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

image

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, தஞ்சை உள்பட 9 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது, விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

News July 26, 2024

செட் அமைக்க ₹30 கோடி செலவு செய்த படக்குழு

image

‘ராயன்’ படத்தில் வரும் ராயபுரம் பகுதியை அப்படியே செட் அமைக்க ₹30 கோடி செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, சமீபத்திய பேட்டி ஒன்றில் இத்தகவலை பகிர்ந்துள்ளார். படத்தின் கலை இயக்குநர் ஜாக்கி, வட சென்னை பகுதியை தத்ரூபமாக கொண்டு வர மிகவும் மெனக்கெட்டதாகவும் அவர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள அத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

News July 26, 2024

சமீபத்தில் உயர்த்தப்பட்ட FD வட்டி வகிதம்

image

சில வங்கிகள் வைப்புத்தொகைக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. அதன்படி, HDFC வங்கி 4 ஆண்டுகள் 7 மாதங்கள் – 55 மாதங்களுக்கு 7.40%, ICICI வங்கி 15 மாதங்கள் – 18 மாதங்களுக்கு 7.20%, SBI வங்கி 444 நாள்களுக்கு 7.25%, PNB வங்கி 400 நாள்களுக்கு 7.25%, Axis வங்கி 17-18 மாதங்களுக்கு 7.20% வட்டி வழங்குகின்றன. இந்த திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு 0.50% கூடுதல் வட்டி கிடைக்கும்.

News July 26, 2024

கேன்சர் பாதிப்புகள் அதிகரிப்பு: அமைச்சர் ஜெபி நட்டா

image

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 15.5 லட்சம் பேர் கேன்சரால் பாதிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜெபி நட்டா தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் 2.5% என்ற அளவில் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், ஆண்கள் வாய், நுரையீரல் புற்றுநோயாலும், பெண்கள் மார்பக புற்றுநோயாலும் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கேன்சர் மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கும்படி விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

News July 26, 2024

தமிழக வீரர்களுக்கு அநீதி: உதயநிதி

image

கேலோ இந்தியா திட்டத்தில் நிதி ஒதுக்குவதில் கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசு ஓரவஞ்சனையாக செயல்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பாஜக ஆளும் உ.பி., குஜராத்துக்கு தலா ₹400 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தமிழகத்திற்கு வெறும் ₹20 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இது தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் கண்டித்துள்ளார்.

News July 26, 2024

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

image

ஒடிஷாவில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் புவனேஸ்வர் மார்க்கத்தில், ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே, சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லாத நிலையில், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 முறை சரக்கு ரயிலும், ஒரு முறை பயணிகள் ரயிலும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

News July 26, 2024

பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘இன்சைட் அவுட் 2’

image

‘இன்சைட் அவுட் 2’ அனிமேஷன் திரைப்படம் உலகளவில் ₹12,200 கோடி வசூலித்து, உலக பாக்ஸ் ஆஃபிஸில் அதிக வசூல் செய்த அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம், 2019ஆம் ஆண்டு வெளியான ‘ஃப்ரோசன் 2’ பட சாதனையை முறியடித்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ₹12,100 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. மொத்த படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் வரிசையில் ‘இன்சைட் அவுட் 2’ 13ஆவது இடத்தில் உள்ளது.

News July 26, 2024

அக்னிபாத் விவகாரம்: பிரதமர் VS காங்கிரஸ்

image

கார்கில் வெற்றி ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ராணுவம் புத்துயிர் பெறவும், வீரர்கள் போருக்கு எப்போதும் தயாராக இருக்கவும் அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறினார். இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள காங்., எம்.பி கார்த்தி சிதம்பரம், இத்திட்டம் போதிய பயிற்சியும், பலன்களும் இல்லாத குறுகிய கால திட்டம் என்றும், ராணுவத்திற்கு விரிவான பயிற்சியும், முழு அர்ப்பணிப்பும் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!