India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆசியக் கோப்பை மகளிர் T20 கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு 141 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான். டாஸ் வென்ற SL, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய PAK வீராங்கனைகள் நிதானமாக விளையாடினர். குறிப்பாக முனீப் 37, ஃபெரோஜா 25, நிதா தர், ஃபாத்திமா தலா 23 ரன்கள் எடுத்தனர். SL தரப்பில், உதேஷிகா, கவிஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
திருத்தப்பட்ட <<13713914>>நீட்<<>> தரவரிசைப் பட்டியலில் 17 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர். முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். ரஜினிஷ் 720க்கு 720 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடமும், சையத் ஆரிபின் யூசுப் 715 மதிப்பெண்களுடன் 26ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். நீட் தேர்வு எழுதிய 1,52,920 தமிழக மாணவர்களில் 89,198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 17,727 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். SSC சார்பில் நடத்தப்படும் CGL-2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகள், 18-32 வயதுக்குள் இருக்க வேண்டும். முதல்நிலை கணினி வழி தேர்வு: செப்டம்பர், அக்டோபரிலும், 2ஆம் நிலை கணினி வழி தேர்வு: டிசம்பரிலும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு https://ssc.gov.in இணையதளத்தை அணுகவும்.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கும் படத்தில் ரியோ ராஜ் நடித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் கொண்டாட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. திருமணமான ஆண்களின் பிரச்னைகளை மையமாகக் கொண்டு கதை பிண்ணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஞ்சலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் மொத்த டெபாசிட் தொகைக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் பெற முடியும். இந்த திட்டத்தில், தனிநபர் கணக்கில் ₹9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ₹15 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம். இதில் 7.4% வட்டி கிடைப்பதால், உங்கள் குடும்ப உறுப்பினருடன் சேர்ந்து ₹15 லட்சம் டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் ₹9,250 வட்டியாக பெறலாம்.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரம்பூரில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, கடந்த 5ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்தது. இந்த வழக்கில், திமுக, அதிமுக, பாஜக முன்னாள் நிர்வாகிகள் என இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ரவுடி ஆற்காடு சுரேஷுக்கு நெருக்கமான பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் வெப்ப அலை அதிகரிக்கும் சூழலில், AC பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், AC போட்டு தூங்குவதால் ஏராளமான உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். *காற்றில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி, கண்களில் வறட்சி, அரிப்பை உண்டாக்கலாம். *வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கக் கூடும். *தோல் வறண்டு போக வாய்ப்புள்ளது. *தலைவலி, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்னைகளுக்கு வித்திடலாம்.
மகளிர் ஆசிய கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதி போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. டாஸ் வென்ற SL அணி பந்து வீச்சை தேர்வு செய்ய, PAK அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் பாக். அணி விக்கெட் ஏதும் இன்றி 45 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீராங்கனைகளான முனீபா அலி 23 பந்துகளுக்கு 20 ரன்களும், கல் ஃபெரோசா 16 பந்துகளுக்கு 22 ரன்களும் எடுத்துள்ளனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயம் ஆகாது என, அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 7,200 பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 1000 பேருந்துகளை வாங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், விடுபட்ட வழித்தடங்களில் விரைவில் அரசுப் பேருந்து சேவை தொடங்கப்படும் என்றார். மேலும், போக்குவரத்துத் துறை தனியார்மயம் என்பது வதந்தி எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.