news

News July 27, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ 33ஆவது ஒலிம்பிக் திருவிழா, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்கியது
➤ பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரதீப் என்பவர் கைது
➤ அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயம் ஆகாது – அமைச்சர் சிவசங்கர்
➤ ஒடிஷாவில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது
➤ பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

News July 27, 2024

அமைதியான நாடுகளின் பட்டியல் 2024

image

அமைதிக்கான குளோபல் ஃபைனான்ஸ் நிறுவனம் உலக அமைதி குறியீடு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகின் மிகவும் அமைதியான நாடு என்ற பெருமையை 2008ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 17ஆவது ஆண்டாக ஐஸ்லாந்து தக்க வைத்துள்ளது. அயர்லாந்து, ஆஸ்திரியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சீனா 88ஆவது இடத்திலும், இந்தியா 116ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 140ஆவது இடத்திலும் உள்ளன.

News July 27, 2024

உடலை பாதுகாக்கும் பழைய சோறு

image

பழைய சோறு, தயிர் உள்ளிட்ட நொதித்த உணவுகள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருவதாக, சர்வதேச ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை உள்ளிட்ட நுண்ணுயிர்கள் உடல்நலத்திற்கு அவசியமானவை. அத்தகைய நுண்ணுயிர்களை நொதித்த உணவுகள் வழங்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில், புற்றுநோய் உள்பட பல நோய்களுக்கு எதிராக செயல்படும் ஏஜென்ட்டுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

News July 26, 2024

ஒலிம்பிக் 2024 கோலாகலமாக தொடங்கியது

image

33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைத்தார். இதில் மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவில் இருந்து 117 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இப்போட்டிகள் ஆக.11 வரை நடைபெறுகிறது.

News July 26, 2024

நாட்டை விட்டு வெளியேற IT சான்றிதழ் கட்டாயம்!

image

இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு நபரும் நாட்டை விட்டு வெளியேற வருமான வரி அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டுமென மத்திய அரசின் நிதி மசோதாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபருக்கு நிலுவை வரி இல்லை அல்லது நிலுவையில் உள்ள வரியை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அந்த சான்றிதழ் உறுதிப்படுத்தும். இது தொடர்பான சட்டத் திருத்தம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

News July 26, 2024

12 ராசிகளுக்கான பலன்கள் (27.07.2024)

image

*மேஷம் – ஆதாயம் கிடைக்கும்
*ரிஷபம் – ஆதரவு அதிகரிக்கும்
*மிதுனம் – தோல்வி உண்டாகும்
*கடகம் – போட்டியை தவிர்க்கவும்
*சிம்மம் – லாபகரமான நாள்
*கன்னி – பெருமை சேரும்
*துலாம் – பயம் தவிர்க்கவும்
*விருச்சிகம் – நற்சொல் தேடிவரும்
*தனுசு – மகிழ்ச்சியான நாள்
*மகரம் – கீர்த்தி உண்டாகும் *கும்பம் – சோதனையான நாள் *மீனம் – மன நிறைவான நாள்

News July 26, 2024

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் ரங்கசாமி

image

பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்க மாட்டார் என புதுச்சேரி முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் பாஜக-N.R.காங்., கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் முதல்வர் ரங்கசாமி டெல்லி செல்லவில்லை என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

News July 26, 2024

இலங்கை மகளிர் அணி த்ரில் வெற்றி

image

இன்று நடந்த மகளிர் ஆசிய கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் PAK அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய SL அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. ஞாயிற்று கிழமை இரவு நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோத உள்ளன.

News July 26, 2024

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்து: மோடி

image

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை வாழ்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், ஒலிம்பிக்கில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் இந்தியாவின் பெருமை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வீரர்கள் அனைவரும் பிரகாசிக்கவும், உண்மையான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தவும், தனித்துவமான செயல்திறன்களால் நம்மை ஊக்குவிக்கவும் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

News July 26, 2024

இரவு 11 மணிக்கு 2024 ஒலிம்பிக் தொடக்கம்

image

33ஆவது ஒலிம்பிக் திருவிழா, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதை, வீரர்கள் தங்களது வாழ்நாள் லட்சியமாக கருதுகின்றனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் உள்பட இந்தியாவிலிருந்து 117 வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?

error: Content is protected !!