India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TNPLல் நேற்று இரவு நடைபெற்ற மதுரை அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவரில் 201/5 ரன்கள் எடுத்து. அதிரடியாக ஆடிய சிவம் சிங் 106* ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவரில் 171/8 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றி மூலம் திண்டுக்கல் அணி குவாலிஃபையர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்று (ஜூலை 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
பாகுபலி படத்தில் மனோஹரி பாடலுக்கு நடனமாடிய ஹிந்தி நடிகை நோரா ஃபதேஹி, ஆரம்ப காலத்தில் சாப்பிட்டிற்கே கஷ்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு ஒரு முட்டை, ரொட்டியை மட்டுமே உண்டதாகவும், சம்பளத்தின் பெரும்பகுதியை வாய்ப்பு வாங்கித் தரும் தரகர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். தற்போது ஒரு பாடலுக்கு நடனமாட ₹1 கோடி முதல் ₹2 கோடி சம்பளம் வாங்குவதாக கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூலை 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ 33ஆவது ஒலிம்பிக் திருவிழா, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்கியது
➤ பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரதீப் என்பவர் கைது
➤ அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயம் ஆகாது – அமைச்சர் சிவசங்கர்
➤ ஒடிஷாவில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது
➤ பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
அமைதிக்கான குளோபல் ஃபைனான்ஸ் நிறுவனம் உலக அமைதி குறியீடு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகின் மிகவும் அமைதியான நாடு என்ற பெருமையை 2008ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 17ஆவது ஆண்டாக ஐஸ்லாந்து தக்க வைத்துள்ளது. அயர்லாந்து, ஆஸ்திரியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சீனா 88ஆவது இடத்திலும், இந்தியா 116ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 140ஆவது இடத்திலும் உள்ளன.
பழைய சோறு, தயிர் உள்ளிட்ட நொதித்த உணவுகள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருவதாக, சர்வதேச ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை உள்ளிட்ட நுண்ணுயிர்கள் உடல்நலத்திற்கு அவசியமானவை. அத்தகைய நுண்ணுயிர்களை நொதித்த உணவுகள் வழங்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில், புற்றுநோய் உள்பட பல நோய்களுக்கு எதிராக செயல்படும் ஏஜென்ட்டுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைத்தார். இதில் மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவில் இருந்து 117 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இப்போட்டிகள் ஆக.11 வரை நடைபெறுகிறது.
இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு நபரும் நாட்டை விட்டு வெளியேற வருமான வரி அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டுமென மத்திய அரசின் நிதி மசோதாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபருக்கு நிலுவை வரி இல்லை அல்லது நிலுவையில் உள்ள வரியை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அந்த சான்றிதழ் உறுதிப்படுத்தும். இது தொடர்பான சட்டத் திருத்தம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
*மேஷம் – ஆதாயம் கிடைக்கும்
*ரிஷபம் – ஆதரவு அதிகரிக்கும்
*மிதுனம் – தோல்வி உண்டாகும்
*கடகம் – போட்டியை தவிர்க்கவும்
*சிம்மம் – லாபகரமான நாள்
*கன்னி – பெருமை சேரும்
*துலாம் – பயம் தவிர்க்கவும்
*விருச்சிகம் – நற்சொல் தேடிவரும்
*தனுசு – மகிழ்ச்சியான நாள்
*மகரம் – கீர்த்தி உண்டாகும் *கும்பம் – சோதனையான நாள் *மீனம் – மன நிறைவான நாள்
Sorry, no posts matched your criteria.