India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அம்மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏனைய நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலி பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, பல்வேறு புகார்கள் எழுந்ததால், திமுக மேயர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் 19.5 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாக SOFI அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் 79 கோடி (55.6%) மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை என்றும் அவர்களது ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 27.4% குழந்தைகள் இரண்டரை கிலோவுக்கு குறைவான எடையுடன் பிறப்பதாகவும் இவற்றை சீர் செய்ய வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது.
திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமர் என்று அமைச்சர் ரகுபதி கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். திமுகவினர் பகுத்தறிவு பகலவன் ராமசாமி வழிவந்தவர்கள் அல்ல; பகவான் ராமர் சாமியின் வழி வந்தவர்கள் என்பதை முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, திராவிட மாடல் ஆட்சியை ராமர் ஏற்கனவே நடத்தி காட்டியுள்ளார் என அமைச்சர் ரகுபதி பேசியிருந்தார்.
‘கங்குவா’ திரைப்படத்தின் கேரள உரிமம் ₹10 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முந்தைய சூர்யா படங்களை காட்டிலும் அதிகமாகும். ஆனால், ‘கங்குவா’ உரிமத்தை வாங்கிய அதே விநியோக நிறுவனம், ‘தி கோட்’ படத்தை ₹17 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் படம் வெளியாவதற்கு முன்பான வர்த்தகத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட தமிழ் திரைப்படமாக ‘தி கோட்’ உள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இதை மறுத்துள்ள வருமான வரித்துறை, ஜூலை 31ஆம் தேதி தான் கடைசி நாள் என்றும் விளக்கமளித்துள்ளது. மேலும், வருமான வரி தாக்கல் தொடர்பான விவரங்களை ஐ.டி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளுமாறும் சம்பளதாரர்களை அறிவுறுத்தியுள்ளது.
ஊழலின் தந்தையான காங்கிரஸ், நீட் தேர்வை வைத்து அரசை விமர்சிப்பதில் உள்நோக்கம் இருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், அற்ப அரசியலுக்காக காங்கிரஸ் நீட் தேர்வை அரசியல் ஆக்குவதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். நீட் மறுதேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் நேற்று கூறியிருந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார். ஜெரால்ட் கோட்ஸிக்கு மாற்றாக அறிமுக வீரர் மைக்கேல் பிரிட்டோரியஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸில் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி தொடங்குகிறது.
விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 3ஆவது பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு ‘தெறிக்குது’ என இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் நடிகர் விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தரமான முறையில் படமாக்கப்பட்டுள்ளதாக விஜய் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.
திருப்பூரில் பல பிஞ்சு உயிர்களை காப்பாற்றி உயிர்விட்ட வேன் ஓட்டுநர் மலையப்பன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர்களுடன் பள்ளி வேனை ஓட்டிவந்த மலையப்பன், நெஞ்சுவலி ஏற்பட்டவுடன் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டீயரிங்கில் மயங்கி விழுந்து உயிர்விட்டார். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார் என்றும் முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு எதிரான போக்கை மோடி அரசு மாற்றிக்கொள்ளவில்லை என்றால், மோடியை தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார். இந்திய வரைபடத்தில் தமிழகம், தெலுங்கானா என அனைத்து மாநிலங்களும் இருக்க வேண்டும் என்ற அவர், குறிப்பிட்ட மாநிலங்கள் மட்டும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது இந்தியாவாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.