India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பட்ஜெட்டில் வெள்ளியின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், மூன்றாவது நாளாக இன்று வெள்ளி விலை மேலும் சரிவடைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ₹3 குறைந்து, ஒரு கிராம் ₹89க்கும், கிலோவுக்கு ₹3,000 குறைந்து ஒரு கிலோ ₹89,000க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் 3 நாள்களில் மட்டும் வெள்ளி விலை ₹7,000 வரை குறைந்துள்ளது.
‘நீ ஒரு பெண், உனக்கு எதுவும் தெரியாது’ என எம்.எல்.ஏ ரேகாதேவியைப் பார்த்து பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷிடம் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் வெறும் எதிர்க்கட்சிக்கு எதிரானவை அல்ல என்றும் ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்க மனப்பான்மையில் திளைத்துவரும் இந்திய சமூகத்தின் கோர முகத்தின் காட்சி எனவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை இன்று மாலை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திக்கிறார். காவிரி பிரச்னை குறித்து நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக அவர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். தமிழ்நாட்டுக்கு ஜூலை 31 வரை தினமும் ஒரு டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த அளவிலான நீரை திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி, தனியார் பொறியியல் கல்லூரிகள் மோசடி செய்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? என்று ஆளுநர் ரவி அறிக்கை கேட்டுள்ளார். அதே போல, மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விரிவான அறிக்கை சமர்ப்பிக்க, AICTE உத்தரவிட்டுள்ளது. 2022-23 கல்வியாண்டில் 211 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பதிவு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை மூன்றாவது நாளாக இன்றும் சரிவடைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹480 குறைந்து ஒரு சவரன் ₹51,440க்கும், கிராமுக்கு ₹60 குறைந்து ஒரு கிராம் ₹6,430க்கும் விற்பனையாகிறது. பட்ஜெட் அன்று காலை ஒரு சவரன் தங்கம் ₹54,480க்கு விற்பனையான நிலையில், 3 நாள்களில் ₹3,040 குறைந்து, நடுத்தர மக்களை ஆறுதல் அடைய செய்துள்ளது.
2024-25 பட்ஜெட்டில் பிஹார் & ஆந்திரா மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளதாக INDIA கூட்டணி கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த ‘பட்ஜெட் பாகுபாடு’ விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு எதிரான பிரசாரக் கருவியாக மாற வாய்ப்புள்ளது. மாநில சுயாட்சிப் பேசும் கட்சிகளும் தேர்தல் ஆயுதமாக இதனை கையாளலாம்.
கட்டட அனுமதி பெறுவதற்கான சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் தவறான தகவல்களை அளித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கட்டுமான பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள் என்றும், அதில் விதிமீறல் கண்டறியப்பட்டால் கட்டட உரிமையாளர்கள் அதனை சரிசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. விதிமீறல்களை சரி செய்யாவிடில் அவை அப்புறப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
குடியரசுத்தலைவராக பொறுப்பேற்று 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திரெளபதி முர்முவுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான அவரது X வலைதள பதிவில், குடியரசுத்தலைவராக முர்மு தேர்வானதால் பெண்ணுரிமையை வலிமையாக நிலைநாட்டிய நாடாக இந்தியா மிளிர்வதாகவும், சவால்களை சந்திக்கும் பெண்களுக்கு உதாரணமாக, ஊக்கமாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஒருங்கிணைப்புக் <<13681532>>குழு<<>> மாவட்ட வாரியாக பயணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அக்குழு, நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டு கட்சிக்குள் சீரமைப்புகளை செய்ய திட்டமிட்டுள்ளது. திமுகவில் உள்ள 22 அணிகளிடமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி, அமைப்பு ரீதியான மாவட்டங்களை அதிகரிக்கவும், செயல்படாத நிர்வாகிகளை மாற்றவும் அக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வார இறுதியையொட்டி ஜூலை 26 முதல் 28 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை தி.மலை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 260 பேருந்துகளும், ஜூலை 27ல் 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதேபோல், பெங்களூரு, திருப்பூர், கோவையில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.