news

News July 26, 2024

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு

image

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி, பள்ளி உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் விரைந்து அனுமதி தர வேண்டும் என்றும், பள்ளி அளவில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த அறிக்கையை EMISஇல் புகைப்படத்துடன் பதிவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

News July 26, 2024

ப்ளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

image

தமிழ்நாடு முழுவதும் ப்ளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார். மாணவர்கள் <>www.dge.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் தங்களது தேர்வு எண், பிறந்த தேதியை உள்ளிட்டு, தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம். மேலும், 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 30, 11ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 31 ஆகிய தேதிகளில் வெளியாகிறது.

News July 26, 2024

இன்று முதல் சிறப்புப் பேருந்துகள்

image

வார இறுதியையொட்டி இன்று முதல் ஜூலை 28 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 260 பேருந்துகளும், நாளை 290 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதேபோல், பெங்களூரு, திருப்பூர், கோவையில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்புப்பேருந்துகள் இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளது.

News July 26, 2024

மேலும் 42 மாணவர்கள் தமிழகம் வருகை

image

வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு தங்கி படிக்கும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். கடந்த 3 நாள்களில் 166 மாணவர்கள் தமிழகம் திரும்பிய நிலையில், நேற்று மேலும் 42 மாணவர்கள் கொல்கத்தாவில் இருந்து தமிழக அரசின் உதவியால் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளனர்.

News July 26, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூலை – 26 | ▶ஆடி – 10 ▶கிழமை: வெள்ளி ▶திதி: சஷ்டி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶சந்திராஷ்டமம்: மகம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்

News July 26, 2024

17,727 வேலைகள்.. விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு

image

CGLE-2024க்கான விண்ணப்ப காலக்கெடுவை பணியாளர் தேர்வு ஆணையம் நீட்டித்துள்ளது. மொத்தம் உள்ள 17,727 பணியிடங்களுக்கான ஜூலை 24ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், ஜூலை 27ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கட்டணம் செலுத்த இம்மாதம் 28ஆம் தேதி கடைசி நாள். பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>ssc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 26, 2024

காலை உணவில் கவனிக்க வேண்டியவை

image

➤எடை குறைப்புக்காக காலை உணவை தவிர்க்கக் கூடாது. ➤காலை உணவை தவிர்ப்பதால் கவனக்குறைவு ஏற்படும். ➤காலை உணவாக துரித உணவுகளை சாப்பிடக் கூடாது. ➤பழங்கள், பழச்சாறுகளை காலையில் சாப்பிடுவது சிறப்பு ➤ இனிப்பான உணவை தவிர்ப்பது நல்லது. ➤ ஆவியில் வேகவைத்த இட்லி, காலையில் பொருத்தமான உணவாக இருக்கும். ➤ அதேபோல, சிறுதானிய உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

News July 26, 2024

ஒருநாள் ஆசிரியரான குடியரசுத் தலைவர்

image

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 ஆண்டுகளை நிறைவு செய்து குடியரசுத் தலைவராக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்நிலையில், ஒடிசாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒருநாள் ஆசிரியராக மாறி 9ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். புவி வெப்பமயமாதல் குறித்து மாணவர்களுடன் உரையாடிய அவர், நீர் பாதுகாப்பின் அவசியத்தையும் அவர்களுக்கு வலியுறுத்தினார்.

News July 26, 2024

காமராஜர் பொன்மொழிகள்

image

▶நேரம் தவறாமல் இருப்பவர் என்றும் கதாநாயகன் தான். ▶நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காதவன் பிணத்திற்கு சமம். ▶பணம் இருந்தால் தான் மரியாதை என்றால், அந்த மரியாதையே தேவையில்லை. ▶ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது, குடும்பத்திற்கே கல்வி புகட்டுவதற்கு சமம். ▶சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும். ▶எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.

News July 26, 2024

Olympics 2024: இன்று முதல் தொடங்குகிறது

image

33ஆவது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் இன்று தொடங்குகிறது. இதில் மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவில் இருந்து 117 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இப்போட்டிகள் இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. ஒலிம்பிக்கில் இந்தியா அதிக அளவில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

error: Content is protected !!