India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய அணியின் சார்பில் 40க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அதில் 4 பேர், தமிழ் பெண்களாவர். அவர்களின் விவரம் இதோ:- 1.இளவேனில் வாலறிவன் – துப்பாக்கிச் சுடுதல் 2.நேத்ரா – பாய்மரப் படகு 3.சுபா வெங்கடேசன் – 4,000 மீ., தொடர் ஓட்டம் 4.வித்யா ராம்ராஜ் – 400 மீ., தொடர் ஓட்டம். பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்கவுள்ள வீராங்கனைகளை வாழ்த்துவோம். <<-se>>#OLYMPICS<<>>
முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் திட்டம் இல்லை என மத்திய அரசு, தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறில் அணை கட்டும் திட்டம் உள்ளதா என்ற கேரள எம்பியின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு அணை பாதுகாப்பாகவும், அணையின் உரிமையாளரான தமிழகம் அதனை நல்ல முறையில் பராமரித்து வருவதாகவும் கூறியுள்ளது. முல்லை பெரியாறு விவகாரத்தில், தமிழகத்தின் உரிமை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக பெண் பிரமுகர் அஞ்சலை மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கந்துவட்டி தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் புளியந்தோப்பு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும், சிறையில் உள்ள அஞ்சலையிடம் கந்துவட்டி புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் முகேஷ் அம்பானியின் நிறுவனம் ₹9,200 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்ப்ஸ் தகவலின் படி, கடந்த 22ஆம் தேதி ₹9.76 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் அம்பானி இருந்தார். கடந்த 23ஆம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது, பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்ததால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
AI உதவியுடன் மேம்பாலங்கள், குறுகிய சாலைகள், பெட்ரோல் பங்குகள் குறித்த தகவல்களை வழங்க உள்ளதாக கூகுள் மேப் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்தியாவின் 40 நகரங்களுக்கு இந்த சேவை வழங்கப்படும் என்றும், ஆண்ட்ராய்டு செயலியில் முதலில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. மேலும், EV நிறுவனங்களுடன் இணைந்து நாடு முழுவதும் 8,000 சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளது.
2024-25 பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்பதை மத்திய அரசு மறந்து விட்டதாகவும், தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், பிரதமர் என்பவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு கோரி, திருமங்கலத்தில் ஜூலை 30ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது. ஒரு சுங்கச்சாவடியை அகற்ற, ஒரு நகரமே கடையடைப்பு நடத்துவது, இதுவே முதல்முறை என, மக்களவையில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து இலங்கை அணியின் பந்துவீச்சாளர் நுவான் துஷாரா காயம் காரணமாக விலகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் காயம் காரணமாக விலகியிருந்தார். இந்நிலையில், 2 பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியுள்ளது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இன்று பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வாழ்த்து போஸ்டர் ஒற்றை வெளியிட்டுள்ளது. அதில் `‘ஒருவன் தான் என்று உச்சத்தை தொட முடியும் என நம்புகிறானோ அப்பொழுது ஒரு ஸ்டார் பிறக்கிறான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க, 4 நாள்கள் பயணமாக அமீரக வர்த்தக அமைச்சர் அப்துல்லா பின் தெளக் சென்னை வந்துள்ளார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதன் போது, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மற்றும் அரசு உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.