news

News July 25, 2024

தமிழகத்தை உலுக்கிய படுகொலை: 3 பேர் கைது

image

விருதுநகர் அருகே சிவகாசியில் நடந்த ஆணவப்படுகொலை சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார்த்திக் பாண்டியை (24), அவரது காதல் மனைவியின் சகோதரர்கள் நேற்றிரவு படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்தவர்களை இன்று காலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களது திருமணம் முடிந்து 8 மாதங்கள் கடந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

News July 25, 2024

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மறைமுக பலன்கள்

image

முத்ரா திட்டத்தில் கடன் பெறுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அத்தொகை ₹50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழக மக்களுக்கு பலன் கிடைக்கும். கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முன்னிலையில் உள்ள நிலையில், கல்விக்கடன் ₹10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு பொருட்கள், ஆடைகள் மற்றும் தோல் பொருட்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகையால், தமிழகத்தில் அப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்பெறும்.

News July 25, 2024

போருக்கு அமெரிக்காவின் ஆதரவு தேவை: நெதன்யாகு

image

ஹமாஸுக்கு எதிரான போர் முழுமையான வெற்றி பெறும் வரை தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “ஹமாஸுடன் இணைந்து ஈரான் ஆதரவு குழுக்களை எதிர்த்துப் போராட அமெரிக்காவின் ஆதரவை தேவை. உங்கள் எதிரிகள், எங்கள் எதிரிகள். எங்களின் வெற்றி உங்கள் வெற்றி. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து செயல்பட்டால் தோற்கடிக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

News July 25, 2024

வதந்திகளுக்கு பதில் சொல்லக்கூடாது: கீர்த்தி சுரேஷ்

image

விமர்சனங்கள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், உண்மைக்கு விளக்கம் சொன்னால் தெளிவாகிடும்; வதந்திக்கு விளக்கம் சொன்னால் அதுவே உண்மையாகிடும். வாழ்க்கை & ஃபேமிலியைப் பற்றி தேவையில்லாமல் பரப்பப்படும் வதந்திகளுக்கு பதில் சொல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

News July 25, 2024

திமுக தனித்து போட்டியிட திட்டம்?

image

2026 சட்டசபை தேர்தலில் திமுக தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது. 2026ல் கூட்டணி ஆட்சி அமைக்கவும், அமைச்சரவையில் இடம் கேட்டும் காங்கிரஸ் குரலெழுப்பத் தொடங்கியுள்ளது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிக தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. இக்கோரிக்கைகளால், அதிருப்தியடைந்த திமுக தலைமை இம்முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

News July 25, 2024

விடுதலைப் புலிகள் வழக்கில் வைகோ மனுதாரராக சேர்ப்பு

image

விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்ய கோரிய வழக்கில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மனுதாரராக சேர்க்க டெல்லி தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முகாந்திரத்தை தீர்ப்பாயம் ஆராய்ந்து வரும் நிலையில், தடை விதிப்பதற்கான முகாந்திரம் இல்லையென அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

News July 25, 2024

அதிமுக 2ஆம் கட்ட ஆலோசனை கூட்டம்

image

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து அதிமுக 2ஆம் கட்ட ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில், இன்று தென்காசி, ஈரோடு தொகுதிகளுக்கான நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகிப்பார்கள். ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 2ஆம் கட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

News July 25, 2024

அமித்ஷா மீது வழக்கு தொடர்வேன்: மூத்த வழக்கறிஞர்

image

தமிழக ஆளுநர் R.N.ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவருக்கு மீண்டும் ஆளுநர் பதவி வழங்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி RTI சட்டத்தின் கீழ் மனு அனுப்பியுள்ளார். அதில், “அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, அவரை மீண்டும் அப்பதவியில் நியமித்தால், வழக்கு தொடர்வேன்” எனக் கூறியுள்ளார்.

News July 25, 2024

மொபைல் ரீசார்ஜ் விலை மீண்டும் அதிகரிக்குமா?

image

தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளில் பயன்படுத்தப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டு அசெம்பிளி (PCBA) மீதான இறக்குமதி வரியை 15% லிருந்து 20% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 80% பிசிபிஏக்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், டெலிகாம் ஆபரேட்டர்கள் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதுடன், வாடிக்கையாளர்களிடமும் அச்சுமையை பகிர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News July 25, 2024

ஒலிம்பிக்ஸில் இருந்து விலகிய ‘நம்பர் 1’ டென்னிஸ் வீரர்

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் டென்னிஸ் போட்டி, வரும் 27 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்க இருந்த நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், ‘நம்பர் 1’ டென்னிஸ் வீரருமான ஜானிக் சினெர் திடீரென விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பதிவில், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் துரதிர்ஷ்டவசமாக ஒலிம்பிக்ஸில் பங்கேற்க போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். <<-se>>#OLYMPICS2024<<>>

error: Content is protected !!