news

News July 27, 2024

திமுகவின் போராட்டம் வேடிக்கையானது

image

பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக நடத்த உள்ள போராட்டம் வேடிக்கையானது என தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, முத்ரா கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும், அதன்மூலம் தமிழகமும் பயன்பெறும் என்றார். மேலும், தெற்கு ரயில்வேக்கு கடந்த 10 ஆண்டுகளில் ₹28,400 கோடிக்கு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

News July 27, 2024

பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்

image

போக்குவரத்து கழகத்தில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தியதால் புதிய கண்டக்டர், ஓட்டுநர்கள் நியமிக்கப்படவில்லை என்றார். கடும் நிதிச்சுமையில் இருந்த போக்குவரத்து கழகம், திமுக ஆட்சியில் புத்துயிர் பெற்றுவருவதாக தெரிவித்தார்.

News July 27, 2024

ஆகஸ்ட் 22ல் அமெரிக்கா செல்கிறார் முதல்வர்

image

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். முதல்வர் வெளிநாடு செல்ல மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து 15 நாள் பயணமாக அவர் அமெரிக்கா செல்கிறார். அங்கு பல மாநிலத்திற்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார். முதல்வருடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் தனி செயலர்கள் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.

News July 27, 2024

பட்ஜெட்டை கண்டித்து திமுக போராட்டம்

image

மத்திய பட்ஜெட்டை கண்டித்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று காலை 10 மணிக்கு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கையில், மாற்றாந்தாய் போக்குடன் தமிழகத்தை பாஜக வஞ்சித்துவிட்டதாகவும், வெள்ள பேரிடர் நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதியை வழங்கவில்லை எனவும், தமிழக முதல்வரின் கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

News July 27, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூலை – 27 | ▶ஆடி – 11 ▶கிழமை: சனி ▶திதி: சப்தமி ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶சந்திராஷ்டமம்: பூரம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

News July 27, 2024

நிலுவையில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள்

image

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 84,045 வழக்குகளும், பல்வேறு உயர்நீதிமன்றங்களில் 60.11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக உ.பி.,யில் 1.18 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

News July 27, 2024

காலையில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்

image

காலையில் அதிக அளவில் வெள்ளை பிரட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு உடல் எடையையும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பக்கோடா போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிப்பு மற்றும் பிற நோய்களுக்கும் வழி வகுக்கும் என்றும், ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடுவது வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் கூறுகின்றனர். இதேபோல் நூடுல்ஸை காலையில் தவிர்க்க வலியுறுத்துகின்றனர்.

News July 27, 2024

நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெறுகிறது

image

பிரதமர் மோடி தலைமையில் 9வது நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச ஆளுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசைக்கப்பட உள்ளது.

News July 27, 2024

விவேகானந்தர் பொன்மொழிகள்

image

➤உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப்பெரிய பாவம். ➤நீ பட்ட துன்பத்தை விட, அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது. ➤உன் மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. ➤பொய் வாழ விடாது, உண்மை சாக விடாது. ➤உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. ➤அன்புடன் பழகுபவர்களே உலகத்திற்குத் தேவை. ➤பொறாமை அடிமைகளின் குணம்.

News July 27, 2024

இலங்கை அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு

image

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், இலங்கைக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியில் ஏற்கெனவே 2 வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவும் விலகியதாக தெரிகிறது. அவருக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.

error: Content is protected !!