news

News July 26, 2024

இந்தியா, இலங்கை டி20 தொடர் நாளை தொடக்கம்

image

இந்தியா, இலங்கை அணிகள் இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி நாளை இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிகளை நேரலையில் Sony குழும தொலைக்காட்சிகளில் காணலாம். Ott எனில், Sony Liv ottயில் கட்டணம் செலுத்தி பார்க்கலாம். ஆன்லைனில் இலவசமாக பார்க்க வேண்டும் என்றால் ஜியோ டிவி ஆப்பில், sony சேனல்களை வைத்து பார்க்க முடியும்.

News July 26, 2024

ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான கருவிதான் இசை: அறிவு

image

சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான கருத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் கருவியாகவே இசையை கருதுவதாக பாடகர் தெருக்குரல் அறிவு கூறியுள்ளார். மக்கள் இசைக் கலைஞர்களின் பாடல்களை கேட்டு வளர்ந்ததால் தனி இசை மீது தனக்கு பற்று ஏற்பட்டதாகக் கூறிய அவர், அந்த இசையையே நவீன வடிவில் ‘வள்ளியம்மா பேராண்டி’ என்ற 12 பாடல்கள் கொண்ட புதிய இசை ஆல்பமாக உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் .

News July 26, 2024

எச்.ஐ.வி தொற்றுக்கு புதிய மருந்து

image

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள பல்கலைக்கழக எச்.ஐ.வி மைய ஆராய்ச்சியாளர்கள், எச்.ஐ.வி தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்காக நடத்திய ஆய்வு 100% வெற்றி பெற்றதாகத் தெரியவந்துள்ளது. இந்த ஊசியை ஆண்டுக்கு 2 முறை செலுத்திக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் குணமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மேலும் பல கட்ட சோதனைக்குப் பின்னரே இது விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

News July 26, 2024

APPLY: சிபிஐ அமைப்பில் வழக்கறிஞர்களுக்கு வேலை

image

CBI சார்பில் மும்பை, கல்யாண், தானே, புனே, நாக்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாட வழக்கறிஞர்கள் 3 ஆண்டுகால அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஆக.12 கடைசி நாளாகும். இதற்கு விண்ணப்பிக்க எல்எல்பி பட்டம், 10 ஆண்டு காலத்துக்கு வழக்கு விசாரணைகளில் ஆஜராகிய அனுபவம் அவசியம்.

News July 26, 2024

5 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 5 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல், நாளை முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

News July 26, 2024

சகல செளபாக்கியங்களை தரும் ஆடி வெள்ளி வழிபாடு

image

‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி’ என்று ஆன்மிகம் சொல்கிறது. அதேபோல், எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு இணையாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி வெள்ளியன்று ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் அம்பாளைக் காண கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் இல்லம் தேடி வரும் என்பது ஐதீகம் ஆகும்.

News July 26, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இன்று முதல் தொடக்கம்
➤ கர்நாடக சட்டசபையில் நீட் ரத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
➤ தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
➤ பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தையில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு தகுதி
➤ தமிழ்நாடு, கர்நாடகா, அசாம் மாநிலங்களில் தீயணைப்புத்துறை விரிவாக்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

News July 26, 2024

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு

image

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி, பள்ளி உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் விரைந்து அனுமதி தர வேண்டும் என்றும், பள்ளி அளவில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த அறிக்கையை EMISஇல் புகைப்படத்துடன் பதிவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

News July 26, 2024

ப்ளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

image

தமிழ்நாடு முழுவதும் ப்ளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார். மாணவர்கள் <>www.dge.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் தங்களது தேர்வு எண், பிறந்த தேதியை உள்ளிட்டு, தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம். மேலும், 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 30, 11ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 31 ஆகிய தேதிகளில் வெளியாகிறது.

News July 26, 2024

இன்று முதல் சிறப்புப் பேருந்துகள்

image

வார இறுதியையொட்டி இன்று முதல் ஜூலை 28 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 260 பேருந்துகளும், நாளை 290 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதேபோல், பெங்களூரு, திருப்பூர், கோவையில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்புப்பேருந்துகள் இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளது.

error: Content is protected !!