news

News July 25, 2024

மீண்டும் தள்ளிப்போகிறது ‘புஷ்பா 2’?

image

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, 2ஆம் பாகம் ‘புஷ்பா தி ரைஸ்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படம் ஆக. 15ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த படக்குழு, VFX உள்ளிட்ட பணிகள் முடியாததால் ரிலீஸை டிச. 6க்கு ஒத்திவைத்தது. தற்போது ரீஷூட், இறுதிக்கட்ட பணிகளால் ரிலீஸ் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News July 25, 2024

ரிசர்வ் வங்கியில் பணி

image

மத்திய ரிசர்வ் வங்கியில் ( RBI) அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலியிடம்: 94. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இன்று முதல் ஆக.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி: இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். முதல் கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு www.rbi.org.inஇல் பார்க்கவும்.

News July 25, 2024

செந்தில் பாலாஜியின் கோரிக்கை நிராகரிப்பு

image

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உடல்நிலை பாதித்த நிலையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், வழக்கை உடனே விசாரிக்கவும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா கோரிக்கை விடுத்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

News July 25, 2024

மாற்றி பேசுகிறார் கம்பீர்: முன்னாள் வீரர்

image

கவுதம் கம்பீர் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதாக முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பையில் கோலியும், ஷர்மாவும் சரியாக ஆடாவிட்டால் தனது அணியில் இடம் பெறமாட்டார்கள் என கம்பீர் கூறியதாகவும், கோப்பையை வென்ற பின் இருவரும் சிறந்த வீரர்கள் என புகழ்ந்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், 2027 உலகக்கோப்பைக்கு தகுதியானவர்கள் என மாற்றி பேசுவதாகக் கூறியுள்ளார்.

News July 25, 2024

சரிவு பாதிப்பை ஏற்படுத்தாது: வல்லுநர்கள்

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு (₹83.72) இன்று சரிந்தது. இச்சரிவு இந்தியா பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசிய தலைமைப் பொருளாதார ஆலோசகர், டாலர்களில் கடன் வாங்கியிருந்தால் பணத்தின் மதிப்பு குறைவது பிரச்னையை ஏற்படுத்தியிருக்கும் என்றும் வெளிநாட்டுக் கடன் குறைவாகவே இருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறினார்.

News July 25, 2024

“உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தரக்கூடாது”

image

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கக் கூடாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், மூத்த அமைச்சர்களில் ஒருவருக்கு அப்பதவியை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீண்ட நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில், உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

News July 25, 2024

நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்துகள் நேரிடுவது ஏன்?

image

<<13696413>>நேபாளத்தில்<<>> கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு விமான விபத்துக்கள் (சுமார் 196 பேர் உயிரிழந்துள்ளனர்) நடந்தேறியுள்ளன. இதற்கு மலைப்பாங்கான நிலப்பரப்பு, கணிக்க முடியாத வானிலை & தளர்வான விதிமுறைகள் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் விமானங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில்லை எனவும் பராமரிப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News July 25, 2024

விமானக் கட்டண உயர்வு: தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

image

தனியார் விமானத்தில் பயணக் கட்டணங்கள் திடீர் திடீரென உயர்த்தப்படுவதாக மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், அவ்வாறு கட்டணங்களை திடீரென உயர்த்துவதை முறைப்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த, அத்துறையின் அமைச்சர் ராம் மோகன் நாயுடு, DGCAவில் உள்ள டிக்கெட் கட்டண கண்காணிப்பு பிரிவு மூலம் கட்டண உயர்வு கண்காணிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

News July 25, 2024

டெல்லியில் இருந்து நாடு முழுவதும் பறந்த உத்தரவு

image

மக்களவைத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் ஆகியோர் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் பின்னணியை விசாரித்ததில், நாடு முழுவதும் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து வெற்றி பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்களின் தேர்தல் பிரமாண பத்திரத்தை பாஜக தலைமை சரிபார்த்துள்ளதாம். அதில், தகவல்களை மறைத்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க மேலிடம் வழிகாட்டியதாகத் தெரிகிறது.

News July 25, 2024

உள்ளூர் கலைஞர்களை ஊக்கப்படுத்துங்கள்: ரயில்வே

image

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பாரம்பரிய கைத்தறி ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதை வாங்குவதன் மூலம் உள்ளூர் நெசவாளர்களை ஊக்கப்படுத்தலாம் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் 1,000க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இத்திட்டம் உள்ளூர் கைவினைஞர்கள், நெசவாளர்களின் வருமானத்தை அதிகரிக்க கொண்டு வரப்பட்டது.

error: Content is protected !!