news

News July 27, 2024

இசைப்புயல் அறிமுகமான நாள் இன்று!

image

இன்று இந்திய சினிமாவில் ஒரு அடையாளமாக இருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பாளராக அறிமுகமான நாள் இன்று. 1992ம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினத்தின் ரோஜா படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா ஜூலை 27ல் நடந்தது. அந்த விழாவில்தான் ரஹ்மான் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். ரஹ்மான் இசையமைத்த படங்களில் ரோஜா முதல் ராயன் வரையில், உங்களுக்குப் பிடித்த படம் எது என கமென்ட் செய்யுங்க.

News July 27, 2024

அரசு கலை கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் சேர இன்று (ஜூலை 27) முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் இணையத்தளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என்றும், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <>www.tngasa.in<<>> என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம்.

News July 27, 2024

ஜூலை 27: வரலாற்றில் இன்று!

image

* 1876 – கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று
* 1955 – மலேசியாவின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக வீ. தி. சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1990 – பெலாரஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.
* 2015 – இந்திய பஞ்சாப் பகுதியில் குருதாஸ்பூர் காவல் நிலையம் தாக்கப்பட்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
* 2015 – முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் இறந்த தினம்

News July 27, 2024

செருப்பு தைக்கும் தொழிலாளியை சந்தித்த ராகுல்

image

அவதூறு வழக்கில் நேற்று உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் காங்., எம்பி ராகுல் காந்தி ஆஜரானார். அங்கிருந்து திரும்பும் வழியில், செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரின் கடைக்கு திடீரென விசிட் கொடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தனது தொழில், குடும்பம் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி தனது தொழிலுக்கு உதவுவதாக உறுதியளித்ததாக அந்த தொழிலாளி கூறியுள்ளார்.

News July 27, 2024

ParisOlympics: இது இந்தியாவின் அட்டவணை

image

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டை இன்று முதல் தொடங்கவுள்ளது. இன்று மதியம் 12.30 மணி முதல் நள்ளிரவு 12.02 மணி வரை படகு ஓட்டுதல், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஹாக்கி, குத்துச்சண்டை ஆகிய போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டிகளின் நேரலையை ஜியோ சினிமா ஆப், ஸ்போர்ட்ஸ் 18, வயாகாம் 18 ஆகியவற்றில் பார்க்கலாம்.

News July 27, 2024

இளம் நடிகருடன் காதலா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்!

image

நடிகை கீர்த்தி சுரேஷ் 20 வயது இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வைரலானது. ரகு தாத்தா புரொமோஷன் விழாவில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தளபதி விஜய் சொன்னது போல வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகிவிடும் என்பதால் அதை புறக்கணிப்போம்” என்றார். மேலும், தனது நடிப்பு குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்க எப்போதும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

News July 27, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 428 ▶குறள்: அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். ▶பொருள்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

News July 27, 2024

பாஜகவில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார்

image

மகாராஷ்டிராவில் முன்னாள் பாஜக எம்எல்ஏ ரமேஷ் குதே அக்கட்சியில் இருந்து விலகி சிவசேனா உத்தவ் தாக்கரே அணியில் இணைந்துள்ளார். சிவசேனா கட்சியில் அங்கம் வகித்த அவர், 2018இல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தாய் கட்சியில் இணைந்த அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் உத்தவ் தாக்கரே. மகாராஷ்டிராவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 27, 2024

₹10 லட்சம் நிவாரணம் முடிவில் நீதிமன்றம் தலையிடாது

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ₹10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. ₹10 லட்சம் நிவாரணம் வழங்குவதை எதிர்த்து சென்னையை சேர்ந்த குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர், அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது எனக் கூறியதுடன், விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்ட வழக்கு எனக்கூறி இவ்வழக்கை தள்ளுபடி செய்தது.

News July 27, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூலை 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

error: Content is protected !!