India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15% யிலிருந்து 6%ஆக குறைக்கப்பட்டுள்ளதால் கடத்தல்காரர்களுக்கு நெருக்கடி ஏற்படுமென சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். வரி 15% இருந்தபோது கடத்தல் தங்கம் அதிகளவில் இருந்ததாகவும் அப்போது கிராமுக்கு ₹300 வரை கடத்தல்காரர்களுக்கு லாபம் கிடைத்ததாகவும் கூறிய அவர்கள் இப்போது அவர்களுக்கு வரும் லாபம் குறையும் என்பதால், அவர்கள் இனி அந்த ரிஸ்க் எடுக்க யோசிப்பார்கள் என்கின்றனர்.
நாட்டின் குடியரசுத் தலைவர் தொடங்கி ஊராட்சி கவுன்சிலர் வரையிலான பதவிகளில் பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக நாம் கூறிவருகிறோம். உண்மையில், இப்பதவிகளில் உள்ள பெண்களுக்கு சுதந்திரமும், அதனை செயல்படுத்தும் அதிகாரமும் இருக்கிறதா?. இல்லை என்பதே பதில். சமூக அழுத்தமும், ஆதிக்கமும் வீடு முதல் கட்சி நிர்வாகம் வரை இங்கே அனைத்து இடங்களிலும், மட்டங்களிலும் வியாபித்திருக்கிறது.
அரசியலுக்கு வரும் பெண்களை கேலி செய்வது, தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், ஒழுக்கம் குறித்தும் தரக்குறைவாக பேசுவது, பொறுப்பை பெயரளவில் கொடுத்துவிட்டு, நிர்வாகத்தை ஆண்களே மேற்கொள்வது, இதையெல்லாம் மீறி துணிந்து நின்றால் அச்சுறுத்துவதும், படுகொலை செய்வதும் தொடர்கிறது. டெல்லி, பிஹார், ஆந்திரா, தமிழ்நாடு என இந்த பாலின ஆதிக்க மனநோய்க்கு மொழி, இனம், மதம், எல்லை போன்ற வேறுபாடுகளே இல்லை.
இந்நிலை மாற வேண்டும். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த, வீட்டில் இருந்தே சீர்திருத்தங்கள் தொடங்கப்பட வேண்டும். மேடையில் மட்டும் பெண்ணுரிமை பேசாமல், (ஆண்களால்) அவர்களுக்கு நடைமுறையில் ஏற்படும் சிக்கல்கள், மனத்தடைகள், இடையூறுகளை நீக்க சமூகம் துணிய வேண்டும். ஜனநாயகத்தைக் காக்க அரசியலில் பெண்களின் பங்களிப்பை மட்டுமல்ல, உண்மையான பங்கேற்பையும் உயர்த்த ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இருப்புப்பாதை அமைத்த பிறகு ரயிலை இயக்கும்படி, ரயில்வே அமைச்சகத்தை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கிண்டல் செய்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ரயில்வே திட்டங்களின் முழு விவரங்கள் அடங்கிய பிங்க் புக் இன்னும் வெளியாகவில்லை என்றார். ஆனால், நேற்றே ரயில்வே அமைச்சர் தொடங்கி அனைத்து அதிகாரிகளும் பிரசாரத்தை தொடங்கி விட்டதாக கூறிய அவர், ஏன் இந்த பதற்றம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
‘தமிழ் புதல்வன்’ திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்காக ₹360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு, கல்லூரி முடிக்கும் வரை மாதம் ₹1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தோராயமாக சுமார் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, மதுரை, நெல்லை, தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பரவலை கட்டுக்குள் வைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், டெங்கு உயிரிழப்புகள் கட்டுக்குள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், காய்ச்சல் கண்டறியும் பணிகளை நல்வாழ்வுத்துறை, உள்ளாட்சித் துறை இணைந்து மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
கரூரில் ₹100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு முன்னதாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காவல் ஆய்வாளர் பிருத்விராஜ், பிரவீண் ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குதிரையேற்ற பந்தய நட்சத்திர வீராங்கனை சார்லோட் துஜார்டின் (39) ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார். 4 ஆண்டுக்கு முன்பு பயிற்சியின்போது, குதிரையை அவர் 24 முறை சாட்டையால் அடித்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இதைக் கண்டு கொதிப்படைந்த விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், அவரை குதிரையேற்ற விளையாட்டு சம்மேளனம் (FEI) இடைநீக்கம் செய்துள்ளது. <<-se>>#OLYMPICS<<>>
காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான காவல்துறையினர் மீது தனிநபர் வழக்கு தொடர முன் அனுமதி தேவையில்லை என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு எதிரான தனிநபர் வழக்குகளை ரத்து செய்ய கோரி ஏராளமான காவலர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் DSP உள்ளிட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் பணி நிலையில் உள்ள காவல் அதிகாரிகள் மீதான வழக்குகளுக்கு மட்டுமே முன் அனுமதி தேவை என நீதிபதி விளக்கியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.