India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாப்பிட்ட பின் குறைந்தது 100 நடைகள் நடக்க வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது உடலில் செரிமானத்தை அதிகரிக்கும் எனவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் என்றும் கூறுகின்றனர். சர்க்கரை அளவை சீராக்கி, டைப் 2 நீரிழிவு நோயை தடுப்பதோடு, இதய நோய் அபாயத்தை குறைக்கும் எனக் கூறப்படுகிறது. அதே நேரம், சாப்பிட்ட உடனே வேகமாக நடக்காமல், மெதுவாக தொடங்கி வேகத்தை அதிகரிக்க அறிவுறுத்துகின்றனர்.
மத்திய பாஜக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாகவும், இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பண முறைகேடு விவகாரத்தில், நடிகர் விஷால் படங்களுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் முடிந்தால் தடுத்து பாருங்கள் எனவும் விஷால் சவால் விடுத்துள்ளார். இன்னும் தியேட்டர் பராமரிப்பு கட்டணம் உள்பட பல விசயங்கள் தீர்க்கப்பட வேண்டி உள்ளதாகவும், உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள் எனவும் காட்டமாக கூறியுள்ளார்.
பெங்களூருவில் வன்ஷிதா என்ற பெண், Uber பயணங்களுக்காக மாதம் ₹16,000-க்கும் அதிகமாக செலவானதாக X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தன்னுடைய வீட்டு வாடகையின் பாதி பணம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால்தான் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கியதாக வன்ஷிதாவின் பதிவில் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதாகவும், அதனால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் உள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால், அவற்றின் விலை கணிசமாக குறையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக இருப்பதாக குறிப்பிட்டார். பெட்ரோலிய பொருட்கள் மீது தற்போது 60% வரி விதிக்கப்படும் நிலையில், ஜிஎஸ்டியின் கீழ் வந்தால் 28%ஆக குறையும் என்றார்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராடுவார்கள் என்பதால், நாளை முதல் 7 நாள்கள் (ஆக.3 வரை) தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாள்தோறும் விநாடிக்கு 5000 கன அடி வீதம் அடுத்த 7 நாள்கள் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
கார்கில் போரில் வீரமரணமடைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கூட மோடி அற்ப அரசியல் பேசியது, இதுவரை எந்த பிரதமரும் செய்யாதது என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். அக்னிபாத் திட்டம் குறித்து பிரதமர் பொய் தகவல்களை பேசியதாகவும், வீரமரணமடைந்த 15 அக்னிவீரர்களின் தியாகத்தை குறைந்தபட்சம் மதிக்கவாவது பிரதமர் கற்றுக் கொள்ளவேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக, முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரெவர் பேலிஸின் பதவிக்காலம் முடிந்ததால், புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஜாஃபர் 2019-2021 காலகட்டத்தில் பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். வருகிற 31ஆம் தேதி 2025 IPL சீசனுக்கான மெகா ஏலம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தென்னிந்திய தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது முறைகேடாக ₹12 கோடி செலவழித்ததாக எழுந்த புகாரில், இனி நடிகர் விஷாலை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என அச்சங்கம் அறிவுறுத்தியுள்ளது. செலவழித்த பணத்தை திரும்ப அளிக்குமாறு பலமுறை கூறியும் பதில் அளிக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாமக நிர்வாகியும், வன்னியர் சங்க மாநில செயலருமான N.M.கருணாநிதி, பாமகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வன்னியர் சங்கம், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததால், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கருணாநிதி நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 2006 சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, சி.வி.சண்முகத்திடம் 2,208 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.