India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாட்ஸ் அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்களை பகிரும் (Reshare) வகையிலான புதிய அப்டேட்டை (ஆண்ட்ராய்டு 2.24.16.4) WABeta அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அம்சத்தில், உங்கள் தொடர்பு எண் வைத்துள்ள குறிப்பிட்ட நபர், உங்களது பெயரை அவரது ஸ்டேட்டஸில் குறிப்பிட்டால் போதும், அதை உங்களால் பகிர முடியுமாம். எனவே, நீங்கள் விரும்பும் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ அல்லது அனுப்பச் சொல்லி கேட்கவோ தேவை ஏற்பாடாது.
இளநிலை நீட் தேர்வின் திருத்தப்பட்ட இறுதி முடிவுகள் NTA தளத்தில் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இயற்பியல் பாடம் குறித்த கேள்விக்கு 2 சரியான விடைகள் வழங்கப்பட்ட விவகாரத்தில், 1 விடையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 720/720 பெற்ற 44 மாணவர்கள் தவறான விடையை தேர்ந்தெடுத்ததால், 4 மதிப்பெண்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தரவரிசை பட்டியல் மாறுமா என கேள்வி எழுந்துள்ளது.
பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக்ஸ் பிரம்மாண்ட திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்நகரம் AI உதவியுடன் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், G20 மாநாட்டில் பாதுகாப்பு பணியை மேற்கொண்ட CAPF-ஐ சேர்ந்த 10 வெடிகுண்டை கண்டுபிடிக்கும் திறன் கொண்ட மோப்ப நாய்களும், 17 பயிற்சியாளர்களும் அங்கு சிறப்பு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சில மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு மீது அறிவாலய தலைமை அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவர்களை மாற்ற தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், முதற்கட்டமாக 3 மாவட்டச் செயலாளர்களை மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் ஒருவர், ஆந்திராவை ஒட்டிய மாவட்டத்தைச் சேர்ந்தவர், இன்னொருவர் அல்வா மாவட்ட சீனியர், மற்றொருவர் டெல்டா மாவட்டப் புள்ளி எனக் கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மேலும் 4 பேரிடம் காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த கொலைக்கு பண உதவி செய்ததாக பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் தனது 2ஆவது மனைவியின் வீட்டில் பதுங்கியிருந்த அவர், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவரது தம்பி உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
LVB வங்கியின் ஈக்விட்டி பங்குகளை விரிவாக மதிப்பிட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நிதி நெருக்கடி காரணமாக 2020இல் சிங்கப்பூரின் DBS வங்கியுடன் LVB வங்கியை இணைக்கப்பட்டது. இதனை எதிர்த்து, அதன் வாடிக்கையாளர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதன் பங்கு & பாத்திரங்கள் தொடர்பான மதிப்பீட்டை அறிக்கையாக அளிக்க RBI-க்கு உத்தரவிட்டிருந்தது.
பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்
தன்னையும் தன் குடும்பத்தினரையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். மும்பை போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், தனது (பந்த்ரா) வீட்டின் வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக பிஷ்னோய் கும்பல் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததாகவும், ஏற்கெனவே பலமுறை பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் 7 முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகளில் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் கணித்துள்ளது. சென்னையில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய பணக்காரரான ஷாங் ஷென்ஷேன், 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இடத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளார். அவரது பாட்டில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனமான Nongfu Springஇன் சந்தை மதிப்பு நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 20% சரிந்துள்ளது. இதனால், அவரது சொத்து மதிப்பு 4.58 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் கொலின் ஹுவாங்கியின் சொத்து மதிப்பு 3.95 லட்சம் கோடியாக உள்ளது.
விவாகரத்துக்கு பிறகு நடாஷா போட்ட இன்ஸ்டா பதிவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா அன்பை பொழிந்துள்ளார். இந்தியாவை விட்டு வெளியேறி சொந்த நாடான செர்பியாவிற்கு தனது மகன் அகஸ்தியாவுடன் சென்ற அவர், அங்கு மகனுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். 4 வருட திருமண உறவுக்கு பின் கடந்த 18ஆம் தேதி ஹர்திக் – நடாஷா தம்பதி விவாகரத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.