India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கர்நாடக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் நாட்டையே உலுக்கி வரும் சூழ்நிலையிலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக & அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இருப்பினும், சட்டசபையில் காங்கிரஸுக்கு பலம் அதிகம் இருந்ததால் தீர்மானம் நிறைவேறியுள்ளது.
திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நிர்வாகிகள் பற்றி, காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் அஜோய் குமார் அறிக்கை கேட்டுள்ளார். தமிழக காங். நிர்வாகிகள் சிலர், கூட்டணியில் இருந்தால் கூனி குறுகி நிற்க வேண்டுமா?, ஆட்சியில் அதிகாரம், அமைச்சரவையில் இடம் தேவை என கருத்துகளை தெரிவித்ததால், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்விவகாரம் பூதாகரமான நிலையில், உரியவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த தீபு, 7ஆவது குற்றவாளியான உதயகுமாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருவரிடமும் விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில் இதுவரை 200 பேரிடம் விசாரணை நடந்துள்ள நிலையில், கைதான சயான், மனோஜ் உள்ளிட்ட 10 பேரின் செல்ஃபோன் தரவுகள் பெறப்பட்டுள்ளன.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லவில்லை என்றால் இனி எப்போதுமே அதற்கான வாய்ப்பு தனக்கு கிடைக்காதென இந்திய வில்வித்தை வீரர் தருண்தீப் ராய் (40) கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இதுவே தங்களுக்கான கடைசி வாய்ப்பு என நினைத்து விளையாட வேண்டுமென கூறிய அவர், இது தனது 4வது ஒலிம்பிக் போட்டி என்றார். அத்துடன், இந்த முறை பதக்கம் வெல்வேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். <<-se>>#OLYMPICS<<>>
அமெரிக்க பங்குச்சந்தை குறியீட்டெண் நாஸ்டாக் நேற்று ₹83 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்தது. இதனால், உலகின் டாப் 10 பணக்காரர்கள் ஒரே நாளில் ₹5.52 லட்சம் கோடி சொத்து மதிப்பை இழந்தனர். குறிப்பாக, டெஸ்லா பங்குகள் 12% சரிந்ததால், அதன் CEO எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ₹1.42 லட்சம் கோடி சரிந்து, ₹19.33 லட்சம் கோடியாக குறைந்தது. டெஸ்லா, ஆல்பாபெட் நிறுவனங்களின் வருவாய் முடிவுகள் சந்தை சரிவுக்கு வித்திட்டன.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் மீது கடந்த 13ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியாவிலுள்ள VVIP-களின் பாதுகாப்பை அதிகரிக்க அனைத்து மாநில காவல்துறை தலைமை இயக்குநர்கள், துணை ராணுவப்படையினருக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பொதுவெளியில் நடக்கும் பேரணி, பொதுக்கூட்டங்களின்போது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய பட்ஜெட்டை கண்டித்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. பட்ஜெட்டில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழகத்தை பாஜக வஞ்சித்துவிட்டதாகவும், வெள்ள பேரிடர் நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதியை கூட வழங்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், தமிழக முதல்வரின் கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு வங்கதேச அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது பேச்சு தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவதாக இந்திய தூதரகத்திடமும் முறையிட்டுள்ளது. அரசுப்பணிகளில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டங்களால், வங்கதேசத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லை மாநிலமான மே.வங்கம் தேவையான உதவிகள் செய்து அடைக்கலமளிக்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பேசியிருந்தார்.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் 8,326 பணியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கு வரும் 31ஆம் தேதிக்குள் ssc.gov.in இணையதளம் மூலமும், தபால் துறையில் உள்ள 44,228 பணியிடங்களுக்கு ஆக.5ஆம் தேதிக்குள் https://indiapostgdsonline.gov.in/ இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். SBI-யில் உள்ள 1,040 பணியிடங்களுக்கு ஆக.8க்குள் https://recruitment.bank.sbi/crpd-sco-2024-25-09/apply இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
<<13702987>>‘தமிழ் புதல்வன்’<<>> திட்டத்தின் கீழ் மாணவர்கள் மாதம் ₹1000 பெறுவதற்கான தகுதி விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, *அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களை தவிர்த்து, இதர மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. *தொலைதூர வழியில், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள், மற்ற மாநிலப் பள்ளிகளில் படித்தவர்கள் இத்திட்டத்தில் ஊக்கத்தொகை பெற முடியாது.
Sorry, no posts matched your criteria.